சர்வதேச பொருளாதார மந்தநிலை, விலைவாசி உயர்வு, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 82 ரூபாய்க்கு அதிகமாகவே இருப்பதுக்கு மத்தியில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்க OPEC நாடுகள் முடிவு என பல காரணிகள் இந்திய பொருளாதார வளர்ச்சியை பணவீக்கம் மூலம் பாதித்து வருகிறது.
இந்த நிலையில் ஏப்ரல் மாத துவக்கத்தில் ரிசர்வ் வங்கி இரு நாள் நாணய கொள்கை கூட்டத்தில் சர்வதேச வங்கி திவால், அமெரிக்க, ஐரோப்பிய பொருளாதார தடுமாற்றம், அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆர்பிஐ ஏப்ரல் மாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் ரெப்போ விகிதத்தை உயர்த்தாமல் தொடர்ந்து 6.50 சதவீதம் வரையிலேயே தொடரும் என அறிவித்துள்ளது.

ஆனாலும் இந்தியாவின் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர கடந்த ஆண்டு மே மாதம் முதல் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 250 அடிப்படை புள்ளிகள் வரையில் உயர்த்தி தற்போது 6.50 சதவீதமாக உள்ளது. இதன் முயற்சிகள் ஏப்ரல் மாதத்தில் பலன் கிடைத்துள்ளது என்றால் மிகையில்லை.
ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு 4.70 சதவீதமாக குறைந்துள்ளது என தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் நாட்டின் சில்லறை பணவீக்கம் குறைய மிகவும் முக்கியமான காரணம் உணவு பணவீக்கம் குறைந்தது தான். மார்ச் மாதத்தில் 4.79 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 3.84 சதவீதமாகக் குறைந்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் போதுமான மழை காய்கறி, பழங்கள், பிற உணவு பொருட்களின் விளைச்சல் அதிகமாக இருந்த காரணத்தால் உணவு பணவீக்கம் பெரிய அளவில் குறைந்துள்ளது. இதேபோல் எரிபொருள் விலையிலும் எவ்விதமான மாற்றமும் இல்லாத காரணத்தால் உணவு பணவீக்கம் குறைந்துள்ளது.

இந்த நிலையில் ஜூன் 6-8 ஆம் தேதிகளில் நடக்கும் ஆர்பிஐ-யின் இரு மாத நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதம் குறையுமான என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மே மாதம் போதுமான மழை பெய்து வரும் நிலையில் உணவு பொருட்களின் விளைச்சலும் சிறப்பாக இருக்கும் என கணிக்கப்பட்டும் நிலையில் மே மாதமும் சில்லறை பணவீக்கம் ஆர்பிஐ வரம்பு அளவுக்குள் கட்டாயம் இருக்கும்.
இதனால் ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதம் குறைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆனால் இதே வேளையில் அமெரிக்க அரசின் கடன் வரம்பை அதிகரிக்காவிட்டால் அமெரிக்க பொருளாதாரம் பெரும் சரிவை சந்திக்கும், இதனால் ரெப்போ விகிதம் குறைக்கப்படும் வாய்ப்புகள் குறையும்.


Click it and Unblock the Notifications