டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது, மக்களவையில் நேற்று வக்பு சட்ட திருத்த மசோதாவை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். இதனை அடுத்து இந்த மசோதா மீது பல மணி நேரம் காரசார விவாதம் நடைபெற்றது. இறுதியில் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
வக்பு வாரியத்தை வெளிப்படை தன்மை கொண்டதாக மாற்றுவதே இந்த சட்ட திருத்தத்தின் நோக்கம் என அரசு கூறுகிறது. ஆனால் இது சிறுபான்மையினர் மீதான தாக்குதல் என எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். குறிப்பாக வக்பு வாரியத்திற்கு சொந்தமாக இருக்கும் நிலங்களை குறி வைத்து தான் அரசு இந்த மசோதாவையே கொண்டு வந்திருக்கிறது என எதிர்கட்சிகள் கூறுகின்றன.

வக்பு என்பது அரேபிய சொல் ஆகும், ஆங்கிலத்தில் இதற்கு to hold என அர்த்தம். வக்பு என்றால் இஸ்லாமிய நல அமைப்புகளுக்காகவே இருக்கக்கூடிய சொத்துக்கள் என அர்த்தமாம். வக்பு வாரியத்துக்குட்பட்ட சொத்துக்களை இஸ்லாமிய நலன் அல்லாமல் மற்றவற்றுக்கு பயன்படுத்துவதோ அல்லது அதனை விற்பனை செய்வதோ தடை செய்யப்பட்டு இருக்கிறது. ஒரு முறை வக்பு வாரியத்திற்கு என தங்களுடைய சொத்துக்களை வழங்கி விட்டால் அது அல்லாவிற்கு வழங்கியதாக அர்த்தமாம். எனவே மீண்டும் அந்த சொத்தினை யாராலும் வாங்க முடியாது.
இந்தியாவைப் பொறுத்தவரை வக்பு வாரியம் 12ஆம் நூற்றாண்டில் இருந்து செயல்படுவதாக சொல்லப்படுகிறது. ரயில்வே துறைக்கு அடுத்தபடியாக அதிக அளவில் நிலங்களை சொந்தமாக வைத்திருக்கும் ஒரு அமைப்பு வக்பு வாரியம் தான். மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் வெளியிடும் தகவலின் படி நாடு முழுவதும் வக்பு வாரியத்திற்கு சொந்தமாக 8.7 லட்சம் சொத்துக்கள் இருக்கின்றன. இவற்றின் பரப்பளவு 9.4 லட்சம் ஏக்கர்கள் என சொல்லப்படுகிறது. இந்த சொத்துக்களின் மதிப்பு 1.2 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
இவற்றில் பெரும்பாலானவை உத்தரபிரதேச மாநிலத்தில் தான் இருக்கின்றன. வக்பு வாரியத்தின் கீழ் இருக்கக்கூடிய அசையா சொத்துக்களின் எண்ணிக்கை 8. 72 லட்சம் இவற்றில் 1.2 லட்சம் சொத்துக்கள் உத்தர பிரதேச மாநிலத்தில் இருக்கின்றன. வக்பு வாரியத்தை பொறுத்தவரை 16,813 அசையும் சொத்துக்கள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன.
பல்வேறு மாநிலங்களிலும் வக்பு வாரியத்திற்கு உட்பட்ட சொத்துக்கள் மீது பல்வேறு பிரச்சனைகளும் நிலவுகின்றன. இந்த நிலையில் தான் மத்திய அரசு புதிய சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்திருக்கிறது. இதன் மூலம் மத்திய வக்பு கவுன்சிலில் உள்ள 22 உறுப்பினர்களில் இஸ்லாமியர் அல்லாத இரண்டு பேரை சேர்க்க வேண்டும், மாநில வக்பு கவுன்சிலில் உள்ள 11 உறுப்பினர்களின் இஸ்லாமியர் அல்லாத இரண்டு பேரை சேர்க்க வேண்டும் என இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக முஸ்லிம்களாக உள்ளவர்கள் மட்டுமே தங்களின் சொத்துக்களை வக்பு வாரியத்திற்கு தானமாக வழங்க முடியும் . வக்பு வாரியம் உரிமை கோரும் நிலங்கள் தொடர்பான புகார்களை வருவாய் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களும் விசாரணை நடத்த முடியும். வக்பு தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும் என புதிய மசோதா கூறுகிறது.
வக்பு வாரிய சொத்து விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட திருத்தங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. அரசு வக்பு வாரியம் வெளிப்படை தன்மை கொண்டதாக மாறும் என கூறுகிறது. ஆனால் சிறுபான்மையினருக்கு எதிரான செயல் இது என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்



Click it and Unblock the Notifications