இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானியின் "ஆண்டிலியா" வீட்டைப் பற்றி கேள்விபடாதவர் இருக்க முடியாது. மும்பையில் வானுயர்ந்த அடையாளமாக ஆண்டிலியா பார்க்கப்படுகிறது. இந்த இல்லத்தில் தான் தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். குறிப்பாக இந்த பிரம்மாண்டமான வீட்டில் 27-வது மாடியில் தான் அவர்கள் வசிக்கின்றனர். எதற்காக இந்த கட்டிடத்தை மட்டும் பிரத்தியேகமாக தேர்ந்தெடுத்தனர்? ஏன் 27-வது மாடியில் வசித்து வருகின்றனர்? என்பது குறித்த விவரங்களை தான் இந்தப் பதிவில் பார்க்கவுள்ளோம்.
முகேஷ் அம்பானி அவருடைய மனைவி நிதா அம்பானி, மகன்கள் ஆனந்த் மற்றும் ஆகாஷ் அவர்களின் மனைவி ஸ்லோகா மற்றும் ராதிகா, முகேஷ் அம்பானியின் பேரக்குழந்தைகள் என அனைவரும் ஆண்டிலியா வீட்டில் தான் உள்ளனர். 400,000 சதுர அடி பரப்பளவில் 570 அடி உயரம் கொண்ட இந்த வீட்டின் 27-வது மாடியில் தான் முகேஷ் அம்பானியின் குடும்பம் தங்கி இருக்கிறது.

ஆண்டிலியா வீட்டிற்கு "ஆன்டெ-இல்லா" என்ற கற்பனையான தீவின் பெயர் தான் சூட்டப்பட்டுள்ளது. இந்த தீவு 15-ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த வீட்டின் உட்புற மற்றும் வெளிப்புற டெக்கரேஷனை பொறுத்தவரையில் இயற்கை எழிலில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சூரியன், தாமரை மலர்கள் போன்றவற்றையும் இந்த வீட்டின் வடிவமைப்பில் காணலாம்.
அதோடு இந்த வீட்டில் 49 பெட்ரூம்கள், 168 பார்க்கிங் ஏரியாக்கள், 50 பேர் உட்கார்ந்து படம் பார்க்கும் வகையிலான தியேட்டர், தொங்கும் தோட்டம், நீச்சல் குளங்கள், ஹெல்த் சென்டர், ஸ்பா, ஒரு கோயில் போன்ற பல்வேறு அம்சங்கள் உள்ளது. 26 தளங்கள் முழுமையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் அம்பானி குடும்பத்தினர் 27-வது தளத்தில் தான் வசிக்கின்றனர்.
கடந்த ஆண்டு டைம்ஸ் நவ் உடனான உரையாடலில் ஏன் 27-வது மாடியைத் தேர்ந்தெடுத்து வசித்து வருகின்றனர் என்பதை நிதா அம்பானி பகிர்ந்திருந்தார். மும்பை அதிக மக்கள் புழக்கம் கொண்ட ஏரியா. எனவே சாலைகளின் சத்தத்திலிருந்து விலகி நிம்மதியாக இருக்க வேண்டும் என்றுதான் 27-வது தளத்தை பயன்படுத்த முடிவு செய்ததாக நிதா தெரிவித்தார்/ அதோடு ஒவ்வொரு அறையிலும் சூரிய ஒளி, புதிய காற்று போன்றவற்றைப் பெற்று அமைதியான சூழலில் இருக்க வேண்டும் என்பதால்தான் அங்கு வசித்து வருவதாகவும் தெளிவுபடுத்தினார்.
இவ்வளவு உயரமான இடத்தில் வசிப்பது ஒருவரின் ஆரோக்கியத்திற்கு நல்லதா? என்பதை தெரிந்து கொள்ள சுகாதார நிபுணர்களின் பரிந்துரையையும் கேட்டுள்ளனர். அப்படி கேட்டபோது புனேவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் நுரையீரல் சிகிச்சை நிபுணராக இருக்கும் டாக்டர் மனோஜ் பவர், ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட ஆரோக்கியத்தை பொறுத்து அவர்கள் வசிப்பதற்கு ஏதுவான உயரம் மாறுபடுலாம். இருப்பினும் முப்பதாவது தளத்திற்கு மேலே செல்லும் போது ஆக்சிஜன் மற்றும் காற்றின் அளவு குறைய தொடங்கும். எனவே அனைவருக்கும் ஒரே மாதிரியான ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படாது. இது ஒவ்வொருவரின் உடல் நிலையை பொறுத்தது என்று அந்த டாக்டர் கூறியுள்ளார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications