நிஃப்டி பீஸ் மீதான திடீர் மோகம்.. ஏன்.. என்ன காரணம்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நிஃப்டி ஏன் மிக பிரபலமாக உள்ளது என்பதை பார்ப்பதற்கு முன்பாக இன்றைய சந்தை நிலவரம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். இன்று காலை தொடக்கத்திலேயே சந்தை ஏற்றத்தில் தொடங்கிய நிலையில், முடிவிலும் சற்று ஏற்றத்திலேயே தொடங்கியது.

குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் குறியீடெண் சென்செக்ஸ் 611.55 புள்ளிகள் அதிகரித்து, 56,930.56 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டி 184.6 புள்ளிகள் அதிகரித்து, 16,955.45 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.

ஓப்போ, ஜியோமி. ரைசிங் ஸ்டார், டிக்சான் அலுவலகங்களில் வருமான வரி சோதனை.. ஏன்? ஓப்போ, ஜியோமி. ரைசிங் ஸ்டார், டிக்சான் அலுவலகங்களில் வருமான வரி சோதனை.. ஏன்?

அதெல்லாம் சரி நிஃப்டி பீஸ் என்றால் என்ன? இது முதலீட்டுக்கு ஏற்ற ஆப்சனா? இதன் மீது ஏன் தற்போது ஆர்வம் அதிகரித்து உள்ளது வாருங்கள் பார்க்கலாம்.

நிஃப்டி பீஸ் என்றால் என்ன?

நிஃப்டி பீஸ் என்றால் என்ன?

நிஃப்டி பீஸ் என்பது Benchmark Exchange Traded Scheme ஆகும். இது S&P CNX Nifty Index என்ற இன்டெக்ஸினை போன்ற ஒரு பரிமாற்ற ஆப்சனாகும். இது ஒரு இடிஎப் (ETF) ஆகும். இது நிஃப்டி 50 குறியீட்டில் உள்ள பங்குகளில் முதலீடு செய்யப்படுகின்றது. இந்த நிஃப்டி பீஸ் -ஐ டீமேட் மூலமாக நாம் வர்த்தகம் செய்து கொள்ள முடியும். இதனை பங்கு சந்தை தரகர் மூலமாகவோ அல்லது நேரிடையாக ஆன்லைனிலேயே கூட தொடங்கிக் கொள்ள முடியும்.

கட்டணம் எவ்வளவு?

கட்டணம் எவ்வளவு?

இந்த நிஃப்டி பீஸ்-னை பொறுத்த வரையில் நுழைவு கட்டணம், வெளியேறும் கட்டணம் என்பது கிடையாது. எனினும் டீமேட் மூலமாக நீங்கள் வணிகம் செய்யும்போது 0.05% வர்த்தக கட்டணமாக கொடுக்க வேண்டியிருக்கும். இதில் மிக குறைந்த அளவில் கூட நீங்கள் முதலீடு செய்து கொள்ளலாம்.

சராசரி டர்ன் ஓவர்

சராசரி டர்ன் ஓவர்

நிஃப்டி பீஸ்-ல் டிசம்பர் 21 நிலவரப்படி வரலாறு காணாத அளவு டர்ன் ஓவர் 281 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஜனவரி 1 முதல் டிசம்பர் 20 வரையிலான காலகட்டத்தில் இந்த இடிஎஃப்பில் , சராசரியாக தினசரி 30 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏன் இந்த திடீர் அதிகரிப்பு?என்பதைத் தான் இதில் பார்க்கவிருக்கிறோம்.

வித்தியாசம் என்ன?

வித்தியாசம் என்ன?

இந்த இடிஎஃப்-க்கள் நிஃப்டி, சென்செக்ஸ், பேங்க் நிஃப்டி போன்ற குறியீடுகளை அடிப்படையாக கொண்ட ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாகும்.

அதெல்லாம் சரி இடிஎஃப் மற்றும் இன்டெக்ஸ் ஃபண்டுகளுக்கு இடையில் உள்ள வித்தியாசம் என்ன? இந்த இரண்டு ஆப்சன்களுமே பெரியளவில் வித்தியாசமில்லை. ஆனால் ஃபண்டமெண்டல் காரணிகள் சற்று வித்தியாசப்படுகின்றன.

இன்டெக்ஸ் ஃபண்ட்

இன்டெக்ஸ் ஃபண்ட்

அதாவது இடிஎஃப்கள் பங்குகளை போல எக்ஸ்சேஞ்ச்-களில் வர்த்தகமாகின்றன. இது சந்தையை கண்கானித்து, சந்தைக்கு ஏற்ப சந்தை நிலவரப்படி உங்களால் வெளியேற முடியும். மீண்டும் சந்தைக்குள் நுழைய முடியும்.

ஆனால் ஒரு இன்டெக்ஸ் ஃபண்டினை வாங்கினால் அப்படியில்லை, நிகர சொத்து மதிப்பின் அடிப்படையில் (Net Asset Value) உங்களுக்கு யூனிட்கள் கிடைக்கும். இடிஎஃப்களுடன் ஒப்பிடும்போது கட்டணங்கள் குறைவாக உள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

why sudden craze for Nifty Bees? check details

why sudden craze for Nifty Bees? check details/நிஃப்டி பீஸ் மீதான தீடிர் மோகம்.. ஏன்.. என்ன காரணம்..?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X