இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஆகிய அனைத்தும் தங்களுடைய ரீசார்ஜ் திட்டங்களை 28 நாட்களுக்கு வடிவமைப்பது ஏன் தெரியுமா..?
மாதத்தில் 30 -31 நாள் இருக்கும் வேளையில் இதில் 2-3 நாட்களை குறைப்பது மூலம் டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆண்டுக்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வைத்து கூடுதலாக 1 மாதம் வருமானம் ஈட்டி வருகிறது.

ஒரு ஆண்டுக்கு 365 நாட்கள், 28 நாள் ரீசார்ஜ் திட்டமாக வடிவமைத்தால், இதே ஒரு வருடத்தில் 13 முறை ரீசார்ஜ் செய்ய வைக்கிறது (28 × 13 = 364 நாட்கள்) டெலிகாம் நிறுவனங்கள். 30 நாள் திட்டமாக இருந்தால் 12 முறை மட்டுமே கட்டணத்தை செலுத்த வேண்டும்.
இந்த 2-3 நாட்கள் குறைப்பு ஆண்டுக்கு கூடுதலாக ஒரு மாத ரீசார்ஜ் போல மாறுகிறது. அதாவது 12 மாத காலண்டர் ஆண்டுக்கு 13 முறை பணம் செலுத்துகிறோம். இந்த கூடுதல் ஒரு மாத ரீசார்ஜ் திட்டத்திற்கு கூடுதல் டேட்டாவோ, அல்லது கூடுதல் சேவையோ இல்லை. அதே நெட்வொர்க். ஆனால் நிறுவனங்கள் கூடுதல் வருவாய் பெறுகின்றன.
டெலிகாம் சேவையில் இருக்கும் சிக்கலையும் புரிந்துக்கொள்ள வேண்டும். 28 நாட்கள் என்பது சரியாக நான்கு வாரங்கள். இது டெலிகாம் நிறுவனங்களின் பில்லிங், ரிப்போர்ட் தயாரிப்புக்கு எளிதாக இருக்கும். ஒரு மாதத்தில் 28, 29, 30, 31 நாட்கள் என மாறுபடுவதால் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களின் சேவையை கணக்கிடுவதில் பெரும் குழப்பம் உருவாகும். 28 நாள் திட்டம் நிலையான வார அட்டவணை தருகிறது. இது நிறுவனங்களுக்கு திட்டமிடல் எளிதாக்குகிறது இதேபோல் வருவாய் உயர்வும் கிடைக்கிறது.
ஒரு வருடத்தில் 12 மாதங்கள் இருந்தாலும் இந்த உத்தி டெலிகாம் நிறுவனங்களுக்கு கூடுதலாக ஒரு மாத வருவாய் தருகிறது. இது நிறுவனங்களுக்கு பெரிய லாபம் தருகிறது என்பது தான் இதன் அடிப்படை உண்மை.
ஜியோவுக்கு சுமார் 485 மில்லியன் வாடிக்கையாளர்கள் வைத்துள்ளது. சராசரி ரீசார்ஜ் ரூ.300 என்றால் கூடுதல் ஒரு மாத ரீசார்ஜ் ரூ.14,550 கோடி வருவாய் தரும்.2026ஆம் நிதியாண்டில் செப்டம்பர் காலாண்டில் ஏர்டெல் நிறுவனத்தின் ARPU ரூ.256, ஜியோ ரூ.211.4 ஆக உள்ளது. இந்த உத்தி நிறுவனங்களுக்கு பெரிய லாபம் தருகிறது.
டெலிகாம் நிறுவனங்கள் 28 நாள் ரீசார்ஜ் திட்டத்தை பயன்படுத்துகின்றன. இது ஆண்டுக்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வைக்கிறது. கூடுதல் மாத வருவாய் தருகிறது. வார அடிப்படை திட்டமிடலுக்கு உதவுகிறது. வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இது நிறுவனங்களுக்கு பெரிய லாபம் தரும் உத்தி. பண்டிகை கால ரீசார்ஜுக்கு முன் திட்டமிடலாம்.


Click it and Unblock the Notifications