டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவின் மறைவு இந்திய தொழில் உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் உருவாக்கிய பல திட்டங்களில் நானோ கார் மிக முக்கியமான ஒன்று. இந்த கார் எப்படி உருவானது தெரியுமா..? எதற்காக உருவாக்கப்பட்டது தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.
இந்தியாவில் கார் என்பது இன்னும் பல குடும்பங்களுக்கு ஒரு கனவாகவே இருக்கிறது. இந்த கனவை நனவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ரத்தன் டாடா நானோ காரை உருவாக்கினார். ஆனால் இந்த எண்ணம் உருவாக ஒரு சம்பவம் முக்கியமானதாக இருந்தது.

2008-ம் ஆண்டு அறிமுகமான நானோ கார், மிகவும் குறைந்த விலையில் அறிமுகமாகி உலகையே வியப்பில் ஆழ்த்தியது. இந்தியாவில் ஒரு லட்சம் ரூபாய்க்குள் ஒரு கார் என்பது அப்போது ஒரு புரட்சிகரமான விஷயமாக இருந்தது.
ரத்தன் டாடா, இந்தியாவில் பல குடும்பங்கள் இரு சக்கர வாகனங்களில் பயணிப்பதைக் கண்டு மனம் வருந்தினார். குறிப்பாக தான் மும்பையில் இருந்து வெளியூருக்கு காரில் பயணித்துக்கொண்டு இருந்த போது ஒரு குடும்பம் பைக்கில் பயணித்துள்ளது. இதில் குழந்தைகள் பெரியவர்களின் இடுப்பில் அமர்ந்து சுமார் 4 பேர் பைக்கில் பயணிப்பது அவரை மிகவும் பாதித்தது. இதுவே நானோ கார் உருவாகக் காரணமாக அமைந்தது என்று அவரை தனது இன்ஸ்டா பதிவில் தெரிவித்துள்ளார்.
நானோ கார், பாதுகாப்பான மற்றும் மலிவான பயணத்தை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டது. இது ஒரு சிறிய கார் என்றாலும், இக்கார் ஒரு குடும்ப பைக்கை விட இந்த காரில் பல மடங்கு பாதுகாப்பாகப் பயணிக்க முடியும்.
ரத்தன் டாடா, நானோ காரை உருவாக்கியது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, "நான் ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சரில் படித்தபோது, இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் மக்களைப் பார்த்து மிகவும் வருத்தப்பட்டேன். அவர்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வது என்று யோசித்தேன். இதிலிருந்துதான் நானோ கார் உருவானது."
நானோ கார், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் பலரின் கவனத்தை ஈர்த்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் நானோ காரின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. ரத்தன் டாடாவின் மறைவு இந்திய தொழில் உலகிற்கு மட்டுமல்லாமல், நாட்டு மக்களுக்கும் பேரிழப்பு என்பது நேனோ காரில் போல் பல விஷயங்கள் உள்ளது.


Click it and Unblock the Notifications