தங்கத்தை வைத்து அதிக கடன் வாங்கும் மக்கள்.. முறைகேடுகள் நடப்பதாக ரிசர்வ் வங்கி புலம்பல்..!

மும்பை: இந்தியாவில் தங்கத்தை அடகு வைத்த கடன் வாங்கும் போது போக்கு அதிகரித்து வரும் நிலையில் இது தொடர்பாக நடைபெறும் முறைகேடுகள் குறித்து ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்துள்ளது.

பொதுவாகவே இந்தியர்கள் ஒரு அவசர தேவை என்றால் உடனடியாக வீட்டில் இருக்கும் தங்கத்தை அடகு வைத்து அதனை பணமாக்கிக் கொள்வார்கள். தற்போது வங்கி வங்கிகள் மட்டும் இல்லாமல் வங்கி சாராத நிதி நிறுவனங்களும், ஸ்மால் பைனான்ஸ் நிறுவனங்களும் தங்க நகைகளை அடமானமாக பெற்றுக் கொண்டு கடன்களை வழங்குகின்றன. ஆனால் இதில் பல முறைகேடுகள் நடப்பதாக ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்துள்ளது.

தங்கத்தை வைத்து அதிக கடன் வாங்கும் மக்கள்.. முறைகேடுகள் நடப்பதாக ரிசர்வ் வங்கி புலம்பல்..!

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின் படி இந்தியாவில் 2023 செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 2024 செப்டம்பர் மாதத்தில் தங்க கடன்களின் விகிதம் கணிசமான அளவு உயர்ந்துள்ளது. சாமானிய மக்கள் தங்களுடைய நிதி தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக பெருமளவில் தங்கத்தை அடமானமாக வைப்பதையே இது காட்டுகிறது. இருந்தாலும் கடன் வழங்கக்கூடிய சில நிறுவனங்கள் மற்றும் கடன் பெறுபவர்கள் முறைகேடான நடைமுறைகளில் ஈடுபடுவது குறித்தும் ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்துள்ளது.

இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவே செப்டம்பர் 30-ஆம் தேதி அன்று புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டதாக தெரிவித்துள்ள இந்திய ரிசர்வ் வங்கி தங்க கடன்களுக்கான கொள்கைகள், செயல்முறைகள் மற்றும் நடைமுறைகளை தங்க கடன் வழங்கக்கூடிய நிறுவனங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

தங்கத்தை மதிப்பிடுவதில் உள்ள முரண்பாடுகள், போதிய கவனமின்மை, அவுட்சொசிங் நடைமுறைகளில் இருக்கக்கூடிய குறைபாடுகள், இவ்வாறு வாங்கப்படும் கடன்களின் நோக்கம் குறித்து மேலாண்மை செய்வது உள்ளிட்டவற்றில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி தன்னுடைய வழிகாட்டுதல்களில் குறிப்பிட்டுள்ளது. கடன் வழங்கக்கூடிய நிறுவனங்களின் வளர்ச்சி நிலையானதாக இருக்க வேண்டும் என்பதையும் தவறான நடைமுறைகள் இல்லாமல் இருப்பதையும் உறுதி செய்வதே எங்களின் நோக்கம் என கூறியுள்ளது.

தங்க கடன் பிரிவில் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதே ரிசர்வ் வங்கியின் இந்த அறிவுறுத்தல்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. மார்ச் 2024 நிலவரப்படி வங்கிகள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் வழங்கிய மொத்த தங்க கடன்களில் 59.9% வங்கி அல்லாத நிதி நிறுவனங்களிடம் தான் இருக்கின்றன .

அதாவது மக்கள் வங்கிகளில் சென்று தங்க கடன் பெறுவதை காட்டிலும் வங்கி சாராத நிதி நிறுவனங்களில் கடன் பெறுவதை எளிதாக கருதுகின்றனர். அதே வேளையில் இந்தியாவில் தங்கம் அல்லாமல் மற்ற சில்லறை கடன் வகைகளில் கடன் வழங்கும் விகிதம் குறைந்திருப்பதையும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது, செப்டம்பர் 2023 முதல் உத்தரவாதமற்ற தனிநபர் கடன்களின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் இல்லை என ரிசர்வ் வங்கி தெரிவிக்கிறது. மைக்ரோ பைனான்ஸ் மற்றும் சுய உதவிக் குழு கடன்களின் வளர்ச்சி விகிதங்கள் கடந்த ஆண்டில் மூன்று இரண்டு பங்கிற்கு மேல் குறைந்துள்ளன என ரிசர்வ் வங்கி தெரிவிக்கிறது.

எனவே தான் தங்க கடன் பிரிவில் முறைகேடுகள் நடக்காமல் இருப்பதை தடுக்க நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற வேண்டும் என கேட்டு கொண்டுள்ளது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+