இந்தியாவின் சிலிக்கான் வேலி என அறியப்படும் பெங்களூருவில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் வேலைக்காகவும் படிப்புக்காகவும் படை எடுக்கின்றனர். இதன் காரணமாக இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நகரமாக பெங்களூரு இருக்கிறது.
பெங்களூரை பொருத்தவரை தற்போது தெற்கு பெங்களூரு பகுதிகள் நல்ல வளர்ச்சி அடைந்து வருவது தெரிய வருகிறது. தெற்கு பெங்களூரில் இருக்கும் சந்தப்புரா பகுதி ஓசூருக்கு அருகிலேயே அமைந்திருப்பது மட்டுமில்லாமல் பெங்களூருவின் முக்கியமான பகுதிகளுக்கு எல்லாம் எளிதான போக்குவரத்து வசதியை கொண்டு இருக்கிறது. சந்தப்புரா பகுதியில் இருந்து எலக்ட்ரானிக் சிட்டி பகுதிக்கு பத்து நிமிடங்களில் சென்று விடலாம், எலக்ட்ரானிக் சிட்டி என்பது பெங்களூருவில் ஐடி நிறுவனங்கள் செயல்படக்கூடிய முக்கியமான பகுதி.

எலக்ட்ரானிக் சிட்டியில் தான் இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ் , பயோகான் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் செயல்படுகின்றன. அடுத்ததாக சந்தப்புரா பகுதியிலிருந்து ஓசூருக்கு செல்வதற்கு 15 நிமிடங்கள் மட்டுமே தேவை. ஓசூரில் தற்போது பல்வேறு ஆட்டோமொபைல் மற்றும் உற்பத்தி துறை சார்ந்த நிறுவனங்கள் இயங்கி வருகின்றன . டிவிஎஸ் மோட்டார்ஸ், அசோக் லேலாண்ட் ,டாடா , ஓலா உள்ள பல்வேறு நிறுவனங்கள் செயல்படுகின்றன.
தெற்கு பெங்களூரு பகுதியில் இருந்து ஓசூருக்கு சென்று பணியாற்றி விட்டு வருவது மிக எளிதாக இருக்கிறது. இது தவிர கர்நாடக மாநில அரசு பெங்களூருவில் பொம்மசந்திரா வரை மெட்ரோ சேவையை விரிவாக்கம் செய்ய இருக்கிறது .கூடிய விரைவில் இதனை ஓசூர் வரை நீட்டிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது என்பதால் தெற்கு பெங்களூருவுக்கு டபுள் ஜாக்பாட் தான்.
சேட்டிலைட் டவுன் ரிங் ரோடு மற்றும் பெரிபெலர் ரிங் ரோடு ஆகிய இரண்டு சாலை பணிகளும் முடிவடைந்து விட்டால் தெற்கு பெங்களூருவில் இருந்து பல்வேறு பகுதிகளுக்குமான சாலை போக்குவரத்து இணைப்பு எளிமையானதாக மாறிவிடும்.
இது தவிர ஓசூர் பகுதியில் தமிழ்நாடு அரசு விமான நிலையம் அமைக்க இருப்பதாக அறிவித்துள்ளது. அவ்வாறு விமான நிலையம் அமைந்துவிட்டால் பெங்களூருவின் ஹாட் ஸ்பாட்டாக தெற்கு பெங்களூரு மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை. இதனால் தெற்கு பெங்களூருவில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கவனம் திரும்பியுள்ளது. பல நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்களின் திட்டங்களை அறிவித்துள்ளன.
பள்ளிகள் மற்றும் மருத்துவமனை வசதிகளும் இங்கே அதிகரித்துள்ளதால் ரியல் எஸ்டேட் முதலீட்டுக்கு ஏற்ற இடமாக பெங்களூரு மாறி இருக்கிறது. எனவே முதலீடு நோக்கில் குடியிருப்புகளை வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் தெற்கு பெங்களூருவில் வாங்கினால் குறுகிய காலத்திலேயே நல்ல வளர்ச்சியை காண முடியும் என்கின்றனர் ரியல் எஸ்டேட் துறை சார்ந்தவர்கள்.
ரியல் எஸ்டேட் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதால் அதற்கேற்ப மால்கள் கட்டமைக்கும் பணிகளும் தொடங்கியுள்ளன. எனவே இந்த பகுதியில் ரியல் எஸ்டேட் முதலீடு செய்பவர்களுக்கு நல்ல வாடகை வருமானம் கிடைக்கும் என இந்த துறை சார்ந்தவர் தெரிவிக்கின்றனர்.
Story Written by: Devika
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications