TATA Motors JLR: ஸ்ரீபெரும்புதூர், ஓசூர்-க்கு அத்தப்படியாக மாநிலத்தின் முக்கிய உற்பத்தி நகரமாக மாறும் அனைத்து விதமான கட்டமைப்புகளும் தன்னுள் கொண்டுள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாபெரும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இது மற்ற முதலீட்டுத் திட்டத்தைப் போல் 10ல் ஒன்று இல்லை. இந்தியாவின் உற்பத்தித் துறை வரலாற்றை மாற்றப்போகும் முக்கியமான திட்டமாகும்.
இந்தியாவில் பல வெளிநாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இருந்தாலும், அனைத்தும் உதிரிப்பாகங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து, இந்திய மண்ணில் அசம்பிள் செய்யப்படுபவை தான். இதில் ஜாகுவார் லேண்ட்ரோவர் முதல் BMW, பென்ஸ் வரையில் இதே பார்மெட்டில் தான் இயங்குகிறது.

இந்த நிலையில், பிரீமியம் கார்களை முதல் முறையாக இந்தியாவில் முழுமையாக உற்பத்தி செய்யும் முயற்சியை டாடா மோட்டார்ஸ் கையில் எடுத்துள்ளது. இதற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜாகுவார்-லேண்ட் ரோவர் உற்பத்தி ஆலையை அமைக்கும் இடம் தான் ராணிப்பேட்டை. இந்த ஆலையின் அடிக்கல் நாட்டும் விழா செப்டம்பர் மாத இறுதியில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசுடன் இணைந்து, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் அருகே 400 ஏக்கர் நிலத்தில் இந்த உற்பத்தி ஆலையை அமைக்க தேர்வு செய்து மார்ச் மாதம் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களுக்கு அருகில் அமைந்துள்ள பனப்பாக்கம், டாடா மோட்டார்ஸ் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ஏற்றுமதிக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.
ஜாகுவார்-லேண்ட் ரோவர் நிறுவனம் தற்போது சொந்தமாகத் தனது இங்கிலாந்து மற்றும் பிற தொழிற்சாலையில் முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் எலக்ட்ரிக் கார்களை மட்டும் உற்பத்தி செய்கிறது. ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள ஆலையில், ஹைப்ரிட் கார்கள் முதல் அனைத்து ஜாகுவார்-லேண்ட் ரோவர் கார்களையும் உற்பத்தி செய்து வருகிறது.
தற்போது, ஜாகுவார்-லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புனே ஆலையில் ரேஞ்ச் ரோவர் வேலார், ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், எவோக், ஜாகுவார் எஃப்-பேஸ் மற்றும் லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் ஆகியவற்றின் உதிரி பாகங்களை இறக்குமதி செய்யப்பட்டு அசெம்பிள் செய்யப்படுகிறது. இதனால் முதல் முறையாக இந்தியாவில் அதுவும், தமிழ்நாட்டில் வெளிநாட்டின் ஆடம்பர கார்கள் தயாரிக்கும் வரலாறு துவங்குகிறது. இதன் வெற்றி பல வெளிநாட்டு பிராண்டுகளை தமிழ் மண்ணுக்கு அழைத்து வரலாம்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டாடா மோட்டார்ஸ் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜாகுவார் லேண்ட் ரோவர் தொழிற்சாலையின் அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொள்ள உள்ளார். செப்டம்பர் 28ஆம் தேதி அடிக்கல் நாட்டும் விழா நடக்க உள்ளது.
செப்டம்பர் 28ஆம் தேதி மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டையில் 9,000 கோடி ரூபாய் மதிப்பிலான டாடா-ஜாகுவார்-லேண்ட் ரோவர் உற்பத்தி ஆலையை அமைக்கவும், 400 கோடி ரூபாய் மதிப்பிலான தோல் பூங்காவை அமைக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில். இந்த இரண்டு திட்டங்களும் 25,000 முதல் 30,000 வரை புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
பனப்பாக்கம் 1,200 ஏக்கர் சிப்காட் நிலத்தில் டாடா-ஜாகுவார்-லேண்ட் ரோவர் உற்பத்தி ஆலை 470 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட உள்ளது. தற்போது அடிப்படை உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த உற்பத்தி ஆலை, இந்தியாவில் அமைக்கப்பட உள்ள ஐந்து மெகா தொழில்துறை வழித்தடங்களில் ஒன்றான 18,000 கோடி ரூபாய் மதிப்பிலான சென்னை-பெங்களூரு தொழில்துறை வழித்தடத்தில் முக்கிய இணைப்பாக சேர்ந்துள்ளது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications