இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரக்கூடிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து திகழ்ந்து வருகிறது .குறிப்பாக உற்பத்தி துறையில் தமிழ்நாடு கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் வளர்ச்சி கண்டிருக்கிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை அண்மைக்காலமாக மின்னணு சாதனங்கள் மற்றும் காலணி உற்பத்தியில் மிகுந்த கவனம் செலுத்துகிறது. உலக அளவில் தனித்துவமான பொருட்களின் உற்பத்திக்கு பெயர் போனதுதான் தைவான். காலணிகள் குறிப்பாக ,தோல் அல்லாத காலணி பொருட்கள் மற்றும் மின்னணு சாதனங்கள், செமி கண்டக்டர்கள் உள்ளிட்டவற்றின் உற்பத்திக்கு தைவான் பெயர் பெற்றது. தமிழ்நாடு தற்போது ஒரு குட்டி தைவானாக மாறி வருகிறது.

தமிழ்நாடு அரசு கடந்த சில ஆண்டுகளாகவே மின்னணு சாதனங்கள் மற்றும் காலணி பொருட்கள் உற்பத்தியில் மிகுந்த கவனம் செலுத்துகிறது. இதற்காக தைவானை சேர்ந்த நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து தமிழ்நாட்டில் அந்த நிறுவனங்களை உற்பத்தி ஆலைகளை நிறுவ செய்கிறது தமிழ்நாடு அரசு. சர்வதேச அளவில் வர்த்தக மோதல்கள் ஏற்பட்டு இருப்பதால் பல்வேறு பெரிய பிராண்டுகளும் குறிப்பாக அமெரிக்காவை சேர்ந்த பெரிய பிராண்டுகள் தங்களுடைய உற்பத்திக்காக குறிப்பிட்ட சில நாடுகளை மட்டும் சார்ந்து இருக்காமல் உற்பத்தியை பரவலாக்க வேண்டும் என திட்டமிட்டு இருக்கின்றன.
அவ்வாறு வரும்போது சீனாவுக்கு அடுத்தபடியாக உற்பத்திக்கு உகந்த ஒரு நாடாக இருப்பது இந்தியா . அந்த வகையில் ஆப்பிள் ,நைக், பியூமா , அடிடாஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் தங்களுடைய உற்பத்தி ஆலைகளை நிறுவுவதற்கு முன் வந்திருக்கின்றன .இந்த நிறுவனங்களுக்கெல்லாம் பொருட்களை தயாரித்து வழங்கி வந்த தைவானை சேர்ந்த நிறுவனங்கள் தற்போது தங்களின் உற்பத்தி ஆலைகளை தமிழ்நாட்டில் நிறுவி வருகின்றன.
தமிழ்நாடு அரசு தைவானை கவனமாகக் கொண்டு பல்வேறு உத்திகளை கையாண்டு அங்கு இருந்து முதலீடுகளை ஈர்த்து வருகிறது. இதற்காகவே தமிழ்நாடு தொழில் துறை அமைச்சகம் ஒரு அதிகாரியையே தைவானில் நியமித்து அங்கிருக்கும் நிறுவனங்களின் தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் தான் தைவானை சேர்ந்த Feng Tay, Pou Chen , Hong Fu, TKG Taekwang, Foxconn, Pegatron, Wistron, Delta electronics, நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்களுடைய உற்பத்தி ஆலைகளை நிறுவி இருக்கின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை சாலை போக்குவரத்து, விமான போக்குவரத்து ,கடல்வழிப் போக்குவரத்து ஆகிய மூன்றும் கொண்ட ஒரு மாநிலமாக இருக்கிறது. சிறந்த மனித வளம் கொண்ட ஒரு மாநிலமாகவும் உற்பத்திக்கு தேவையான அனைத்து வளங்களும் கொண்ட ஒரு மாநிலமாகவும் இருக்கிறது.
இதன் காரணமாகவே தைவானை சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் தமிழ்நாட்டில் தங்களுடைய ஆலைகளை நிறுவுவதற்கு முன் வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். தைவான் நாட்டு வணிக கூட்டமைப்பின் தலைவரான சைமன் லீ, தமிழ்நாடு அரசு தங்கள் நாட்டு நிறுவனங்களுக்கு பல்வேறு நிதி ஆதரவுகளையும் தாங்கள் வந்து முதலீடு செய்து உற்பத்தியை தொடங்குவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக பாராட்டியுள்ளார். கூடிய விரைவில் சென்னைக்கு அருகே தைவான் தொழிற் பூங்கா கட்டமைக்கப்பட இருக்கிறது இதுவே தமிழ்நாடு மற்றும் தைவான் இடையிலான தொழில் ரீதியான உறவுக்கு உதாரணம் என லீ தெரிவிக்கிறார்.

இதன் மூலம் தமிழ்நாடு தமிழ்நாடு தொழில் பூங்காக்கள் வியட்நாம் ,கம்போடியா ,இந்தோனேசியாவில் உள்ள தொழில் பூங்காக்களோடு போட்டியிடும் வகையில் வளர்ச்சி அடையும் என லீ நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். காலனி துறை சம்பந்தப்பட்ட ஆய்வு நிறுவனத்தை நடத்தி வரக்கூடிய விக்னேஷ் ஆனந்தன் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு அளித்துள்ள பேட்டியில் தைவான் நாட்டு நிறுவனங்களை பெரும்பாலும் சர்வதேச அளவிலான பிராண்டுகளுக்கு காலணிகளை உற்பத்தி செய்து வழங்குகின்றன இவர்கள் தரமான பொருட்களை மட்டுமே வாங்குவார்கள் என்பதால் தைவான் நாட்டு ஆலை ஒன்று அமைகிறது என்றால் அதற்கு தேவையான பொருட்களை விநியோகம் செய்யக்கூடிய நிறுவனங்களும் அதனை சுற்றி அமைந்துவிடும் அந்த இடமே மேம்பட்டு விடும் என கூறுகிறார்.
தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கும் பனப்பாக்கம் தொழிற் பூங்காவில் மிகப்பெரிய காலனி ஆலை நிறுவப்பட்டு வருவதை சுட்டிக்காட்டும் கிரேட் அட்லாண்டி நிறுவனத்தின் இயக்குனர் அகில் பணருனா, தைவான் நாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருவதன் மூலம் வியட்நாம், கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் சப்ளையர்களும் தற்போது தமிழ்நாட்டை நோக்கி வர தொடங்கி இருக்கின்றனர் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
அமெரிக்கா சீனா உள்ளிட்ட நாடுகளில் இறக்குமதி வரி விதிப்பு நடவடிக்கைகளால் இன்னும் பல தைவான் நிறுவனங்க தமிழ்நாட்டை நோக்கி வருகை தரும் என கோத்தாரி தொழில் குழுமத்தின் தலைவர் ரபீக் அகமது தெரிவிக்கிறார். இதன் மூலம் தமிழ்நாட்டில் பொருளாதாரத்தை மேம்பட்டு, வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
காலணிகள், மின்னணு சாதனங்கள் உற்பத்திக்கு தேவையான உதிரி பாகங்களை தைவானில் இருந்து இறக்குமதி செய்யாமல் தமிழ்நாட்டிலேயே அவை உற்பத்தி செய்வதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தைவான் நாட்டு நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் உற்பத்தியாளர்களுக்காக, சென்னை அருகே ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் சர்வதேச தரத்தில் தைவானிய தொழில்பூங்கா அமைக்கப்பட உள்ளது.
தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா அண்மையில் சட்டப்பேரவையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த தொழில்பூங்கா மூலம் 20 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தரமான உதிரிபாகங்கள் கிடைப்பது தைவான் தொழில் நிறுவனங்கள் இன்னும் நம்பிக்கையுடன் தமிழ்நாட்டில் உற்பத்தியை தொடர உதவும் என அவர் கூறுகிறார்.
அண்மையில் சட்டப்பேரவையில் பேசிய தமிழக அமைச்சர் டிஆர்பி ராஜா, இந்தியாவில் உற்பத்தித்துறை, சேவைத்துறை, ஆட்டோமொபைல், ஜவுளி என ஒட்டுமொத்தமாக அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது என்றார், கடந்த 2021ஆம் ஆண்டு 1.66 பில்லியன் டாலராக இருந்த மின்னணு சாதனங்களின் ஏற்றுமதி 2024இல் 9.56 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது என கூறினார்.
தேசிய அளவில் தோல் மூலம் காலணி உற்பத்தி செய்வதில் முன்னணி மாநிலமாக இருந்த தமிழ்நாடு தற்போது தோல் அல்லாத காலணி உற்பத்தியிலும் முன்னேறி வருகிறது. இதற்கு தைவான் நாட்டு நிறுவனங்களின் வருகையே காரணம்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications