இந்தியாவில் ரூ.5 காயின்களின் புழக்கம் கணிசமாக குறைந்து இருப்பதை நம்மில் பலரும் கவனித்து இருப்போம். பழைய காயின்கள் கப்ரோ-நிக்கல் உலோகத்தால் வட்ட வடிவம் கொண்ட காயின்கள் 9.00 கிராம் எடை கொண்டுள்ளது.
உங்களின் பர்சில் இருக்கும் புதிய ரூ.5 காயினை பாருங்கள். அது பழைய ரூ.5 காயினை விட குறைந்த எடை கொண்டிருப்பதை கவனிக்கலாம். மேலும் புதிய காயின்கள் மெல்லியதாக இருக்கும்.
ரூ.5 காயின் தோற்றம் மற்றும் புழக்கத்தில் ஏன் இந்த திடீர் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது?
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி பழைய ரூ.5 காயின்களை நிறுத்தியதற்கான காரணம் இவை சட்டவிரோதமாக வங்கதேசத்திற்கு கடத்தப்படுவதே ஆகும். பழைய ரூ.5 காயின்கள் நிலையான மெட்டல்களால் உருவாக்கப்பட்டு இருக்கின்றன, இதுமட்டும் அல்லாமல் உலோகத்தின் அளவும் அதிகளவில் உள்ளன. இதனால் கடத்தல்காரர்கள் இவற்றை வங்கதேசத்திற்கு ஏற்றுமதி செய்து வந்தனர். இதன் காரணமாக இந்த காயின்களின் புழக்கம் கணிசமாக குறைந்தது.
வங்கதேசத்திற்கு ஏற்றுமதி
வங்கதேசத்தில் இந்த காயின்கள் உறுக்கப்பட்டு, ரேசர் பிளேடு வடிவத்திற்கு மாற்றப்படுவதாகவும், பழைய 5 ரூபாயின் ஒரு நாணயத்தை கொண்டு அதிகபட்சம் ஆறு பிளேடுகளை உருவாக்க முடியும் என கூறப்படுகிறது. இந்த ஒரு பிளேட் ரூ.2 கொடுத்து வாங்கப்படுகிறது. இந்த விஷயம் அரசு கவனத்திற்கு வந்ததும், காயினின் தோற்றம் மற்றும் மெட்டல் அளவுகள் மாற்றப்பட்டுவிட்டது.
ரூ.5 காயின்
ரிசர்வ் வங்கி ரூ.5 காயின்களை அதன் முந்தைய வடிவத்தில் இருந்து மெல்லியதாக மாற்றிவிட்டது. இதோடு காயின் உருவாக்க பயன்படுத்தப்பட்ட மெட்டல் உடன் சந்தையில் கிடைக்கும் குறைந்த விலை பொருட்களை இணைத்து விட்டது. இதன் காரணமாக ரூ.5 காயின்களை ஏற்றுமதி செய்தாலும் இவற்றை கொண்டு ரேசர் பிளேடுகளை செய்ய முடியாது.
1992 முதல் 5 ரூபாய் நாணயம்
இந்தியாவில் 1992 முதல் 5 ரூபாய் நாணயம் அச்சடித்து பயன்பாட்டுக்கு வந்தது. 1992 முதல் 2006 வரையில் Cupro-Nickel உலோகத்தில் 9 கிராம் எடை கொண்ட 5 ரூபாய் நாணயம் தயாரிக்கப்பட்டது.
பிற உலோகம்
2007-2009 காலக்கட்டத்தில் இந்த 5 ரூபாய் நாணயத்தை Ferritic stainless steel உலோகத்தில் தயாரிக்கப்பட்டது, 2009-2011 காலக்கட்டத்தில் Brass உலோகத்தில் தயாரிக்கப்பட்டது, 2011 முதல் நிக்கல் Nickel-Brass உலோகத்தில் 6 கிராம் எடை உடன் தயாரிக்கப்பட்டது.
2019ல் சில 5 ரூபாய் நாணயத்தில் சில மாற்றங்கள் உடன் Nickel-Brass உலோகத்தில் 6.74 கிராம் எடை உடன் தயாரிக்கப்பட்டு புழக்கத்தில் வந்தது.
சர்ஃபேஸ் மற்றும் மெட்டல் மதிப்பு
காயினின் சர்ஃபேஸ் மற்றும் மெட்டல் மதிப்பு வேறுபடும். காயினின் சர்ஃபேஸ் மதிப்பு அதன் மதிப்பை நிர்ணயம் செய்கிறது. உதாரணத்திற்கு ரூ.5 காயினின் சர்ஃபேஸ் மதிப்பு 5 ஆகும். மற்றொரு புறம் இந்த காயினின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மெட்டல் அதன் மெட்டல மதிப்பை நிர்ணயம் செய்கிறது. அந்த வகையில் புதிய 5 ரூபாய் காயின் உற்பத்தி மதிப்பு 3.69 ரூபாய்.
உலோகம்
உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மெட்டலின் சந்தை மதிப்பு அதன் மெட்டல் மதிப்புக்கு ஏற்ப மாறும். அந்த வகையில் பழைய ரூ.5 காயினின் மெட்டல் மதிப்பு 5 ரூபாயை விடவும் அதிக சர்ஃபேஸ் மதிப்பை கொண்டு உள்ளது. இதன் காரணமாகவே அது உருக்கப்பட்டது. மெட்டல் மதிப்பு காரணமாக கடத்தல்காரர்கள் லாபம் ஈட்டி வந்தனர்.


Click it and Unblock the Notifications