லடாக்: உலகிலேயே மிக உயரமான இடத்தில் சுரங்கப்பாதையை இந்தியா கட்டமைக்கிறது. குறிப்பாக ராணுவ ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இந்த பாதை கட்டப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது.
லடாக்கில் கட்டப்படும் இந்த ஷின்குன் லா சுரங்கப்பாதை ராணுவ ரீதியாக இந்தியாவிற்கு மிக முக்கியமான ஒரு சுரங்கப் பாதையாக அமைக்கப்பட இருக்கிறது. நிலத்தில் இருந்து 15,800 அடி உயரத்தில் கட்டப்படும் இந்த சுரங்கப்பாதை பணிகள் முடிவடையும் போது உலகிலேயே மிக உயரமான இடத்தில் கட்டப்பட்ட சுரங்கப்பாதை என்ற பெருமையை பெறும். இதனை பயன்படுத்தி பாதுகாப்பு படையினர் ராணுவ உபகரணங்களை மிக எளிதாக அவர்களுக்கு தேவையான இடங்களுக்கு கொண்டு செல்ல முடியும் என சொல்லப்படுகிறது.

இந்த சுரங்கப்பாதை இமாச்சல பிரதேசத்தையும் லடாக்கையும் இணைப்பதால், லடாக்கின் பொருளாதார வளர்ச்சிக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஷின்குன் லா சுரங்கப்பாதை கட்டுவதற்கான திட்டத்திற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 1681 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தத் திட்ட பணிகளானது நடைபெறுகிறது. எல்லை சாலை அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த கட்டுமான பணியினை மேற்கொள்ள உள்ளனர்.
கிழக்கு லடாக்கில் சீனாவுக்கும் இந்தியாவிற்கும் அடிக்கடி மோதல்கள் ஏற்படும் நிலையில் இந்தப் பகுதியில் சுரங்கப்பாதை அமைப்பது ராணுவத்திற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 13 ஆயிரம் அடிக்கு மேல் உயரத்தில் 825 கோடி செலவில் கட்டப்பட்ட சிலா சுரங்கப்பாதை கடந்த மார்ச் மாதம் திறக்கப்பட்டது. பொதுவாக இதுபோன்ற எல்லைப் பகுதிகளில் கட்டப்படும் சுரங்கப்பாதைகளில் வெடிமருந்துகள் ,ஏவுகணைகள், எரிபொருள் மற்றும் பிற முக்கிய ராணுவ உபகரணங்களை சேமிக்கும் இடமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதுபோல எல்லைப் பகுதியில் இன்னும் பல சுரங்கப்பாதைகள் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷின்குன் லா பாதையை பொறுத்த வரைக்கும் ஒவ்வொரு 500 மீட்டருக்கும் குறுக்கு வழி தடங்களை கொண்ட வகையில் இது கட்டப்படுகிறது. இந்த கட்டுமான பணிகள் முடிவதற்கு குறைந்தது இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என சொல்லப்படுகிறது. தற்போது சீனாவின் உள்ள மி லா சுரங்க பாதை உலகிலேயே உயரமான இடத்தில் கட்டப்பட்டதாக இருந்தது. தற்போது ஷின்குன் லாவுக்கு அந்த பெருமை கிடைத்துள்ளது.
ஷின்குன் லா பகுதியை பொறுத்தவரை இங்கே ஒவ்வொரு ஆண்டிலும் சுமார் ஐந்து மாதங்களுக்கு பனியால் மூடப்பட்டு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்படுகிறது. தற்போது இங்கே சுரங்கப்பாதை அமைப்பதன் மூலம் அனைத்து சூழல்களிலும் இந்த பகுதியிலும் இணைப்பு என்பது உறுதி செய்யப்படுகிறது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சீனாவுக்கு அருகே இருக்கக்கூடிய கிழக்கு லடாக்கில் இருந்து அருணாச்சலப் பிரதேசம் வரையிலான பகுதியில் மத்திய அரசு பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி உள்ளது, சாலைகள் அமைப்பது, சுரங்கப்பாதைகள் அமைப்பது, பாலங்கள் கட்டுவது என்பன உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு பணிகள் இந்த பகுதியில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications