தமிழ்நாடு தான் வேண்டும்.. அடம்பிடித்து ஓடி வரும் தைவான் நிறுவனம்..!

சென்னை: தைவான் நாட்டை சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதில் பெருமளவில் ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக மின்னணு சாதன மற்றும் காலணி உற்பத்திகளில் ஈடுபடக்கூடிய தைவான் நாட்டை சேர்ந்த நிறுவனங்கள் தங்களின் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாட்டையே விரும்புகின்றன.

தைவானை சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தங்களுடைய உற்பத்தி ஆலையை நிறுவி செயல்படுத்தி வருகிறது. ஆப்பிள் நிறுவனத்திற்கு தேவையான ஐபோன்களை தயாரித்து வழங்குகிறது.

தமிழ்நாடு தான் வேண்டும்.. அடம்பிடித்து ஓடி வரும் தைவான் நிறுவனம்..!

சென்னையில் இருக்கும் தைவான் பொருளாதார மற்றும் கலாச்சார மையம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் இந்தியாவில் மொத்தம் 270 தைவான் நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை தமிழ்நாட்டில் தான் இயங்குகின்றன என தெரிவிக்கிறது.

காலணி உற்பத்தி நிறுவனமான Feng Tayஇன் துணை நிறுவனமான லோட்டஸ் தமிழ்நாட்டில் தங்களுடைய உற்பத்தி ஆலையை நிறுவி 40,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளது.

அதேபோல தைவானை தலைமையிடமாக கொண்டு செயல்படக்கூடிய மின்னணு சாதன உற்பத்தி நிறுவனமான பெட்ரான் மற்றும் டெல்டா ஆகியவை தமிழ்நாட்டில் தங்களுடைய உற்பத்தி ஆலைகளை நிறுவி சுமார் 40,000 பேருக்கு வேலைவாய்ப்பு தந்துள்ளது.

தைவானை சேர்ந்த ஷூ தயாரிப்பு நிறுவனங்களான ஷு டவுன் உள்ளிட்டவை தமிழ்நாட்டில் தங்களுடைய உற்பத்தி ஆலைகளை நிறுவ இருக்கின்றன. உலகிலேயே தடகள வீரர்களுக்கான பிராண்டட் ஷூக்களை தயாரித்து வழங்கும் முன்னணி நிறுவனமான பவுச்சின் தமிழ்நாட்டில் 2302 கோடி முதலீடு செய்து உற்பத்தி ஆலையை நிறுவ இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை மொத்தம் 40 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இயங்குகின்றன. இங்கே சுமார் 20 தைவான் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக 2022 ஆம் ஆண்டு வெளியான ஆய்வறிக்கை கூறுகிறது.

தைவான் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் மின்னணு சாதனங்கள் மற்றும் காலணி உற்பத்திகளில் ஈடுபடுவதற்கு ஆர்வம் காட்டுகின்றன என வழிகாட்டி தமிழ்நாடு அமைப்பின் தலைவர் விஷ்ணு ஐஏஎஸ் தெரிவிக்கிறார்.

தைவானை சேர்ந்த நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக எந்த ஒரு சிறப்பு சலுகையோ நிதி உதவியோ வழங்கவில்லை ஆனால் தொழில் தொடங்குவதற்கு சாதகமான ஒரு சூழலை உருவாக்கி தந்திருப்பதால் தைவானை சேர்ந்த நிறுவனங்களின் பிடித்தமான முதலீட்டு பகுதியாக தமிழ்நாடு மாறி இருக்கிறது என கூறுகிறார்.

மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு தான் இந்திய ஜிடிபி-யில் அதிக பங்களிப்பு தரும் மாநிலமாக இருக்கிறது . இங்கே 39 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிற்சாலைகள் இயங்குகின்றன. மேலும் இந்தியாவிலேயே அதிக அளவிலான பெண் பணியாளர்களை கொண்டு தொழிற்சாலைகளை இயக்கி வரும் ஒரு மாநிலம் என்ற பெருமை தமிழ்நாட்டிற்கு உண்டு. தமிழ்நாட்டினை பொறுத்தவரை ஆறு விமான நிலையங்களும், நான்கு பிரதான துறைமுகங்கள் மற்றும் 19 சிறிய ரக துறைமுகங்களும் இயங்குகின்றன.

இந்தியாவின் மொத்த மின்னணு சாதன உற்பத்தியில் 20% தமிழ்நாட்டில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மின்னணு சாதனங்களில் 33 சதவீதம் தமிழ்நாட்டில் இருந்து தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படக்கூடிய காலணிகளில் 39 சதவீதம் தமிழ்நாட்டில் தான் தயாரிக்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+