ஸோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஸ்ரீதர் வேம்பு நாட்டின் பொருளாதாரம், தொழில் முன்னேற்றம் உள்ளிட்டவை குறித்து அவ்வப்போது தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கருத்துக்களை பகிர்வார். அந்த வகையில் அண்மையில் சீன தொழில் முனைவோர்கள் குறித்து ஸ்ரீதர் வேம்பு தொடர்ச்சியான பதிவுகளை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் சீனாவை சேர்ந்த தொழில்முனைவோர்கள் ஊழல் என்ற மிகப்பெரிய சவாலை எதிர் கொண்டு வெற்றி அடைந்துள்ளனர். இதுபோன்ற அவர்களின் சவால்களை சமாளிக்க கூடிய திறனை நான் பாராட்டுகிறேன். எனக்கு அடிக்கடி பிரச்சினைகள் வரும்போது நான் அவர்களை நினைத்து என்னை ஊக்கப்படுத்திக் கொள்வேன் என கூறியுள்ளார்.

தன்னுடைய பதிவில் "சீன நிறுவனங்கள் ஊழல் மற்றும் உள்ளூர் பாதுகாப்பு வாதம் உள்ளிட்ட பல தடைகளை எதிர்கொண்டு அதில் இருந்து வெளிவந்து வெற்றி அடைந்துள்ளன. எனக்கு பிரச்சினைகளை வரும் போதெல்லாம் சீன தொழில் முனைவோரின் வலிமையை பற்றி நினைத்துக் கொள்வேன்" என பதிவிட்டுள்ளார்.
மேலும் பல சீன வணிகங்களும் ஏற்றுமதியில் கவனம் செலுத்துவதை அவர் தன்னுடைய பதிவில் சுட்டிக்காட்டி இருக்கிறார். இதனை நாம் ஒரு வலிமையின் அடையாளமாக பார்க்காமல் அவர்களின் தொழில் தந்திரமாக பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். ஏனெனில் உள்ளூரில் இருக்கும் தடைகளால் அவர்களால் தங்களுடைய பொருட்களை சீனாவிற்குள் விற்பனை செய்வது கடினம். ஆனால் ஏற்றுமதி செய்து வெளிநாடுகளில் விற்பனை செய்வது எளிது. அதைத்தான் அவர்கள் பின்பற்றுகின்றனர் எனக் கூறியுள்ளார்.
சீனாவில் தொழில் புரிவோருக்கு என்னென்ன தடைகள் இருக்கின்றன என்பது குறித்த ஒரு செய்தியையும் ஸ்ரீதர் வேம்பு தன்னுடைய எக்ஸ் தளப்பதிவில் பகிர்ந்துள்ளார்.
அந்தந்த மாநில அரசுகள் எப்படி வெளிமாநிலங்களை சேர்ந்த நிறுவனங்கள் தங்கள் மாநிலங்களுக்குள் வந்து பொருட்களை விற்பனை செய்யவும் வணிகம் மேற்கொள்ளவும் தடைகளை ஏற்படுத்தி இருக்கின்றன என்பது அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பகிர்ந்து உள்ள அவர் இதுபோன்ற தடைகளை மீறி புதுமையாக யோசித்து சீன நிறுவனங்கள் ஏற்றுமதியில் கவனம் செலுத்துகின்றன என கூறியுள்ளார்.
ஸ்ரீதர் வேம்புவின் இந்த கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் பின்னூட்டங்களை வெளியிட்டு வருகின்றனர். இதற்கு முன்னதாக ஸ்ரீதர் வேம்பு வெளியிட்ட பதிவில் இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் பங்கு மதிப்புகளை உயர்த்துவதில் கவனம் செலுத்தாமல் நிறுவனத்தின் மொத்த மதிப்பீட்டை 100 பில்லியன் டாலர்களுக்கு மேல் உயர்த்த வேண்டும் என்பதை கவனமாகக் கொண்டிருக்க வேண்டும் என கூறினார்.
கடந்த 20 ஆண்டுகளில் சீனாவில் இதுபோன்ற பல்வேறு நிறுவனங்கள் சர்வதேச நிறுவனங்களாக வளர்ச்சி அடைந்துள்ளன. அவை தங்கள் நிறுவன பங்கு மதிப்பில் மட்டும் கவனம் செலுத்தவில்லை ஒட்டுமொத்தமாக நிறுவனத்தின் மதிப்பை உயர்த்துவதில் கவனம் செலுத்தின என்பதை குறிப்பிட்டு இருந்தார்.
Story Written By: Devika
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications