உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்கா எப்படி கொரோனா காலத்தில் சுகாதார துறையில் வலிமை இல்லை என்பதை காட்டியதோ, கிட்டத்தட்ட இதேபோல தற்போது பணவீக்கத்தை குறைக்கும் முயற்சியில் அடுத்தடுத்து வங்கிகள் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
சிலிக்கான் வேலி பேங்க் திவாலானதை அடுத்த மார்ச் 12 ஆம் தேதி கிட்டத்தட்ட 100 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சொத்துக்களைக் கொண்ட சிக்னேச்சர் பேங்க் திவாலானதாக அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் சிக்னேச்சர் வங்கியை நம்பியிருந்த பல ஆயிரம் நிறுவனங்கள், பணக்காரர்களின் முதலீடுகள், டெபாசிட்கள் கேள்விக்குறியாய் நிற்கிறது. சிக்னேச்சர் வங்கி வீழ்ச்சிக்கு என்ன காரணம்..?
சிக்னேச்சர் வங்கி
சிக்னேச்சர் வங்கி, இவ்வங்கி நீண்ட காலமாக சட்ட நிறுவனங்களுக்கு வங்கி சேவைகளை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்றது, வாடிக்கையாளர் பணம் மற்றும் பிற சேவைகளை வைத்திருப்பதற்கான எஸ்க்ரோ கணக்குகளை வழங்குகிறது. எஸ்க்ரோ கணக்குகள் B2B பிரிவில் மிகவும் முக்கியமானது.
இஸ்ரேல்
ஸ்காட் ஷே, ஜோசப் டிபாலோ மற்றும் ஜான் டேம்பர்லேன் ஆகியோர் 1999 இல் இஸ்ரேலின் மிகப்பெரிய வங்கி நிறுவனமான பேங்க் ஹபோலிமின் ஆதரவுடன் சிக்னேச்சர் வங்கியை நிறுவினர். சிக்னேச்சர் வங்கி 2004 ஆம் ஆண்டு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது.
டாக்ஸி மெடாலியன்
சிக்னேச்சர் வங்கியின் சிறப்புகளில் ஒன்று, டாக்ஸி மெடாலியன்களை வாங்குவதற்கு கடன் அளிப்பதாகும். இது வாடகை கார்களை இயக்குவதற்கு வைத்திருக்கும் உரிமமாகும். இதுமட்டும் அல்லாமல் நியூயார்க்கில் சட்ட நிறுவனங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு வங்கி சேவைகளை வழங்குவதற்காகவும், அப்பகுதியில் உள்ள பணக்கார குடும்பங்களுக்கு பல முக்கியமான நிதி சேவை வழங்குவதில் மிகவும் பிரபலம்.
டொனால்ட் ட்ரம்ப்
இப்படி சிக்னேச்சர் வங்கி சேவை அளிக்கும் முக்கியமான வாடிக்கையாளர்கள் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிறுவனமான Trump Organization தொடர்புடைய சில நபர்களும் அதன் வாடிக்கையாளர்களை உள்ளடக்கியிருந்தனர். டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் குஷ்னரின் தந்தை சார்லஸ் ஆகியோருக்கு வங்கி கடன் கொடுத்தது. சிக்னேச்சர் வங்கி ட்ரம்பின் புளோரிடா கோல்ஃப் மைதானத்திற்கு நிதியளித்தது.
88 பில்லியன் டாலர்
கடந்த 10 வருடத்தில் சிக்னேச்சர் வங்கி தனது வணிகத்தை அமெரிக்கா முழுவதிலும் விரிவாக்கம் செய்தது. அதிலும் குறிப்பாக மேற்கு கடற்கரை பகுதிக்கு விரிவுபடுத்தத் தொடங்கியது. இதன் மூலம் சிக்னேச்சர் வங்கி திவாலாகும் போது சுமார் 88 பில்லியன் டாலர் அளவிலான கணக்கு புத்தகத்தை வைத்திருந்தது. இதில் 79 பில்லியன் டாலர் வங்கி டெபாசிட் தொகை.
டிஜிட்டல் சொத்து
சிக்னேச்சர் வங்கி-யின் முக்கியமான பிரச்சனையே இதுதான், இந்த வங்கி கிரிப்டோ டிரேடிங் தளத்தில் வர்த்தகம் செய்ய கட்டமைப்பை உருவாக்கியது. இதன் மூலம் இவ்வங்கியில் கிரிப்டோ மற்றும் இதர டிஜிட்டல் சொத்துக்கள் தொடர்பாக 16.52 பில்லியன் டாலர் மதிப்பிலான டெபாசிட் உள்ளது. இந்த வர்த்தகத்திற்குள் 2018ல் நுழைந்தது.
மக்களின் பீதி
அமெரிக்காவில் FTX திவாலானதாக அறிவித்த பின்பு, Silvergate Bank வங்கியும் திவாலானது. ஆனால் Silvergate Bank தானாக திவாலானதாக அறிவித்துக்கொண்டு தனது வர்த்தகத்தை மூடியது. இதன் வாயிலாக collateral Damage ஆக சிக்னேச்சர் வங்கியும் மாட்டிக்கொண்டது. மக்களின் பீதி தான் சிக்னேச்சர் வங்கியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம், இதற்கு வழிவகுத்தது டிஜிட்டல் சொத்துக்கள் தொடர்பாக 16.52 பில்லியன் டாலர் மதிப்பிலான டெபாசிட்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications