மைசூர், கர்நாடகா: மைசூர் சாண்டல் சோப்பின் விளம்பர தூதராக பிரபல நடிகை தமன்னாவை நியமனம் செய்திருப்பது கன்னட அமைப்பினரிடம் இருந்து கடும் எதிர்ப்பை கிளப்பியிருக்கிறது. கர்நாடக மாநிலத்திலேயே பல்வேறு பிரபலங்களும் இருக்கும்போது கர்நாடகாவோடு தொடர்பே இல்லாத ஒரு நடிகையை ஏன் மைசூர் சாண்டலின் விளம்பர தூதராக நியமனம் செய்ய வேண்டும் என பல்வேறு கன்னட அமைப்புகளும் கேள்வி எழுப்பியுள்ளன.
கர்நாடக அரசு மைசூர் சாண்டல் நிறுவனத்தின் விளம்பர தூதவராக தமன்னாவை நியமித்து இரண்டு ஆண்டுகளுக்கு 6.2 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது. மைசூர் சாண்டல் சோப் என்பது கர்நாடகாவை பொருத்தவரை ஒரு அழகு சாதனத்துக்காக பயன்படுத்தும் பொருளாக மட்டுமில்லாமல் அந்த மாநிலத்தின் ஒரு பாரம்பரிய அடையாளமாக பார்க்கப்படுகிறது.

100 ஆண்டுகால வரலாறு கொண்ட சோப்:
1916 ஆம் ஆண்டு மைசூர் மகாராஜாவான நல்வாடி கிருஷ்ணராஜா உடையார் மற்றும் திவான் சர் எம் விஸ்வேசரய்யா ஆகியோர் இணைந்து தொடங்கிய நிறுவனம் தான் சந்தன எண்ணெய் ஆலை. 1918 ஆம் ஆண்டு சந்தனத்திலிருந்து மைசூர் சாண்டல் சோப் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. தென்னிந்தியா முழுவதும் இது பிரபலமாகி பின்னர் இந்தியா முழுவதும் சென்று வெளிநாடுகளுக்கும் இந்த சோப்பு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சுதந்திரத்திற்கு பிறகு கர்நாடக மாநிலம் உருவாக்கப்பட்டு, கர்நாடக சோப் மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெட் என்ற அமைப்பின் கீழ் இந்த மைசூர் சாண்டல் நிறுவனம் கொண்டுவரப்பட்டது. 2016 ஆம் ஆண்டில் மைசூர் சாண்டல் சோப் உற்பத்தி செய்யப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவடைந்ததை கர்நாடக மாநில அரசு உற்சாகமாக கொண்டாடியது .100 ஆண்டுகளாக இந்திய சந்தையில் மட்டுமில்லாமல் உலக சந்தையிலும் இந்தியாவின் பாரம்பரியத்தை பறைசாற்றும் ஒரு பிராண்டாக மைசூர் சாண்டல் சோப் பார்க்கப்படுகிறது.
கன்னடர் அல்லாதவருக்கு வாய்ப்பா?
இந்த சூழலில் தான் கன்னடர் அல்லாத ஒரு பெண்ணை இதற்கு எப்படி விளம்பர தூதராக நியமிக்கலாம் என எதிர்க்கட்சியினரும் கன்னட அமைப்பினரும் கேள்வி எழுப்புகின்றனர் . 2006 ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி மைசூர் சாண்டல் சோப்பின் விளம்பர தூதராக நியமனம் செய்யப்பட்டார். அப்போது அவருக்கு 80 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் 2007 ஆம் ஆண்டிலேயே தோனிக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை கேஎஸ்டிஎல் அமைப்பு ரத்து செய்தது.
தோனியால் சரியாக விளம்பர நிகழ்வுகளில் பங்கேற்க முடியாததே இதற்கு காரணம் எனக் கூறப்பட்டது. அப்போது முதலில் மைசூர் சாண்டல் சோப் விளம்பர தூதராக கன்னடர் அல்லாதவர்கள் நியமனம் செய்கின்றனர். முக்தா கோட்ஸே, பார்வதி நாயர் ஆகியோரும் இதன் விளம்பர தூதர்களாக இருந்துள்ளனர். இவர்கள் கன்னடர்கள் அல்ல ஆனால் தற்போது தமன்னாவை நியமனம் செய்திருப்பது தான் பெரிய பிரச்சினையாக உருவாகியுள்ளது.
தமன்னாவுக்கு மட்டும் ஏன் எதிர்ப்பு?
தற்போது கர்நாடகாவில் மொழி மற்றும் அடையாள அரசியல் முக்கியத்துவம் பெற்று வரக்கூடிய சூழலில் தான் இந்த விளம்பர தூதர் பிரச்சனையை எதிர்க்கட்சிகள் பெரிதாக்குகின்றன என சொல்லப்படுகிறது. மைசூர் அரசு குடும்பத்தின் வாரிசுகளில் ஒருவரான மைசூர் குடகு எம்எல்ஏ யதுவீர் வாடியார் தமன்னாவை மைசூர் சாண்டல் சோப்புக்கான விளம்பர தூதவராக நியமித்து ஒப்பந்தம் செய்திருப்பது லாஜிக்கே இல்லாத ஒன்று எனக் கூறியிருக்கிறார்.
கர்நாடக பாரம்பரியத்துடன் தொடர்புடைய ஒரு சோப்பிற்கான தூதுவராக கர்நாடகாவுடன் தொடர்புடைய ஒருவரை நியமித்தால்தானே சரியாக இருக்கும் என கன்னட அமைப்புகள் பலவும் கேள்வி எழுப்புகின்றன. ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே, தீபிகா படுகோனே உள்ளிட்டோர் கர்நாடகாவுடன் தொடர்பு இருப்பவர்களாக இருக்கும்போது ஏன் அவர்களில் ஒருவரை தேர்வு செய்யாமல் தமன்னாவை தேர்வு செய்தீர்கள் என கேள்வி எழுப்பப்படுகிறது.
அரசு தரும் விளக்கம் என்ன?
இந்த பிரச்சனைக்கு பதில் அளிக்கும் வகையில் பேசி இருக்கக்கூடிய கர்நாடக மாநில தொழில்துறை அமைச்சர் எம் பி பாட்டில், விளம்பர தூதர் பொறுப்புக்கு முதலில் நாங்கள் நடிகை ராஷ்மிகாவை தொடர்பு கொண்டோம் ஆனால் அவர் வேறு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருந்தால் தன்னால் வர முடியாது என கூறிவிட்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு கன்னட நடிகைகளை கேட்டோம் அவர்கள் யாரும் முன்வராதாலேயே தமன்னாவை தேர்வு செய்தோம் என விளக்கம் தந்திருக்கிறார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications