பாகிஸ்தான் மீதான ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது நாகஸ்திரா டிரோன்களை பயன்படுத்தியதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டதை அடுத்து அந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு உச்சத்தை தொட்டது.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து மத்திய அரசு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீதும் பாகிஸ்தான் மீதும் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்த தாக்குதலில் நாகஸ்தரா டிரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டது. இதனை அடுத்து மே 15ஆம் தேதி அன்று பங்குச்சந்தையில் நாகஸ்தரா டிரோன்களை உற்பத்தி செய்யக்கூடிய சோலார் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்புகள் கணிசமான அளவு உயர்ந்தன.

இந்தியாவில் நாக்பூரை தலைமை இடமாக கொண்டு செயல்படக்கூடிய சோலார் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நாகஸ்திரா டிரோன்களை தயாரித்து மத்திய அரசுக்கு வழங்குகிறது. இந்த டிரோன்கள் பாகிஸ்தான் மீதான தாக்குதலில் பயன்படுத்தப்பட்டது. இந்த தகவல் வெளியானதை அடுத்து மே 15ஆம் தேதி அன்று மும்பை பங்குச்சந்தையில் சோலார் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 1.5% உயர்ந்து ஒரு பங்கு 13, 934 ரூபாய்க்கு வர்த்தகமானது. வர்த்தக நாள் முழுவதுமே சோலார் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா நிறுவனத்தின் பங்கு மதிப்பு தொடர்ந்து வளர்ச்சி பாதையில் தான் இருந்தது .
கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு மூன்று சதவீதம் உயர்ந்திருக்கிறது கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 267 சதவீதமும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 1472 சதவீதமும் உயர்ந்து இதில் முதலீடு செய்தவர்களுக்கு சிறந்த லாபத்தை பெற்று தந்துள்ளது.
சோலார் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தன்னுடைய துணை நிறுவனத்தின் வாயிலாக தான் இந்த டிரோன்களை தயாரித்து பாதுகாப்பு படைக்கு வழங்குகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் தான் சோலார் இண்டஸ்ட்ரீஸ் 400க்கும் அதிகமான நாகஸ்திரா டிரோன்களைஇந்திய ராணுவத்திற்கு வழங்கியது. இந்த டிரோன்களை தற்கொலை டிரோன்கள் என்று கூட அழைக்கலாம்.
குறிப்பிட்ட பகுதியை கண்காணித்து இலக்கை நிர்ணயம் செய்து அந்த இடத்தில் சென்று விழுந்து நொறுங்கி வெடித்து அந்த இடத்தையே அழித்துவிடும். இந்த டிரோன்கள் 75% உள்நாட்டு மூலப்பொருட்கள் மற்றும் தொழில்நுட்பம் கொண்டு தயார் செய்யப்பட்டவை. இரவு நேரங்களில் கூட இலக்கை சரியாக குறி வைத்து சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த வகையான டிரோன்கள் தற்கொலைப்படை டிரோன்கள் என அழைக்கப்பட்டாலும் ஒருவேளை திடீரென அந்த தாக்குதல் திட்டம் நிறுத்தப்படுகிறது எனும் போது தான் புறப்பட்ட இடத்திற்கே திரும்ப பாதுகாப்பாக வந்து சேர்ந்து விடக்கூடிய திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications