அல்கோ டிரேடிங்கினால் ஆபத்தா.. செபியின் கவலை என்ன..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கேப்பிட்டல் மற்றும் கமாடிட்டி சந்தையின் ஒழுங்குமுறை அமைப்பான செபி, அல்கோ-டிரேடிங் அதன் பயன்பாட்டைப் பல்வேறு வகையான முதலீட்டு மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் பற்றிய ஆலோசனை கட்டுரையை வெளியிட்டுள்ளது.

 

இதனை பற்றி தெரிந்து கொள்ளும் முன்பு அல்கோ டிரேங்க் என்றால் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

ஆல்கோ டிரேடிங்க் என்பது ஆட்டோமேடிக் டிரேடிங் சாப்ட்வேர் ஆகும். இந்த சாப்ட்வேரினை லாக் இன் செய்து விட்டால், அதுவே உங்களுக்காக வர்த்தகம் செய்து கொள்ளும்.

கௌதம் அதானிக்கு அடுத்த ஜாக்பாட்.. செபி சொன்ன ஒற்றை வார்த்தை பதில்..!

ஆல்கோ டிரேடிங்

ஆல்கோ டிரேடிங்

இதற்கு பவர் கட், சர்வர் பிரச்சனை இல்லை, இணையம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதில்லை. நீங்கள் வாங்க வேண்டும், விற்க வேண்டும், ஸ்டாப் லாஸ் என்பது போட வேண்டிய அவசியம் இருக்காது. இலக்கு போட வேண்டிய அவசியம் இருக்காது. இது எல்லாவற்றையும் இந்த சாப்ட்வேரே அனைத்தையும் செய்து கொள்ளும். இதே இடையில் எனக்கு இந்த வர்த்தகம் போதும் என நினைப்பவர்களுக்கு ஸ்கொயர் ஆப் செய்து கொள்ளலாம். அடுத்து நீங்கள் வர்த்தகத்தினை இதில் தொடர வேண்டுமெனில், நீங்கள் உங்களின் கணக்கினை லாகின் செய்து கிளிக் செய்ய வேண்டியிருக்கும்.

உதாரணம் என்ன?

உதாரணம் என்ன?

இந்த ஆல்கோ கலாச்சாரம் என்பது தற்போது சில்லறை வர்த்தகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வரும் நிலையில் தான், தற்போது இது குறித்து செபி யோசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பொதுவாக பங்கு சந்தையில் ஒரு பங்கினை வாங்க நீங்கள் தீர்மானிக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். உதாரணத்திற்கு இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கினை வாங்க நினைக்கிறீர்கள். இதற்காக தரகு நிறுவனத்தின் இணையத்தில் லாகின் செய்து வாங்கிக் கொள்ளலாம்.

தரகு நிறுவனத்தின் ஆப்பில் வாங்கலாம்
 

தரகு நிறுவனத்தின் ஆப்பில் வாங்கலாம்

தரகு நிறுவனத்தின் ஆப்பிலும் வாங்கிக் கொள்ளலாம். இதற்காக நீங்கள் பையிங் என்ன விலை? செல்லிங் என்ன விலை ஸ்டாப் லாஸ், டார்கெட் என அனைத்தும் போட வேண்டி இருக்கும்.

அதோடு நீங்கள் வாங்கிய பங்கு உங்களது இலக்கினை அடைந்து விட்டது என வைத்துக் கொள்வோம். அப்போது நீங்கள் உங்களது ஸ்டாப் லாஸ் ஆர்டரை கேன்சல் செய்ய வேண்டும். இல்லையெனில் அந்த ஸ்டாப் லாஸ் மற்றொரு ஆர்டராக வாய்ப்பிருக்கின்றது. இதனாலேயே பலரும் நஷ்டம் கண்டிருப்பதை பார்த்திருப்போம். ஆனால் இவையேதும் ஆல்கோ டிரேடிங்கில் தேவையில்லை. இதுவே அனைத்தையும் சாப்ட்வேரே செய்து கொள்ளும்.

தற்போதைய விதிமுறைகள்

தற்போதைய விதிமுறைகள்

அல்கோ வர்த்தகத்தினை வழங்க தரகர்களுக்கு எக்ஸ்சேஞ்சின் ஒப்புதல் தேவை. அல்கோஸில் ஏதேனும் மாற்றம் இருந்தால் அதனை எக்ஸ்சேஞ்சுக்கு தெரிவிக்க வேண்டும்.

அனைத்து அல்கோ ஆர்டர்களும் இந்தியாவில் அமைந்துள்ள தரகர் சேவையகங்கள் மூலம் அனுப்பப்பட வேண்டும்.

மேலும் ஆல்கோ மூலம் செய்யப்படும் ஆர்டர்களுக்கும் தனித்துவமான பங்கு சந்தையால் வழங்கப்படும் குறியீட்டுடன் (தணிக்கை) இருக்க வேண்டும் என பல விதிமுறைகள் உள்ளன.

கவலை ஏன்?

கவலை ஏன்?

இந்தியாவில் உள்ள பல்வேறு தரகர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அப்ளிகேஷன் புரோகிராமிங் இண்டர்ஃபேஸ் (Application Programming Interface) அணுகலை வழங்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த API என்பது ஒரு மென்பொருள் மற்றொரு மென்பொருளுடன் தொடர்பு கொள்வதற்காக நிறுவப்படும் ஒர் இடைமுகமாகும்.

செபியின் கவலை

செபியின் கவலை

இந்த API-க்களை தான் தரகு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கின்றன. இதனை வாடிக்கையாளர்கள் தங்களது ஆப்களில் லாகின் செய்து ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். இது சந்தை நிலவரத்திற்கு ஏற்ப ஆர்டர்களை போட்டுக் கொள்ளும். எனினும் சந்தையில் ஒழுங்குபடுத்தப்படாத அல்கோ-களும் உள்ளன. இதன் மூலம் சந்தையில் தவறாக பயன்படுத்தப்படலாம் என்று செபி கருதுகின்றது. ஏனெனில் இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டலாம் என்ற யுக்தியை பயன்படுத்தலாம். ஆனால் இதனால் முதலீட்டாளர்கள் நஷ்டத்தினை அடையலாம் என்ற கவலையும் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why SEBI concerned about rise in algo trading? algo trading does it work?

Why SEBI concerned about rise in algo trading? algo trading does it work?/ அல்கோ டிரேடிங்கினால் ஆபத்தா.. செபியின் கவலை என்ன..?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X