சென்னை: குடும்பத்திற்காக ஓயாமல் உழைக்கும் பெண்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆண்டுக்கு 12,000 ரூபாய் என்ற அளவில் மாதம் தோறும் 1000 ரூபாயை தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் தமிழ்நாடு அரசு வரவு வைத்து வருகிறது.
மகளிர் உரிமை தொகையை பெறுவதற்கு முக்கிய ஆவணமாக ரேஷன் அட்டை தான் பயன்படுத்தப்படுகிறது. ரேஷன் அட்டை கொண்டு தான் ஒரு குடும்ப தலைவி என்பவர் வரையறை செய்யபப்ட்டு அவர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியானவரா இல்லையா என்பதே முடிவெடுக்கப்படுகிறது. விடுபட்ட பெண்கள் ஜூலை 15 முதல் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

மகளிர் உரிமை தொகையை திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் ஆனால் ரேஷன் அட்டை இல்லை என்பவர்கள் இன்னும் 15 நாட்களுக்குள் ரேஷன் அட்டையை விண்ணப்பம் செய்து பெற்றுக் கொண்டால் மட்டுமே மகளிர் தொகைக்கு விண்ணப்பம் செய்து மாதந்தோறும் ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொள்ள முடியும். அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ரேஷன் கார்டுகள் முக்கியமான ஒரு ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது.
ரேஷன் அட்டை வாயிலாக தான் ஒரு குடும்பத்தின் வருமானம் எவ்வளவு, அந்த குடும்பம் வறுமையின் கீழ் இருக்கிறதா அரசின் நலத்திட்டங்கள் பெற அந்த குடும்பத்தில் இருப்பவர்கள் தகுதி பெற்று இருக்கிறார்களா என்பன உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்கப்படுகின்றன . எனவே அரசின் நல திட்டங்களை பெற விரும்புபவர்கள், மானிய விலையில் ரேஷனில் உணவுப் பொருட்களை பெற விரும்புபவர்கள் கட்டாயம் ரேஷன் அட்டை வாங்கி வைத்திருக்க வேண்டும் .
தமிழ்நாடு முழுவதும் தற்போது 2 கோடிக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் செயல்பாட்டில் இருக்கின்றன. இந்த சூழலில் அரசு மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் ஜூலை 15 முதல் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிப்பு வெளியிட்டு இருப்பதால் புதிதாக திருமணமானவர்கள் மற்றும் ரேஷன் அட்டை பெறாமல் இருந்த பலரும் தற்போது புதிதாக ரேஷன் அட்டை பெறுவதற்கு விண்ணப்பம் செய்து வருகின்றனர் .
இதற்கிடையே தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் புதிதாக ரேஷன் கார்டுக்காக விண்ணப்பம் செய்பவர்களுக்கு 15 நாட்களுக்குள் ரேஷன் அட்டை வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார் . இந்த நிலையில் தமிழகத்தில் 15 நாட்களுக்குள் ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் இதுவரை 20 லட்சம் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பேசிய அமைச்சர் சக்கரபாணி தற்போது வரை உணவு துறையின் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களுக்குள் 20 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டிருக்கின்றன என தெரிவித்தார் .
மகளிர் தொகையை விண்ணப்பத்திற்கு இன்னும் 15 நாட்களே இருப்பதால் இதுவரை குடும்ப அட்டை பெறாதவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து குடும்ப அட்டை பெற்றுக் கொள்வது நல்லது. அரசும் இதனை கருத்தில் கொண்டு ரேஷன் கார்டுக்கான விண்ணப்பங்களை விரைவாக நிறைவேற்ற முயற்சி செய்வதாகவே தெரிகிறது. எனவே மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வேண்டும் அதற்கான தகுதி இருக்கிறது ஆனால் ரேஷன் அட்டை இல்லை என்பவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து ரேஷன் அட்டை பெற்று கொள்வது சிறந்தது.


Click it and Unblock the Notifications