இந்தியாவில் ஸ்விக்கி, ஸோமேட்டோ ஆகிய உணவு டெலிவரி தளங்கள் மற்றும் பிளிங்கிட் உள்ளிட்ட குயிக் காமர்ஸ் தளங்கள் வாயிலாக டெலிவரி ஏஜெண்ட்டுகளாக லட்சக்கணக்கானவர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். பல்வேறு பெண்களும் பகுதி நேரமாக இந்த டெலிவரி ஏஜென்ட் வேலைகளில் பணிபுரிகின்றனர். இந்த வேலையில் இவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுகின்றனர்.
அந்த வகையில் டெலிவரி ஏஜென்ட் ஆக இருக்கக்கூடிய ஒரு பெண் வெளியிட்ட ஒரு வீடியோ 35 லட்சத்திற்கும் அதிகமானவர்களின் பார்வையை பெற்றுள்ளது
அமிர்தா என்ற பெண் தன்னுடைய படிப்போடு சேர்த்து பார்ட் டைம் டெலிவரி ஏஜெண்டாக ஸ்விக்கியில் இணைந்து பணிபுரிந்து வருகிறார் .

இவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவில் பெரிய பெரிய மால்களில் சென்று ஆர்டர்களைப் பெற்று வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்வதில் என்னென்ன சிரமங்கள் இருக்கின்றன என்பதை பதிவிட்டுள்ளார். அதில் ஸ்விக்கி 5 கிலோமீட்டருக்குள் செய்யப்படும் டெலிவரிகளுக்காக எங்களுக்கு 25 ரூபாய் ஊதியமாக வழங்குகிறது. ஆனால் இவ்வாறு பெரிய பெரிய மால்களில் சென்று ஆர்டர்களை பெற்று வருவது சவாலான பணியாக இருக்கிறது என கூறியுள்ளார் .
எந்த மாலில் சென்று தான் ஆர்டரை பெற்றேன் என்பதை குறிப்பிடவில்லை ஆனால் பலரும் இது கேரளாவில் இருக்கக்கூடிய லூ லூ மாலாக இருக்கும் என கருதுகின்றனர் . அவர் மாலில் இருக்கும் ஒரு உணவகத்தில் எங்களுக்கு ஆர்டர் கிடைக்கிறது நான் செல்கிறேன் நான் அந்த மாலின் வளாகத்திற்குள் சென்று என்னுடைய வாகனத்தை குறிப்பிட்ட இடத்தில் நிறுத்திவிட்டு அந்த உணவகத்திற்கு சென்று உணவை பெற்றுக் கொண்டு மீண்டும் திரும்ப வந்து என்னுடைய வாகனத்தை எடுப்பதற்கே 20 நிமிடங்கள் வரை ஆகிவிடுகிறது என கூறுகிறார்.
இது போன்ற மாலில் எடுக்கப்படும் டெலிவரிகளால் டெலிவரி ஏஜெண்டுகளுக்கு நேரம் அதிக அளவில் விரயம் ஆகிறது ஆனால் எங்களுக்கு கிடைக்கும் தொகையோ குறைவானது தான் என கூறியுள்ளார். தங்களுக்கென பிரத்தியேக பார்க்கிங் இடமோ அல்லது எளிதாக உணவகங்களுக்கு சென்று டெலிவரி பார்சல்களை பெற்றுக் கொள்ளவோ எந்தவித வசதியும் செய்து தரப்படவில்லை எனக் கூறினார்.
குறிப்பாக வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் சமயங்களில் மாலில் சென்று குறிப்பிட்ட உணவகத்திற்குள் பார்சலை பெற்று திரும்ப மாலை விட்டு வெளியே வருவது என்பது பெரும்பாடாக இருக்கிறது என கூறியுள்ளார் . இந்த பிரச்சனையை போக்குவதற்கு எங்களுக்கு இரண்டு முக்கியமான வசதிகளை செய்து தர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மால்களில் டெலிவரி பார்ட்னர்களுக்கு என பார்சல்களை கலெக்ஷன் செய்து கொள்வதற்கான பிரத்தியேக இடத்தை கீழ்த்தளங்களிலேயே உருவாக்கித் தர வேண்டும், இதன் மூலம் நாங்கள் தேவை இல்லாமல் மாலில் அலைந்து திரிந்து பார்சலை பெறுவதில் ஏற்படும் கால விரயம் தவிர்க்கப்படும் எனக் கூறியுள்ளார்.
அடுத்ததாக இதுபோன்ற மால்களில் சென்று ஆர்டர்களை பிக்கப் செய்து டெலிவரி செய்யக்கூடிய நபர்களுக்கு ஸ்விக்கி போன்ற நிறுவனங்கள் கூடுதலாக ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கையும் முன் வைத்திருக்கிறார்.
அவருடைய இந்த பதிவு லட்சக்கணக்கானவர்களின் பார்வையையும் பின்னூட்டங்களையும் பெற்றுள்ளது. பலர் அவருடைய கருத்து ஆதரவாகவும் சிலர் இது உங்களுடைய வேலை நீங்கள் செய்து தான் ஆக வேண்டும் என்பன உள்ளிட்ட கருத்துக்களையும் பதிவு செய்துள்ளனர்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications