அமெரிக்கா: சாட் ஜிபிடி உரிமையாளரான ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் சாம் ஆல்ட்மேன். இவருக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. இவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தன்னுடைய குழந்தைக்கான தொட்டிலை பெங்களூருவை சேர்ந்த ஒரு பெண்ணின் ஸ்டார்ட் அப் நிறுவனத்திடம் இருந்து வாங்கி இருப்பதாக பதிவிட்டுள்ளார்.
சாம் ஆல்ட்மேனுக்கும் அவருடைய மனைவி ஆலிவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் சாம் ஆல்ட்மேன் தன்னுடைய குழந்தைக்கான தொட்டிலை பெங்களூருவை சேர்ந்த ஒரு பெண்ணின் ஸ்டார்ட் அப் நிறுவனத்திடம் இருந்து வாங்கி இருக்கிறேன் என பதிவு செய்திருக்கிறார். அனைத்து புதிய பெற்றோர்களும் இந்த தொட்டிலை வாங்கி குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம் என்றும் அவர் பரிந்துரை செய்திருக்கிறார்.

தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக எழுதி இருக்கும் சாம் ஆல்ட்மேன் எங்களுடைய குழந்தைக்காக நாங்கள் நிறைய தேவையற்ற பொருட்களை வாங்கி குவித்திருக்கிறோம், அண்மையில் Cradlewise நிறுவனத்திடம் இருந்து தொட்டிலை வாங்கினோம். நிச்சயமாக புதிய பெற்றோர்கள் பலரும் இதனை வாங்கி பயன்படுத்தலாம் இது மிகவும் உதவியாக இருக்கும் என குறிப்பிட்டு இருக்கிறார். அவருடைய இந்த பதிவு இலட்சக்கணக்கான பார்வையை பெற்றுள்ளது.
பெங்களூருவை சேர்ந்த ராதிகா பாட்டில் என்பவரால் 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் தான் Cradlewise . அமெரிக்கா மற்றும் இந்தியாவில் Cradlewise நிறுவனம் தங்களுடைய பிரத்தியேக குழந்தைகளுக்கான தொட்டிலை விற்பனை செய்து வருகிறது. ராதிகா பாட்டில் மற்றும் அவருடைய கணவர் பாரத் பாட்டில் ஆகியோர் கடந்த 2016 ஆம் ஆண்டு பெங்களூருவில் இந்த ஸ்மார்ட் தொட்டிலுக்கான புரோட்டோடைப்பை வடிவமைத்திருக்கின்றனர் . ஆனால் இதனை முதன் முதலில் இவர்கள் அமெரிக்காவில் தான் அறிமுகம் செய்துள்ளனர்.
இந்த ஸ்மார்ட் தொட்டில் குழந்தைகள் தங்களுடைய இரண்டு வயது நிறைவடையும் வரை பயன்படுத்த முடியும். இந்த தொட்டில் குழந்தைகளுக்கு தாயிடம் இருப்பதைப் போன்ற உணர்வை தந்து அவர்களை அமைதியாக தூங்க வைக்கும் என சொல்லப்படுகிறது. குழந்தைகள் தூங்குவதற்கு ஏற்ற வகையில் மென்மையான இசைகளை இது ஒலிபரப்பும்.
இதனிடையே எங்களுடைய தயாரிப்பை ஏஐ கடவுளான சாம் ஆல்ட்மேனே பாராட்டி இருப்பதும் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பதும் பெருமையாக இருக்கிறது என ராதிகா பாட்டீல் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். பெங்களூர் ஐஐஎஸ்சியில் எலக்ட்ரானிக் டிசைன் பிரிவில் முதுநிலை படிப்பை முடித்தவர் ராதிகா பாட்டில், அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்கிறார்.
தற்போது Cradlewise நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். தங்களுடைய முதல் குழந்தையான அனுஷ்கா பிறந்தபோது அவரை தாலாட்டி தூங்க வைப்பதற்கு ஏதுவாக ஸ்மார்ட்டான ஒரு தொட்டிலை வடிவமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இதனை உருவாக்கியதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இந்த தொட்டில் 1999 டாலருக்கும், இந்தியாவில் 1.5 லட்சம் ரூபாய்க்கும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications