ரயிலில் பயணம் செய்பவர்கள் பெரும்பாலும் தங்களுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனிலேயே முன்பதிவு செய்து விடுகின்றனர். முன்பெல்லாம் ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்றால் ரயில் நிலையத்திற்கு சென்று டிக்கெட் முன்பதிவுக்கான விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து அதன் பிறகு தான் நம்மால் டிக்கெட்டையே பதிவு செய்ய முடியும். ஆனால் நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சி காரணமாக ரயில் நிலையத்திற்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய தேவை இல்லை.
வீட்டில் இருந்தபடியே நம்முடைய செல்போன் வாயிலாகவே எளிமையாக நம்மால் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள முடிகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை உலக அளவில் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்கை கொண்டிருக்கும் ஒரு நாடு.

நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் இந்திய ரயில்வே பயன்படுத்தி ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயில் பயணங்களுக்கான டிக்கெட் கட்டணம் குறைவு என்பதால் சாதாரண மக்கள் அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய ஒரு பொது போக்குவரத்தாகவும் ரயில்கள் இருக்கின்றன.
தற்போது நாம் ரயில் டிக்கெட்டினை ஐஆர்சிடிசி வலைத்தளம் மற்றும் மொபைல் செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ள முடியும். ஆன்லைனில் டிக்கெட் வாங்குவதற்கும் கவுண்டர்களில் சென்று டிக்கெட் வாங்குவதற்கும் நிறைய விலை வித்தியாசம் இருக்கிறது. நாம் நேரடியாக சென்று டிக்கெட் வாங்குவதை விட ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக ரயில் டிக்கெட் வாங்கும்போது சற்று அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது.
இந்த நிலையில் மாநிலங்களவையில் ரயில் டிக்கெட் கட்டணம் குறித்து எம்பி சஞ்சய் ராவத் எழுப்பிய கேள்விக்கு ரயில்வே துறை அமைச்சர் பதிலளித்துள்ளார். அதில் நேரடியாக டிக்கெட் வாங்குபவர்களை விட ஐஆர்சிடிசி வழியாக ஆன்லைனில் டிக்கெட் வாங்குவதற்கு பயணிகள் அதிக கட்டணம் செலுத்துகின்றார் இந்த விலை வேறுபாட்டிற்கு பின்னால் என்ன காரணம் என சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதில் அளித்துள்ள ரயில்வே துறை அமைச்சர் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு வசதியை வழங்குவதற்கு கன்வீனியன்ஸ் கட்டணம் மற்றும் பரிவர்த்தனை கட்டணம் என இரண்டு கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன. இதுதான் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது டிக்கெட் விலை சற்றே அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கிறது என கூறியுள்ளார் . ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு வசதி இருப்பதால் மக்கள் ரயில் நிலையங்களுக்கு சென்று கவுண்டர்களில் நீண்ட நேரத்தை செலவிட வேண்டிய அவசியம் இல்லை.
இதனால் பயணிகளின் நேரமும் போக்குவரத்து செலவும் மிச்சமாகிறது. அதேவேளையில் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும் வசதிகளை வழங்குவதற்கு ஐஆர்சிடிசி சில செலவை செய்ய வேண்டி இருக்கிறது. டிஜிட்டல் ரீதியிலான அந்த கட்டமைப்பை பராமரிப்பதற்கான செலவு ஆகியவற்றை ஈடு செய்வதற்காக கன்வீனியன்ஸ் கட்டணம் என்பதை வசூல் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது என கூறினார்.
தற்போது முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை ஆன்லைனில் தான் முன்பதிவு செய்யப்படுகின்றன எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

13 ஆண்டுகளாக வேலை பார்த்தவரை ஒரே நொடியில் தூக்கி எறிந்த ஐடி நிறுவனம்: கண்ணீரில் சென்னை டெக்கி

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!



Click it and Unblock the Notifications