அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வேகமாகச் சரிந்து வந்த வேளையில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிந்ததில் இருந்து அதிகப்படியான பாதிப்புகளை எதிர்கொண்டு வந்தது. இதனால் ரூபாய் மதிப்பு மோசமான திங்கட்கிழமை வர்த்தகத்தில் வரலாற்று சரிவைப் பதிவு செய்துள்ளது.
டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் வரலாற்று சரிவுக்கு என்ன காரணம்..? இதன் மூலம் மக்களுக்கு என்ன பாதிப்பு..?!
இந்திய ரூபாய் மதிப்பு
இந்திய ரூபாய் மதிப்பு மட்டும் அல்லாமல் ஜப்பான் யென் முதல் சீனா யுவான் வரையில் அனைத்து முக்கிய வர்த்தக நாணயங்களின் சரிவுக்கு மிக முக்கியமான காரணம் அமெரிக்காவின் மே மாத பணவீக்கம் தான். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான அமெரிக்கப் பணவீக்க தரவுகள் சர்வதேச முதலீட்டு சந்தையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு உள்ளது.
அமெரிக்காவின் மே மாத பணவீக்கம்
வல்லரசு நாடான அமெரிக்காவில் எரிபொருள் மற்றும் உணவு பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் அந்நாட்டின் பணவீக்கம் சற்றும் எதிர்பார்க்காத வகையில் 40 வருட உச்சத்தைத் தொட்டு உள்ளது. டிசம்பர் 1981 க்குப் பின் அமெரிக்காவின் நுகர்வோர் பணவீக்கம் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் மே 2022ல் எரிபொருள் விலை சுமார் 34.6% உயர்ந்துள்ளது.
பொருளாதார, வர்த்தக வளர்ச்சி
இந்தியாவாக இருந்தாலும் சரி அமெரிக்காவாக இருந்தாலும் சரி பணவீக்கம் உயர்ந்தால் பொருளாதார, வர்த்தக வளர்ச்சியின் வேகம் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொள்ளும். இதைத் தொடர்ந்து கட்டுக்குள்ள வைக்க ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கிகள் நாணய கொள்கையில் வட்டி விகிதத்தை மாற்றி, பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.
பெடரல் ரிசர்வ்
இதன் வாயிலாக அடுத்தச் சில நாட்களில் அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டியை கடுமையான உயர்த்துவது உறுதியாகியுள்ளது. அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்தினால் சர்வதேச சந்தையில் இருக்கும் டாலர் முதலீடுகள் வெளியேறி அமெரிக்கப் பத்திர சந்தைக்குள்ள நுழையும்.
திங்கட்கிழமை வர்த்தகம்
இதன் ஆரம்பமே இன்றைய வர்த்தகம், திங்கட்கிழமை வர்த்தகத்தில் டாலர் இன்டெக்ஸ் 104.48 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் இந்தியச் சந்தையில் இருக்கும் அன்னிய முதலீடுகள் இன்று வெளியேறத் துவங்கியுள்ளதால் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத விதமாக 78.27 வரையில் சரிந்துள்ளது.
ரூபாய் மதிப்பு
ரூபாய் மதிப்பு சரியும் காரணத்தால் இந்தியா இறக்குமதி செய்யப்பட்டும் பொருட்களின் விலை அதிகரிக்கும், இதில் கச்சா எண்ணெய் முதல் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் வரையில் அனைத்தும் அடங்கும்.
இறக்குமதி பொருட்கள்
இதேவேளையில் சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பாதிக்கும். இது சப்ளை செயின்-ஐ பாதிப்பது மட்டும் அல்லாமல் இறக்குமதி பொருட்களின் விலையை உயர்த்தும். இது கட்டாயம் மக்களைக் கடுமையாகப் பாதிக்கும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications