இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் டாடா குழுமம் எந்த ஒரு முதலீட்டையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என அவசர அவசரமாக செய்யாமல் தேவையிருந்தால் மட்டுமே முதலீடு செய்யும் வழக்கத்தை தொன்று தொட்டு பின்பற்றி வருகிறது. இதனாலேயே பங்குச்சந்தையில் இருக்கும் பல டாடா நிறுவன பங்குகள் நீண்ட கால அடிப்படையில் பல மடங்கு லாபத்தை கொடுத்து வருகிறது.
இந்த வகையில் தற்போது சந்திரேசேகரன் தலைமையிலான டாடா சன்ஸ் உயர்மட்ட நிர்வாகத்தின் பார்வை தமிழ்நாட்டின் பக்கம் திரும்பியுள்ளது. ஏற்கனவே சென்னையில் மாபெரும் ஐடி சேவைக்கான அலுவலகத்தை வைத்திருக்கும் நிலையில் சில வருடங்களுக்கு முன் அமைதியாக கிருஷ்ணகிரியில் ஐபோன் தொழிற்சாலை துவங்குவதற்காக டாடா ப்ராஜெக்ட்ஸ் நிலத்தை வாங்கி கட்டுமானத்தை துவங்கியது.

இதை தொடர்ந்து தற்போது டாடா குழுமத்தின் கண் தமிழ்நாட்டின் 2ஆம் மற்றும் 3ஆம் நகரங்கள் பக்கம் திரும்பியுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு சமீபத்தில் உருவாக்கப்பட்ட மணப்பாறை சிப்காட்-ன் 1077 ஏக்கர் நிலத்தில் சுமார் 283.86 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. இது தமிழ்நாடு அரசின் சிப்காட் இணையதளத்தில் GIS Map வாயிலாக உறுதி செய்யப்பட்டு உள்ளது.
டாடா குழுமம் தமிழ்நாட்டில் மணப்பாறை பகுதியை தேர்வு செய்ய என்ன காரணம்..?
டாடா குழுமம் செய்யும் ஒவ்வொரு முதலீட்டுக்கும் பின் பல வருட வளர்ச்சிக்கான அடித்தளம் இருப்பது மட்டும் அல்லாமல் 360 கோணத்திலும் ஆய்வுகளை மேற்கொள்ளும். அந்த வகையில் மணப்பாறை சிப்காட் பகுதியை தேர்வு செய்ய என்ன காரணம் என்பதை தான் பார்க்கப்போகிறோம்.
டாடா குழுமம் இந்த 283 ஏக்கரில் 90 சதவீதம் மாஸ் உற்பத்தி நிறுவனத்தை அமைக்க மட்டுமே சாத்தியம் உள்ளது. அந்த வகையில் அதிகப்படியான திறமையான ஊழியர்களை ஈர்க்க முக்கிய இடமாக மணப்பாறை விளங்குகிறது. குறிப்பாக தென் தமிழகத்தில் இருந்து வேலைவாய்ப்புக்காக சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர்-க்கு செல்வோரை ஈர்க்க சரியான வாய்ப்பாக இருக்கும்.
சமீபத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் டாடா டெக்னாலஜிஸ் நிறுவன கூட்டணியில், 71 ஐ.டி.ஐ.களில் ரூ.2877.43 கோடி மதிப்பில் Industry 4.0 தரத்திலான தொழில்நுட்ப மையங்கள் அமைக்கும் முயற்சியில் இறங்கியது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக ரூ.762.30 கோடி செலவில் 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில்நுட்ப மையங்கள் துவங்கப்பட்டது.
இந்த திட்டம் மூலம் டாடா குழுமத்தின் புதிய தொழிற்சாலைக்கு போதுமான ஊழியர்களை ஒவ்வொரு வருடமும் பெற முடியும் என்ற நோக்கில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் இருந்தும் ஊழியர்களை ஈர்க்க மத்திய தமிழ்நாட்டின் முக்கிய பகுதியான மணப்பாறையில் அமைக்கப்பட உள்ளது.
மேலும் மணப்பாறை சிப்காட் பகுதியில் இருந்து 38 கிலோமீட்டர் தொலைவில் திருச்சி விமான நிலையம், 33 கிலோமீட்டர் தொலைவில் ரயில்வே நிலையம், 371 கிலோமீட்டர் தொலைவில் சென்னை துறைமுகமும், 263 கிலோமீட்டர் தொலைவில் தூத்துக்குடி துறைமுகமும் உள்ளது.
முக்கிய போக்குவரத்தாக இருக்கும் தரைவழியில் 144 கிலோமீட்டரில் சேலம் நெடுஞ்சாலை இணைகிறது. இதனால் அனைத்து பிரிவிலும் போக்குவரத்துக்கு ஏற்ற இடமாக இருக்கிறது. ஏர் இந்தியா தனது விமான சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த இது சிறந்த வழித்தடமாக இருக்கும்.
மணப்பாறையை சுற்றி மதுரை, தேனி, காரைக்குடி, தஞ்சாவூர், கரூர், நாமக்கல், பெரம்பலூர், ஈரோடு. திருப்பூர், கோயம்புத்தூர், பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல் என படித்த இளைஞர்கள் பட்டாளம் அதிகமாக இருக்கும் காரணத்தால் டாடா குழுமத்திற்கு இப்பகுதியின் வளர்ச்சிக்கும், வேவைவாய்ப்பு உருவாக்குவதற்கும் முக்கிய காரணியாக இருக்கும்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications