ஜாம்நகர், குஜராத்: இந்தியாவின் பணக்கார குடும்பம் புத்தாண்டை கொண்டாட எங்கள் பார்ட்டிக்கு வருகை தாருங்கள் என அழைத்தால் யார் தான் வேண்டாம் என்பார்கள். அப்படி அம்பானி அழைப்பை ஏற்று துபாய் செல்லும் திட்டத்தை கைவிட்டு ஒரு தொழிலதிபர் அதிகாலையில் குஜராத்தின் ஜாம்நகருக்கு சென்றிருக்கிறார். அம்பானி குடும்பத்துடன் நெருக்கமாக வேண்டும் என்பதுதான் பல தொழிலதிபர்களின் கனவாக இருக்கிறது. இதன் மூலம் அவர்களின் தொழில் வாய்ப்பு பெருகும் என நம்புகின்றனர்.
அப்படி அம்பானி குடும்பம் அனுப்பிய ஒரு மெசேஜை ஏற்றுக்கொண்டு ஒரு தொழிலதிபர் தன்னுடைய துபாய் பயணத்தை ரத்து செய்துவிட்டு குஜராத்திற்கு சென்றுள்ளார்.பாரத் மெஹ்ரா என்பவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த பதிவினை வெளியிட்டு இருக்கிறார். அதில் துபாய் செல்ல இருந்த தான் கடைசி நொடியில் அந்த திட்டத்தை கைவிட்டு தற்போது குஜராத்தில் ஜாம்நகரில் அம்பானி குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடுகிறேன் என பதிவு செய்திருந்தார். அதிகாலை 3 மணி அளவில் அம்பானி குடும்பத்தினரிடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும் உடனடியாக தன்னுடைய துபாய் திட்டத்தை தான் கைவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார் .

“என்னுடைய புத்தாண்டை நான் துபாயில் கொண்டாடி இருக்க வேண்டும் ஆனால் நான் தற்போது ஜாம்நகருக்கு செல்கிறேன் அங்கே ஒரு முக்கியமான நிகழ்ச்சி நடக்கிறது” என கூறியுள்ளார். முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் புத்தாண்டை குஜராத்தின் ஜாம்நகரில் மிக விமரிசையாக கொண்டாடினர். அப்போது அவர்களுக்கு நெருக்கமான குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும், சில பாலிவுட் பிரபலங்களும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்றவர்களுடன் புகைப்படங்களை எடுத்து தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார் பாரத் மெஹ்ரா. முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி , ஆகாஷ் அம்பானி மற்றும் ஆனந்த அம்பானி, ஈஷா அம்பானி மாமனார் அஜய் பிராமல் உள்ளிட்ட பலரும் இந்த புத்தாண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுடன் எடுத்த படத்தை தான் அவர் சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
பாரத் மெஹ்ரா தன்னுடைய தொழில்நுட்ப மற்றும் ஜாதக ரீதியிலான நிபுணத்துவங்களுக்கு பெயர் போனவர். இவர் பல்வேறு சமூக நல பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்தியாவின் உயர் தொழில் குடும்பங்களின் நெருக்கமான நண்பராகவும் அவர்களுக்கான தொழில் ஆலோசகர் ஆகவும் அவர் பணிபுரிந்து வருகிறார். அம்பானி குடும்பத்தினரோடு மிகவும் நெருக்கமானவர் இவர். அம்பானி இல்ல நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்ள கூடிய நபர். அண்மையில் கூட ஆனந்த் அம்பானியின் பிறந்தநாளுக்கு எம்.எஃப். ஹூசைனின் ஓவியத்தை பரிசாக அளித்தவர்.
Written by: Devika


Click it and Unblock the Notifications