பொருளாதாரம், உற்பத்தி துறை, கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு என இந்தியாவிலேயே முன்னிலை மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சிக்கு இதுநாள் வரை தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் கொண்டு முன்னோடியான திட்டமே காரணம்.
Guru Bruno என்ற பெயரில் எக்ஸ் தளத்தில் கணக்கு வைத்திருக்கும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான இவர் அரசு மருத்துவராக இருக்கிறார். தமிழ்நாடு அனைத்திலும் முன்னிலையில் இருப்பதற்கு என்ன காரணம் என தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார். அவர் தமிழ்நாட்டில் என்னென்ன இலவசமாக கிடைக்கின்றன என்பதை பட்டியலிட்டு இருக்கிறார்.
கல்வி ,ஊட்டச்சத்து கூடிய உணவு, பாட புத்தகம், நோட்டுகள் ,பள்ளி செல்வதற்கு தேவையான பை, ஜாமென்ட்ரி பாக்ஸ் ,யூனிபார்ம், காலணி, சைக்கிள், மாணவர்கள் பேருந்துகளில் சென்று வர ஏதுவாக பஸ் பாஸ், பள்ளி மாணவிகளுக்கு தேவையான நாப்கின்கள் , லேப்டாப்புகள் உள்ளிட்டவற்றை அரசு இலவசமாக வழங்குகிறது என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார். தமிழ்நாடு கல்வியில் சிறக்க இந்த இலவசங்கள் முக்கிய காரணம் என குறிப்பிடுகிறார்.

10 மற்றும் 12ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் வாயிலாகவே அவர்களுக்கு தேவையான ஜாதி சான்றிதழ், குடியிருப்புச் சான்றிதழ் ,வருமானச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இது தவிர மலை பாங்கான பகுதிகளில் வசிக்கக்கூடிய மாணவர்களுக்கு ஸ்வெட்டர்கள், பெற்றோரை இழந்து தவிக்கும் மாணவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி ஆகியவை கல்வித்துறையில் வழங்கப்படுகிறது என கூறியுள்ளார்.
சுகாதாரத் துறையை பொறுத்த வரை அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ,ஐரோப்பா , சிங்கப்பூர் ஆகிய நாடுகளோடு ஒப்பிடும்போது சிறந்த ஒரு சுகாதார உள்கட்டமைப்பு தமிழ்நாட்டில் இருக்கிறது என தெரிவித்திருக்கிறார். அரசு மருத்துவமனைகளில் அடிப்படையான இரும்புச்சத்து மாத்திரைகளை தொடங்கி இதயம் மற்றும் நுரையீரல் மாற்று சிகிச்சை வரை இலவசமாக செய்து தரப்படுகிறது என கூறியுள்ளார்.

போக்குவரத்தை பொருத்தவரை இந்தியாவிலேயே சிறந்த போக்குவரத்து வசதி கொண்ட மாநிலமாக இருக்கிறது. 1971 ஆம் ஆண்டிலேயே அனைத்து கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு ,1990 இலே அனைத்து வீடுகளுக்கும் மின்சார இணைப்பு வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. பொதுவாக பெண் குழந்தைகளை பெற்றோர் பள்ளிகளுக்கு அனுப்ப தயங்கிய காலகட்டத்தில் அவர்கள் பள்ளிக்கு அனுப்பப்படுவதை ஊக்குவிக்கும் நோக்கில் அரசு பள்ளிகளில் காலை உணவு மற்றும் மதிய உணவு திட்டம் கொண்டு வந்தது .
இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், இலவசமாக சைக்கிள் வழங்கும் திட்டம் ஆகியவை கொண்டுவரப்பட்டது. அதேபோல மூவலூர் ராமாமிர்தம் அம்மா நினைவு திட்டத்தின் கீழ் 1989 ஆம் ஆண்டிலேயே மணமகள் எட்டாம் வகுப்பு முடித்தவராக இருந்தால் திருமணத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. இது 1996 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு முடித்த மணமகள் என்றால் பத்தாயிரம் ரூபாயாகவும் 2010 ஆம் ஆண்டில் இருபத்தைந்தாயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.
1973 ஆம் ஆண்டு இந்தியாவிலே முதன்முறையாக பெண்கள் காவல்துறையில் இணைக்கப்பட்டது தமிழ்நாட்டில் தான். 1990இல் அரசு வேலையில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு இங்கு தான் வழங்கப்பட்டது. பெண்களுக்கு பள்ளிகளில் நாப்கின் வழங்கும் திட்டம், இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் உள்ளிட்டவை கொண்டுவரப்பட்டன. 1997 ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசு பள்ளிகளில் இரண்டாம் வகுப்பு வரை பெண்கள் மட்டுமே ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர் .
பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், சுய உதவி குழுக்களை மேம்படுத்தும் திட்டம் உள்ளிட்டவையும் தமிழ்நாட்டில் தான் வெற்றிகரமாக கொண்டுவரப்பட்டது பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கிய முதல் மாநிலமும் தமிழ்நாடு தான் என தமிழ்நாட்டின் முன்னோடியான திட்டங்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவரது எக்ஸ் தள பதிவு ஆயிரக்கணக்கானவர்களின் பார்வையையும் லைக்கையும் பெற்றுள்ளது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications