சென்னை: சென்னை டெல்லி, மும்பை பெங்களூரு போன்ற நகர்ப்புறங்கள் என்று வரும்போது அங்கே காஸ்ட் ஆஃப் லிவிங் அதிகம் என்ன சொல்லப்படுவதுண்டு. இதற்கு முக்கிய காரணம் இந்த நகரங்களில் வீட்டு மனைகள் , வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றின் விலை அதிகமாக இருப்பதே இதற்கு காரணம்.
இங்கே வீடு வாங்குவது என்றாலும் ஒரு பெரிய தொகை தேவை, வாடகைக்கு செல்வதாக இருந்தாலும் மாதந்தோறும் ஒரு கணிசமான தொகையை எடுத்து வைக்க வேண்டும்.

மெட்ரோ நகரங்களின் விரிவாக்கமே வீடுகளின் விலை உயர்வுக்கு பிரதான காரணம். வேலை வாய்ப்பு, கல்வி உள்ளிட்ட தேவைகளுக்கான மக்கள் அதிக அளவில் நகர்ப்புறங்களை நோக்கி பயணம் செய்கின்றனர். இதனால் அங்கே வீடுகளுக்கான தேவை அதிகரிக்கிறது. இது விலையை ஏற்றுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
நகரங்களில் பணிபுரியும் மக்கள் தங்கள் அலுவலகம், பள்ளிக்கூடம் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் ஆகியவற்றுக்கு அருகிலேயே வீடு இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். இது இந்த பகுதிகளில் ரியல் எஸ்டேட் விலையை உயர்த்துகிறது.
குறிப்பாக மெட்ரோ நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகிலேயே வீடு வேண்டும் என மக்கள் தேடுவதால் இந்த பகுதிகளில் வீடுகளின் விலை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் வீட்டு வாடகையும் தொடர்ந்து ஆண்டு தோறும் உயர்ந்தே வருகிறது. வருங்காலத்தில் குறிப்பிட்ட பகுதியில் மெட்ரோ விரிவாக்கம் அல்லது பேருந்து நிலையம் விரிவாக்கம் என்பன உள்ள திட்டங்கள் அறிவிக்கப்படும் போது தானாகவே அங்கே விலை உயர்ந்துவிடும்.
மெட்ரோ நகரங்களை பொறுத்தவரை பில்டர்களின் நம்பகத்தன்மையும் பிரபலமும் கூட வீட்டுமனைகளின் விலை உயர்வதற்கு காரணமாக இருக்கிறது. குறிப்பிட்டு சில பில்டர்கள் அல்லது குறிப்பிட்ட சில நிறுவனங்களின் குடியிருப்புகளை மக்கள் எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுத்து வாங்க தயாராக இருக்கின்றனர்.
கட்டுமான பணிகள் தரமானதாக இருக்கும் , பராமரிப்பு தொல்லை இருக்காது என்பன உள்ளிட்ட நம்பிக்கைகள் காரணமாக மக்கள் எவ்வளவு தொகையாக இருந்தாலும் குறிப்பிட்ட பில்டர்களிடமிருந்து வீடுகளை வாங்குகின்றனர்.
இத்தகைய பில்டர்களும் நகரின் முக்கியமான பகுதிகளில் மட்டுமே அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்கின்றனர் இவை இரண்டுமே இதுபோல விலை உயர்வதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.
பலரும் நல்ல வாடகை வருமானம் கிடைக்கும் என்ற நோக்கத்திலும் மெட்ரோ நகரங்களில் வீடுகளை ஒரு முதலீடாக பார்க்கின்றனர். அதே விலைக்கு ஒரு இரண்டாம் நிலை நகரங்களிலோ அல்லது ஒரு கிராமத்திலோ வீடோ , சொத்தோ வாங்கும்போது நமக்கு அதிலிருந்து குறைவான தொகையே வாடகை வருமானமாக கிடைக்கும்.
இதுவே மெட்ரோ நகரங்களில் ஒரு பெட்ரூம் வீடு என்றால் கூட குறைந்தது 15,000 ரூபாய் வரையிலும் வாடகை வருமானம் கிடைக்கும் எனவே வாடகை வருமானத்தை கருத்தில் கொண்டும் மக்கள் வீடுகளை வாங்குவதால் நகர்ப்புறங்களில் வீடுகளின் விலை அதிகமாக உள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications