இந்தியாவைப் பொறுத்தவரை பாதுகாப்பான முதலீடு என வரும்போது தங்கத்துக்கு அடுத்த இடத்தில் இருப்பது ரியல் எஸ்டேட். அதிலும் குறிப்பாக குடியிருப்பு சார்ந்த ரியல் எஸ்டேட். இந்தியாவில் சொந்த வீடு என்பதே தனிப்பட்ட ஒரு கவுரவம். எனவே நமது சமூகம் எப்போதுமே சொந்த வீட்டை வாங்குவதை நோக்கியே நம்மை நகர்த்துகிறது. இது தான் ரியல் எஸ்டேட் துறைக்கான மவுசு குறையாமல் இருப்பதற்கு முக்கிய காரணம்.
நீண்ட கால அடிப்படையில் நல்ல வருமானம் தரக்கூடிய முதலீடுகளாக குடியிருப்புகள் இருப்பதை மறுப்பதற்கில்லை. இதனை ஆங்கிலத்தில் Residential real estate என அழைக்கின்றனர்.

இந்தியாவில் ரியல் எஸ்டேட் சந்தை என்பது வளர்ச்சி அடைந்த வண்ணமே இருக்கிறது. கொரோனா காலத்திற்குப் பிறகு இந்திய ரியல் எஸ்டேட் துறை 2023 ஆம் ஆண்டிலிருந்து மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளது. 2024 ஆம் ஆண்டில் இன்னும் வளர்ச்சி அடையும் என துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
2024 ஆம் ஆண்டில் புதிய குடியிருப்பு திட்டங்கள் 15 முதல் 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளன என துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர். அதேபோல வீட்டு அபார்ட்மெண்ட்கள் விற்பனையும் 10 முதல் 15 சதவீத வரை அதிகரித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் முக்கியமான நகரங்களில் எல்லாம் குடியிருப்புகளின் மதிப்பு என்பது 5% வரை உயரக்கூடும் என சொல்லப்படுகிறது.
மத்திய அரசும் ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமானது பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா. இந்த திட்டத்தின் கீழ் கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் 4.21 கோடி வீடுகள் கட்டப்பட்டு தகுதி வாய்ந்த குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா ரியல் எஸ்டேட் துறை 2024 ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 1.1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டினை ஈர்த்துள்ளது. இதில் அதிகபட்சமாக வீடுகள் சார்ந்த ரியல் எஸ்டேட் என்பது 693 அமெரிக்க டாலர்கள் என முதலிடத்தில் இருக்கிறது.
பல்வேறு நகரங்களிலும் ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட திட்டங்களையும், மெட்ரோ ரயில் , சாலை மேம்பாட்டு திட்டங்கள் உள்ளிட்டவற்றை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக வீட்டு ரியல் எஸ்டேட்டின் மதிப்பு ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணமே இருக்கிறது.
2024 ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் குடியிருப்பு ரியல் எஸ்டேட் சந்தையில் வந்துள்ள தொகையானது கடந்த எட்டு காலாண்டுகளுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
கிரடாய் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் இந்தியாவில் குடியிருப்புகளின் விற்பனை என்பது 2024 ஆம் ஆண்டில் 35 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆடம்பர குடியிருப்புகளின் விற்பனை என்பது 50% உயர்ந்துள்ளது. ஆண்டுதோறும் ரியல் எஸ்டேட் சார்ந்த முதலீடுகள் 15 முதல் 20% வரை உயரலாம் என சொல்லப்படுகிறது.
எனவே இந்தியாவில் குடியிருப்புகளுக்கான தேவை அதிகரிக்க தான் போகிறது. அதிலும் நகரப் பகுதிகளில் குடியிருப்புகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும். எனவே நீண்ட கால நோக்கில் வளர்ச்சி அடையும் முதலீடாக ரியல் எஸ்டேட்டை எப்போதுமே கருதலாம் என முதலீட்டு நிபுணர்கள் கூறுகின்றனர்.
Story written by: Devika
More From GoodReturns

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications