மும்பை: இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக அனுபவம் வாய்ந்த பொது நிர்வாகி சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய ஆளுநர் சக்திகாந்த தாஸின் பதவிக் காலம் முடிவடைவதால் இந்த மாற்றம் நிகழ்கிறது.
2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உர்ஜித் படேல் திடீரென பதவி விலகியதைத் தொடர்ந்து, சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் 25 வது ஆளுநராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவரது பதவிக் காலம் முடிவடைவதால், புதிய தலைவராக சஞ்சய் மல்ஹோத்ரா பொறுப்பேற்கிறார்.

சஞ்சய் மல்ஹோத்ரா, 1990 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி. ராஜஸ்தான் கேடரைச் சேர்ந்த இவர், பல்வேறு துறைகளில் பணியாற்றி, அரசின் முக்கிய முடிவு எடுக்கும் பதவிகளை வகித்துள்ளார். குறிப்பாக, நிதி, வரி, மின்சாரம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுரங்கத் துறைகளில் அவரது அனுபவம் குறிப்பிடத்தக்கது. சரி விஷயத்திற்கு வருவோம்.
இந்தியாவில் பணவீக்கம் உயர்வு மற்றும் ஜிடிபி சரிவு ஆகிய இரண்டு பொருளாதார குறியீடுகளுக்கு மத்தியில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 6.5 சதவீதமாக வைத்து இருக்கிறது.
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஏழு காலண்டுகளில் இல்லாத அளவாக 5.4% என சரிவை கண்டுள்ளது. இது பொருளாதார ரீதியாக ஒரு அதிர்ச்சியான தகவலாக பார்க்கப்படுகிறது. அது மட்டும் இன்றி உணவுப் பொருட்களின் விலையும் எதிர்பார்த்ததைவிட அதிகமாகிக் கொண்டே போகிறது. இப்படி பணவீக்கம் உயர்வு இருக்கும்போது ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
தற்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அதில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. கடைசியாக 2023 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தான் ரெப்போ விகிதங்களை 6.5% உயர்த்தப்பட்டது. அதன் பிறகு வட்டி விகிதத்தில் என்ற மாற்றமும் இல்லை. தற்போது ரிசர்வ் வங்கி இந்தியாவில் பொருட்களின் விலையை சீராக வைத்திருக்கவும் பணவீக்க இலக்கினை எட்டவும் இப்படி ஒரு முடிவினை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி குறைந்த இருக்கக்கூடிய அதே வேளையில் உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் தான் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட நிதிக் கொள்கை குழுவின் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில் ரெப்போ வட்டி விகிதத்தை தொடர்ந்து 6.5% என்ற நிலையிலேயே வைத்திருக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இதற்கு 4-2 என்ற அளவில் ஆதரவு கிடைத்த கிடைத்தது.
ரெப்போ வட்டி விகிதம் மாற்றப்படவில்லை என்றாலும் வேறு சில பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகள் பராமரிக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதம் 4.50 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி குறித்த கணிப்பையும் 7.20 சதவீதத்திலிருந்து 6.60 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியான பணவீக்க கணிப்பும் 4.5 சதவீதத்திலிருந்து 4.8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்திருந்தாலும் நடப்பு காலாண்டு மற்றும் அடுத்த காலாண்டில் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் செல்லும் என சக்தி காந்ததாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ரெப்போ விகிதம் குறைக்கப்படாத நிலையில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவே வங்கிகள் பராமரிக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் வங்கிகளிடம் இருக்கும் கையிருப்பு 1.16 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும். எனவே அவை எளிதாக கடன்களை வழங்க முடியும்.
இரண்டாவது காலாண்டில் தொழில்துறையின் வளர்ச்சி மந்த நிலை அடைந்தது, இதனால் உற்பத்தி துறை மற்றும்ச் சுரங்க தொழில்கள் பாதிக்கப்பட்டன, ஆனால் நடப்பு காலாண்டிலும் அடுத்த காலாண்டிலும் இவை வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நம்பிக்கையின் பேரில் தான் ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லாமல் அப்படியே வைக்கப்பட்டுள்ளது. எனவே நான்காவது காலாண்டுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றங்களை கொண்டு வரலாமா வேண்டாமா என்ற முடிவினை ரிசர்வ் வங்கி எடுக்கும் என கூறப்படுகிறது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications