பெங்களூரு: பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள சுங்கச்சாவடியில் சுங்கவரி வசூல் பல மடங்கு உயர்ந்திருப்பதாக கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது.
பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே தேவனள்ளி பகுதியில் சுங்கச்சாவடி இருக்கிறது. இங்கே 202 2024 ஆம் நிதி ஆண்டில் சுங்க கட்டணமாக 308 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளதாம். இது கர்நாடகாவிலேயே எந்த சுங்கச்சாவடிகளிலுல் இவ்வளவு அதிகபட்ச தொகை வசூல் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டு காலத்தில் மட்டும் இந்த தேவனள்ளி சுங்கச்சாவடி 1577 கோடி வருமானமாக ஈட்டி இருக்கிறதாம்.

2023 - 24 ஆம் நிதியாண்டில் கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தை பொருத்தவரை முன்னெப்போதும் இல்லாத அளவு பயணிகளை கையாண்டிருக்கிறது. அதாவது 37.53 மில்லியன் பயணிகள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி உள்ளனர். அதேபோல 4, 39,000 மெட்ரிக் டன்கள் சரக்குகள் இங்கே கையாளப்பட்டுள்ளன. பெங்களூரு விமான நிலையத்திற்கு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததே இந்த சுங்கச்சாவடியில் கட்டண வசூல் அதிகரித்ததற்கும் காரணமாக சொல்லப்படுகிறது.
தேவனள்ளி சுங்கச்சாவடியை பொறுத்தவரை தேசிய நெடுஞ்சாலை 44 இல் அமைந்திருக்கிறது, விமான நிலையத்திற்கு அருகிலேயே இருப்பதோடு மட்டுமில்லாமல் வர்த்தக ரீதியான வாகனங்கள் கர்நாடகாவில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு செல்வதற்கு இந்த சாலையை தான் பயன்படுத்துகின்றன. எனவே இங்கே அதிக சுங்க கட்டணம் வசூலாகியுள்ளது.
இதனிடையே இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரியான மோகந்தாஸ் பை இந்த அதிகபட்ச சுங்க கட்டண வசூல் குறித்து விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவில் எந்த ஒரு விமான நிலையத்திற்கு அருகிலேயும் இப்படி ஒரு சுங்கச்சாவடி கிடையாது பெங்களூரில் மட்டும் ஏன் இப்படி ஒரு நிலை இருக்கிறது என கேள்வி எழுப்பி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .
மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை டேக் செய்துள்ள மோகந்தாஸ் பை இந்த சுங்கச்சாவடி விமான நிலையத்திற்கு அடுத்ததாக அமைந்திருக்க கூடிய பெல்லாரி சாலையில் தானே அமைந்திருக்க வேண்டும் ஏன் விமான நிலையத்திற்கு முன்பு இருக்கிறது என்ற கேள்வியை முன் வைத்துள்ளார். அது மட்டும் இன்றி இந்த சுங்கச்சாவடியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அவர் முன் வைத்துள்ளார்.
இதனிடையே பெங்களூரு மைசூர் எக்ஸ்பிரஸ்வேயில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளிலும் கணிசமான அளவு வருமானம் கிடைத்துள்ளது. கனிமினிக்கே மற்றும் சேஷகிரி சுங்கச்சாவடியில் மொத்தம் 180 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. அதில் கனிமினிக்கே சுங்கச்சாவடியில் மட்டும் 91 கோடி ரூபாயும், சேஷகிரி சுங்கச்சாவடியில் 77 கோடியும் வருமானமாக கிடைத்துள்ளதாம்.
Story Written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications