ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த 2016ஆம் ஆண்டு இந்திய தொலை தொடர்பு பிரிவில் காலடி வைத்த போது பல்வேறு தொலை தொடர்பு நிறுவனங்களும் ஆட்டம் கண்டன. தற்போது இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் தொலை தொடர்பு வாடிக்கையாளர்களை கொண்டுள்ள நிறுவனமாக இருக்கிறது. ஜியோவை பொறுத்தவரை தொலை தொடர்பு பிரிவில் முன்னணி இடத்தை பிடித்து அதனை தக்க வைத்துக் கொள்வது தான் அதன் நோக்கம்.
குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டங்களுடன் 2016இல் ஜியோ சந்தைக்கு வந்த போது இந்தியாவில் ஏர்டெல், வோடபோன், ஐடியா, ஏர்செல், பிஎஸ்என்எல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இருந்தன. ஆனால் தற்போது ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் என சுருங்கிவிட்டது. லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை ஈர்த்த ஜியோ கடந்த மாதம் திடீரென தங்களுடைய ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரித்தது.

திடீரென இவ்வாறு திட்டங்களின் விலை அதிகரிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சமூக வலைத்தளங்களிலும் பலரும் ஜியோ நிறுவனத்தை விமர்சனம் செய்ய தொடங்கினர். இதனைத் தொடர்ந்து பலரும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை நோக்கி திரும்புவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
இந்தியாவை பொறுத்தவரை பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட்போன்களுக்கு மாறி வந்தாலும், பட்டன் ஃபோன்களுக்கான தேவையும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் பெரும்பாலும் 2ஜி சேவை தான் கிடைக்கும் . எனவே பட்டன் போன் சந்தையை பிடிக்க வேண்டும், ஜியோ வாடிக்கையாளர்களை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 4ஜி சேவை வழங்கும் பட்டன் போன்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்து வருகிறது.
தற்போது 2ஜி பயன்பாட்டில் இருக்கக்கூடிய வாடிக்கையாளர்களை 4ஜிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதுதான் ஜியோவின் திட்டம். எனவே ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் இணைய வசதியுடன் கூடிய பட்டன் ஃபோன்களை அறிமுகம் செய்து வருகிறது. இவற்றின் விலை பெரும்பாலும் 2000 ரூபாய்க்குள் தான் இருக்கிறது.
இவ்வாறு ரிலையன்ஸ் விற்பனை செய்யக்கூடிய பட்டன் ஃபோன்களில் எல்லாம் ஜியோ சிம் கார்டனை மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் இத்தகைய பட்டன் ஃபோன்களுக்கு என பிரத்யேக ரீசார்ஜ் திட்டங்களையும் ஜியோ நிறுவனம் வழங்கியுள்ளது.
குறிப்பாக இந்த வாரம் வெளியான JioBharat J1 போனில் யுபிஐ வசதி, ஜியோ சினிமா ஓடிடி என பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் கோபத்தை தணிக்க ஜியோ முயற்சிக்கிறது. மேலும் பிராண்ட்பேட் திட்டங்களிலும் சுதந்திர தினத்தையொட்டி 1000 ரூபாய் வரை தள்ளுபடியை வழங்கியுள்ளது.
ஜியோவின் டார்கெட் ஆடியன்ஸ் பட்ஜெட் விலையில் பொருட்களையும் சேவைகளையும் தேட கூடிய இந்தியர்கள் தான். அப்படி தான் ஜியோ சேவை கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை பிடித்தது. அவர்கள் தக்க வைத்துக் கொள்ள எடுக்கும் முயற்சிகள் தான் இவை.
ஏற்கனவே ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ பாரத் பி2, ஜியோ பாரத் கே1 கார்பன் 4ஜி மாடல் ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது. அந்த வரிசையில் தற்போது 2.8 அங்குல திரையுடன் hd காலிங் வசதி கொண்ட JioBharat J1 4ஜி போனை விற்பனைக்கு கொண்டு வருகிறது. இந்த போனில் ஜியோ மணி, ஜியோ சினிமா ஓடிடி ஆகியவற்றை பயன்படுத்த முடியும். இந்த போனின் விலை அமேசான் தளத்தில் 1799 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Story Written by: Devika
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications