சென்னை: ஒரு சராசரி மனிதன் ஒரு நாளை பணம் இல்லாமல் கடந்து செல்வது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். ஒரு பொருளை வாங்குவதற்கும் விற்பதற்கும் மாற்றிக் கொள்வதற்கும் பணமே தேவைப்படுகிறது. இடத்திற்கு இடம் பணத்தின் பெயர் மாறினாலும் நாளுக்கு நாள் இதன் மதிப்பில் எந்த வித மாற்றமும் நிகழ்வதில்லை. சொல்லப்போனால் ஒரு ஒரு நாளும் பணத்தின் தேவையும் மதிப்பும் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. எனவே இந்தப் பதிவில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பணத்தில் இருக்கும் சாய்ந்த கோடுகள் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
கையில் இருக்கும் பணத்தை செலவு செய்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதில் இருக்கும் சிறு சிறு விஷயங்களை உற்று நோக்கினால் நமக்கு ஏராளமான தகவல்கள் கிடைக்கும். உடனே கையிலோ அல்லது பையிலோ இருக்கும் பணத்தை எடுத்துப் பாருங்கள். அதன் ஒவ்வொரு விளிம்பிலும் சாய்ந்த கோடுகள் இருப்பதை காண முடியும். இந்த கோடுகளுக்கான அர்த்தம் என்ன.. என்பதை இதுவரை நாம் யோசித்துப் பார்த்து இருக்கவே முடியாது.

ஒவ்வொரு ரூபாய் நோட்டுகளுக்கும் இந்த கோடுகள் வித்தியாசப்படுகின்றன. உதாரணமாக நம்மிடம் இருக்கும் 100 ரூபாய் மற்றும் 200 ரூபாய் பணத்தை எடுத்து பார்க்கும் பொழுது இவ்விரு நோட்டுக்கும் இடையில் அந்த கோடுகள் வித்தியாசப்பட்டிருப்பதை பார்க்க முடியும். ரூபாய் நோட்டின் மதிப்பை பொறுத்து அந்தக் கோடுகள் மாறி இருக்கும்.
ஒவ்வொரு ரூபாய் நோட்டிலும் அச்சடிக்கப்பட்டுள்ள இந்த கோடுகள் பிளீட் மார்க்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. இந்தக் கோடுகள் நோட்டுகளின் மதிப்பிற்கு ஏற்றவாறு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ காணப்படுகின்றன.
இந்த கோடுகளுக்கான உண்மை காரணங்களை இப்போது பார்க்கலாம். ஒரு சாதாரண மனிதன் தன்னிடம் இருக்கும் பணத்தைப் பார்த்தவுடன் அது 100 ரூபாயா, 200 ரூபாயா அல்லது 500 ரூபாயா என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் கண் பார்வையை இழந்தவர்களுக்கு அது மிகவும் கடினமாகும்.

அவ்வாறு கண்பார்வை இல்லாதவர்கள் ரூபாய் நோட்டின் மதிப்பை தெரிந்து கொள்வதற்காகவே ஒவ்வொரு நோட்டிலும் இந்த சாய்ந்த கோடுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. இந்தக் கோடுகள் பார்வையற்றவர்களுக்காகவே முழுக்க முழுக்க உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கோடுகளின் உதவியுடன் பார்வையற்றவர்கள் அவர்களிடம் உள்ள ரூபாய் நோட்டின் உண்மையான மதிப்பினை தானே அறிந்து கொள்ள முடியும். இதன் மூலமாக மற்றவர்களிடமிருந்து ஏமாறுவதில் இருந்து அவர்கள் தப்பித்துக் கொள்ள முடியும்.
இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் அனைத்து ரூபாய் நோட்டுகளிலும் இந்த கோடுகள் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். கண் பார்வை இழந்தவர்கள் இந்த ரூபாய் நோட்டில் இருக்கும் கோடுகளை தங்கள் விரல்களால் தொடுவதன் மூலம் அதன் உண்மை மதிப்பினை உணர்ந்து கொள்கின்றனர். இதனால் தங்களின் தேவைகளை யாரையும் எதிர்பார்க்காமல் தாங்களே பூர்த்தி செய்து கொள்ளும் சூழ்நிலையை அவர்களால் உருவாக்கிக் கொள்ள முடியும்.
இந்தியாவில் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் துறையே பார்வையற்றவர்களுக்காக இந்த அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தந்துள்ளது. ரூபாய் நோட்டுகளின் மதிப்பிற்கு ஏற்றவாறு அந்த கோடுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டாக ஒரு 100 ரூபாய் நோட்டில் அதன் இரு புறங்களிலும் நான்கு கோடுகள் இருக்கும். 200 ரூபாய் நோட்டில் நான்கு வரிகள் இடம் பெற்றிருக்கும். அதனுடன் சேர்த்து இரண்டு பூஜ்ஜியங்களும் இணைக்கப்பட்டு அச்சடிக்கப்பட்டிருக்கும். இதுபோலவே 500 ரூபாய் நோட்டுகளில் ஐந்து வரிகளும், 2000 ரூபாய் நோட்டில் ஏழு வரிகளும் இடம்பெற்றிருக்கும்.
இந்தக் கோடுகளின் உதவியுடன் பார்வையற்றவர்கள் தங்களிடம் இருக்கும் பணத்தின் உண்மை மதிப்பினை தெரிந்து கொண்டு அதனை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications