மும்பை: 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி இந்திய வரலாற்றில் மறக்க முடியாத ஒரு தினம். பாகிஸ்தானை சேர்ந்த லக்சர் இ தொய்பா பயங்கரவாதிகள் அரபிக்கடல் வழியாக படகு மூலம் மும்பையில் நுழைந்து மிகப்பெரிய தாக்குதலை நிகழ்த்தினர்.
பயங்கரவாதிகள் மும்பையின் புகழ்பெற்ற டாடா குழுமத்திற்கு சொந்தமான தாஜ் ஹோட்டலுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்தனர். இதில் பல்வேறு வெளிநாட்டவர்களும் அடங்குவர்.

மொத்தமாக இந்த 26/ 11 தாக்குதலின் போது 166 பேர் உயிரிழந்தனர். இதில் 33 பேர் தாஜ் ஹோட்டலை சேர்ந்த ஊழியர்கள். அதுமட்டுமின்றி ஊழியர்கள், ஹோட்டலில் தங்கி இருந்தவர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பயங்கரவாதிகள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்து விட்டார்கள் என்ற தகவல் கிடைத்த உடனே ரத்தன் டாடா தாஜ் ஹோட்டலுக்கு விரைந்தார்.
அப்போது அவருக்கு 70 வயது , கிட்டத்தட்ட மூன்று நாட்கள் அவர் தாஜ் ஹோட்டல் வாசலிலேயே இருந்து பாதுகாப்பு படையினர் உள்ளே நுழைந்து பயங்கரவாதிகளை பிடிப்பதற்கும், ஹோட்டலுக்குள் சிக்கி இருந்தவர்களை பத்திரமாக மீட்கும் பணிகளையும் முழுமையாக உடனிருந்து கவனித்து வந்தார். இதனை தாஜ் ஹோட்டல் ஊழியர்களும் அந்த பகுதியை சேர்ந்த பாதுகாப்பு படையினரும் இன்னமும் கூட நினைவு கூறுகிறார்கள். இந்த தாக்குதலில் 100 ஆண்டு பாரம்பரியம் கொண்ட தாஜ் ஹோட்டல் மிகப்பெரிய அளவில் சேதம் அடைந்தத.
இதன் பிறகு தாஜ் ஹோட்டல் மீண்டும் திறக்கப்படாது என்றே பலரும் கூறினர். ஆனால் ரத்தன் டாடா அதனை பொய் என மாற்றி காட்டினார். தாக்குதலில் கொல்லப்பட்ட ஊழியர்களின் குடும்பங்களுக்கு வாழ்நாள் சம்பளத்தை இழப்பீடாக வழங்கினார். காயமடைந்த ஊழியர்களுக்கு அவர்கள் சிகிச்சை பெறுவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் ரத்தன் டாடா வழங்கினார்.
அது மட்டும் இன்றி ஹோட்டலில் தங்கி இருந்து காயமடைந்த விருந்தினர்களுக்கு தேவையான உதவிகளையும் ரத்தன் டாடா வழங்கினார். தாஜ் ஹோட்டலை சுற்றி இருந்த சிறு சிறு வியாபாரிகள் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உதவிகளையும் டாடா குழுமம் வழங்கியது.
தாக்குதல் நடந்து முடிந்த 21 நாட்களுக்குள்ளேயே தாஜ் ஹோட்டலை பழையபடி திறந்தார். ஹோட்டல் சீரமைப்பு பணிகளை தானே நேரடியாக நின்று மேற்கொண்டார். அதேபோல எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் நிகழாத வண்ணம் ஹோட்டலில் தேவையான அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் அவர் கொண்டு வந்தார். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கப்பட்டது தாஜ் பொது சேவை நல அறக்கட்டளை ஆகும். மேலும் தாக்குதல் நடந்த ஒரு வருடம் கழித்து 2009 ஆம் ஆண்டில் உயிரிழந்த ஊழியர்களின் ஊழியர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நினைவுச் சின்னத்தையும் அவர் திறந்து வைத்தார்.
2020 ஆம் ஆண்டு ரத்தன் டாடா இந்த தாக்குதல் தினத்தன்று ஒரு பதிவினை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ”12 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த இந்த தாக்குதலை நம்மால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. ஆனால் இந்த தினம் மற்றொன்றை நமக்கு நினைவுபடுத்துகிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து வித்தியாசங்களையும் மறந்து மக்கள் ஒன்று கூடினர்” என்பதை அவர் தன்னுடைய பதிவில் சுட்டிக்காட்டி இருந்தார். நம் அனைவரிடம் இருந்த அந்த ஒற்றுமை தொடரும் என நான் நம்புகிறேன் என ரத்தன் டாடா பதிவு செய்திருந்தார்.
அண்மையில் ரத்தன் டாடா காலமானதை அடுத்து தாஜ் ஹோட்டல் ஊழியர்கள், இக்கட்டான தருணத்தில் அவர் எப்படி அனைவருக்கும் பக்கபலமாக இருந்தார் என்பதை நினைவு கூர்ந்தனர்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications