சென்னை: வரும் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்கள் என்றாலே வீட்டு பொறுப்பு, குழந்தைகளை பராமரிப்பது என்பதோடு மட்டும் நின்றுவிடாமல் நிதி ரீதியாக தங்களை வலுப்படுத்தி கொள்ள வேண்டிய கட்டாயத்தை காலம் ஏற்படுத்தியுள்ளது.
2020 -21 ஆம் ஆண்டில் தேசிய நிதி விழிப்புணர்வு தொடர்பாக நடத்தப்பட்ட ஒரு ஆய்வு அறிக்கையில் இந்தியாவில் 21 சதவீத பெண்கள் மட்டுமே நிதி ரீதியான கல்வியறிவை பெற்றிருக்கிறார்கள் என தெரிய வந்துள்ளது. உலகின் பெரும் பொருளாதார நாடாக மாற வேண்டும், வளர்ந்த நாடாக மாற வேண்டும் என ஒரு புறம் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம், ஆனால் மக்கள் தொகையில் பாதிக்கும் பாதி இருக்கக்கூடிய பெண்களுக்கு நிதி ரீதியான சுதந்திரமும் , கல்வி அறிவும் கொடுத்திருக்கிறோமா என்றால் இல்லை என்பது தான் உண்மை.

இதற்கு நம்முடைய சமூக கட்டமைப்பு முக்கிய காரணம். ஆண்கள் என்றால் பணம் சம்பாதித்து வந்து தருபவர்கள் பெண்கள் என்றால் குடும்பத்தை பராமரிப்பவர்கள் என்ற எண்ணம் அனைவர் மத்தியிலும் காலம் காலமாக ஊறி கிடக்கிறது. தற்போது பெண்கள் ஆண்களுக்கு நிகராக படிக்கிறார்கள், வேலைக்கு செல்கிறார்கள் என்றாலும் கூட நிதி ரீதியான முடிவுகளை அவர்களால் தைரியமாக எடுக்க முடிவதில்லை.
நம்முடைய சமூகம் பெண்கள் நிதி ரீதியான முடிவுகளை எடுப்பதில் இருந்தும், நிதி ரீதியான அறிவை பெறுவதில் இருந்தும் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. வேலைக்கு செல்லும் இடத்தில் ஆண்களுக்கு நிகரான ஊதியம் பெண்களுக்கு கிடைப்பதில்லை, வீட்டில் நிதி ரீதியான முக்கிய முடிவுகள் அனைத்தையும் ஆண்கள் தான் எடுக்கிறார்கள்.
சிறுவயதிலிருந்தே பெண் குழந்தைகளுக்கு நிதி சார்ந்த அறிவை வழங்க நம் சமூகம் தவறி விடுகிறது, எனவே இதில் மாற்றம் வரவேண்டும் அதனை சமகால பெண்கள் தான் உண்டாக்க வேண்டும். அப்போது தான் பெண்களும் ஆர்வமாக நிதி சார்ந்தும் முதலீடு சார்ந்தும் அறிவை பெற முன் வருவார்கள்.
பெண்களுக்கான நிதி சுதந்திரம் தொடர்பாக செயல்பட்டு வரும் ஷில்பா பாஸ்கர் ஏற்கனவே பெண்களுக்கு குழந்தைகளை பராமரிப்பது , வீட்டை பராமரிப்பது வீட்டில் இருக்கும் பெரியவர்களை பார்த்துக் கொள்வது என பல்வேறு வேலைகள் இருப்பதால் நிதி சார்ந்த விஷயங்களில் அவர்கள் ஆர்வம் காட்டாமல் விட்டுவிடுகிறார்கள் என்கிறார். அடிப்படையில் இருந்தே மாற்றம் வர வேண்டும் என கூறுகிறார்.
FinSafe நிறுவனத்தின் இயக்குனர் மெரின் அகர்வால் பெண்கள் வேலைக்கு சென்றே சம்பாதித்தால் கூட ஆண்களை சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலையில் தான் உள்ளனர் என்கிறார். முதலீடு செய்வது, பணத்தை பெருக்குவது குறித்த விஷயங்களை பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என கூறுகிறார். அவ்வாறு கற்காமல் இருப்பதே பெண்கள் வாழ்நாள் முழுவதும் ஆண்களை சார்ந்திருக்க வேண்டிய நிலைக்கு செல்கின்றனர் என்கிறார். திடீரென குடும்பத்தில் அந்த ஆணோ அல்லது அந்த ஆணின் சம்பளமும் இல்லாமல் போகும்போது பெண்கள் தடுமாறி நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது எனக் கூறுகிறார்.
வேலைக்கு செல்ல கூடிய பெண்கள் முதலீடு செய்ய முன் வந்தாலும் அவர்கள் தங்கம் அல்லது நிலையான வாய்ப்புத் தொகை போன்ற பாதுகாப்பான முதலீட்டை தான் தேர்வு செய்கிறார்கள். ஆனால் அதை தாண்டி பங்குச்சந்தைகள், பத்திரங்கள் உள்ளிட்ட பிற முதலீடுகளையும் தெரிந்து வைத்து கொண்டால் ஆண்களை விட பெண்கள் ஸ்மார்ட்டாகவும் நிதி சார்ந்த சுதந்திரத்துடனும் இயங்க முடியும் என கூறுகிறார்.
அதே போல வேலையில் சம்பள உயர்வுக்கு பேசும் போது தயங்காமல் தனக்கு உகந்த சம்பளத்தை கேட்க வேண்டும், வீட்டில் தனக்கு இருக்கும் சொத்து உரிமைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்குகிறார்.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications