ஒரே மாதத்தில் 3000 புள்ளிகளுக்கு மேலாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ்.. இனி எப்படியிருக்கும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பங்கு சந்தைகள் இன்று சற்றே ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது. இது ஆசிய சந்தைகள் ஏற்றம் மற்றும் கச்சா எண்ணெய் சரிவுக்கு மத்தியில் ஏற்றம் கண்டுள்ளது.

 

இன்று வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 768.74 புள்ளிகள் அதிகரித்து, 60,746.59 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டி 225.04 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 18,012 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.

பங்கு சந்தை சரிவு, ரெசிஷன் குறித்து எச்சரிக்கை.. கோல்டுமேன் சாச்சஸ் சொல்லும் முக்கிய காரணம்..? பங்கு சந்தை சரிவு, ரெசிஷன் குறித்து எச்சரிக்கை.. கோல்டுமேன் சாச்சஸ் சொல்லும் முக்கிய காரணம்..?

சென்செக்ஸ் ஏற்றம்

சென்செக்ஸ் ஏற்றம்

இதே இம்மாதத்தில் சென்செக்ஸ் 3000 புள்ளிகளுக்கு மேலாக ஏற்றம் கண்டுள்ளது. இது வலுவாக கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிகள் மற்றும் மத்திய வங்கிகள் நடவடிக்கை குறித்தான எதிர்பார்ப்புகள் உள்ளிட்ட பலவும் சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளன. இதற்கிடையில் தான் அவ்வப்போது சரிவினைக் கண்டாலும், மொத்தத்தில் ஏற்றத்தில் காணப்படுகின்றது.

விலை சரிவால் பலன்

விலை சரிவால் பலன்

சீனாவில் அமல்படுத்தப்பட்டுள்ள கொரோனா லாக்டவுன் மத்தியில் எண்ணெய் தேவையானது சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எண்ணெய் விலையானது சரிவினை காண வழிவகுத்துள்ளது.

இந்தியா உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளராக இருந்து வரும் நிலையில், விலை சரிவால் இந்தியா பலனடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பணவீக்கத்தினை குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சந்தைக்கு சாதகமான ஒரு காரணியாகவும் பார்க்கப்படுகிறது.

பணவீக்கம் சரியலாம்
 

பணவீக்கம் சரியலாம்

தொடர்ந்து குறையும் எண்ணெய் விலையால் பணவீக்கம் சரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாரம் முதலீட்டாளர்கள் தொடர்ந்து அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தினை அதிகரிக்குமா? என்பதை கவனித்து வருகின்றனர். பேங்க் ஆப் இங்கிலாந்தின் நடவடிக்கையினை கவனித்து வருகின்றனர்.

ரிசர்வ் வங்கி கூட்டம்

ரிசர்வ் வங்கி கூட்டம்

இந்திய ரிசர்வ் வங்கியின் கூட்டமும் நவம்பர் 3 நடக்கவுள்ள நிலையில், அந்த கூட்டத்தில் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரித்து வந்தாலும், பணவீக்க விகிதம் தொடர்ந்து இலக்கிற்கு மேலாகவே காணப்படுகின்றது.

இதற்கிடையில் அமெரிக்க பங்கு சந்தையும் தொடர்ந்து 4வது வாரமாக ஏற்றத்திலேயே, கடந்த வெள்ளிக்கிழமையன்று முடிவடைந்தது.

வட்டி தொடர்ந்து அதிகரிக்கலாம்

வட்டி தொடர்ந்து அதிகரிக்கலாம்

எனினும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தாலும் அமெரிக்காவில் ரெசசன் அச்சம் நிலவி வருகின்றது. இதன் காரணமாக அங்கு ஏற்றம் தொடருமா என்ற அச்சமும் நிலவி வருகின்றது. ஏற்கனவே கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளன. இந்த போக்கானது தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அன்னிய முதலீடுகள்

அன்னிய முதலீடுகள்

இதன் காரணமாக தொடர்ந்து அன்னிய முதலீடுகள் இந்திய சந்தையில் இருந்து வெளியேறலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது. எனினும் கடந்த இரண்டு அமர்வுகளாகவே சந்தையில் அன்னிய முதலீடுகள் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

why sensex is jumped over 3000 points this month: Will this boom continue?

Sensex gained over 3000 points this month. This is supported by strong corporate reports and expectations of central bank action, which also favors the market.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X