ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு அரசு பணி கிடையாது என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் முக்கியமான தீர்ப்பினை வழங்கியுள்ளது.
இரண்டு குழந்தைகள் கொள்கை: ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவையில் கடந்த 1989ம் ஆண்டு 'இரண்டு குழந்தைகள் கொள்கை' என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் படி, இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் அரசுப்பணி பெறுவதற்கு தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டனர்.

2002இல் வழக்கு தள்ளுபடி: ராஜஸ்தான் மாநில அரசின் இந்த சட்டத்தை எதிர்த்து முன்னாள் ராணுவ வீரர் ராம்ஜி லால் என்பவர் மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த 2017 ஜனவரியில் பாதுகாப்புப் படையில் இருந்து ஓய்வு பெற்ற ராம்ஜி லால், ராஜஸ்தான் காவல்துறையில் கான்ஸ்டபிள் பதவிக்கு 2018 மே மாதம் விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவருக்கு இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்ததால், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இதனை அடுத்து இரண்டு குழந்தைகள் கொள்கை சட்டத்தை எதிர்த்து ராம்ஜி லால் மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் ராம்ஜி லாலின் வழக்கை 2022இல் தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராம்ஜி லால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அவரது வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், தீபங்கர் தத்தா, கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட அமர்வு முக்கியமான தீர்ப்பை வழங்கியது.
சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு: அதாவது 2022இல் ராம்ஜி லாலின் மனுவை தள்ளுபடி செய்த ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது என ஆணையிட்ட உச்சநீதிமன்றம், 'ராஜஸ்தான் அரசு கொண்டு வந்த 'இரண்டு குழந்தைகள் கொள்கை' தொடர்பான சட்டம் செல்லும் என கூறியது.
இந்த சட்டம் பாரபட்சமானது அல்ல என்றும் , அரசியலமைப்பை மீறியது அல்ல என்றும் தெரிவித்த உச்சநீதிமன்றம், இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது என்ற ராஜஸ்தான் மாநில அரசின் சட்டத்தில் தவறு ஏதுமில்லை என தெரிவித்தது.
Story Written by : Devika
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications