மும்பை: புதிய இடங்களுக்கு பயணம் செய்து தங்கள் அனுபவங்களை வெளியிடக்கூடிய வீடியோ விளாகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அமீபாலன் என்ற ஒரு டிராவல் விளாகர் தான் 10 ஆண்டுக்கான அமெரிக்கா விசா பெற்றதன் மூலம் தான் பெருமளவிலான தொகையை மிச்சப்படுத்தி இருப்பதாகவும் பல்வேறு நாடுகளுக்கும் எளிதாக பயணம் செய்ய முடிவதாகவும் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் இதனை பகிர்ந்துள்ள அவர், 10 ஆண்டுகளுக்கான அமெரிக்க விசாவை வாங்கியதால் ஐக்கிய அரபு அமிரகம், துருக்கி உள்ளிட்ட நாடுகளுக்கு குறைந்த கட்டணத்திலேயே பயணம் செய்ய முடிந்தது என கூறியுள்ளார்.

எனவே வெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணம் செய்ய வேண்டும் பல்வேறு நாடுகளை சுற்றி பார்க்க வேண்டும் என எண்ணக்கூடிய இந்தியர்கள் கண்டிப்பாக பத்தாண்டு கால அமெரிக்க விசாவை பெற்றுக் கொள்ள வேண்டும் என கூறி இருக்கிறார்.
அமி பாலன் கடந்த ஆண்டு 10 ஆண்டுகளுக்கான அமெரிக்க விசாவை பெற்றாராம். இது தன்னுடைய வெளிநாட்டு பயணங்களை எளிமைப்படுத்தியுள்ளது என கூறியுள்ளார். உதாரணமாக அமெரிக்க விசா இருப்பவர்கள் துருக்கிக்கு செல்லும்போது ஈ விசாவை வெறும் 60 டாலர்களில் பெற்று விடலாம். அதேபோல ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்லும்போது உங்களிடம் அமெரிக்க விசா இருந்தால் பாதி விசா கட்டணத்தை செலுத்தினாலே போதுமாம்.
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் அமெரிக்க விசாவையும் உடன் வைத்திருந்தால் 25 நாடுகளுக்கு அவர்கள் ஆன் அரைவல் விசா அணுகலை பெற முடியும் என கூறியுள்ளார். மேலும் அமெரிக்க விசா வைத்திருப்பவர்கள் மெக்சிகோ ,கோஸ்டாரிக்கா ,பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு குறைந்த கட்டணத்தில் விசா பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவருடைய இந்த பதிவு எக்ஸ் பக்கத்தில் பலரின் கவனத்தை பெற்றுள்ளது. ஒரு பயனர் அன்னையில் தான் நானும் இதை உணர்ந்தேன், என்னிடம் அமெரிக்க விசா இருக்கிறது என்பதால் நான் துபாய் சென்று இருந்த போது என்னிடம் பெரிய அளவில் எந்த ஆவணங்களையும் அவர்கள் கேட்கவில்லை இமிகிரேஷன் பணிகள் சில நொடியிலேயே நடந்து முடிந்து விட்டன எனக் கூறியுள்ளார்.
ஒரு பயனர் அமெரிக்க விசா உங்களிடம் இருந்தால் மற்ற நாடுகள் எளிமையாக உங்களுக்கு விசா வழங்கிவிடும் எனக் கூறியுள்ளார். சுற்றுலா மற்றும் தொழில் நோக்கங்களுக்காக வருகை தருபவர்களுக்கு அமெரிக்க அரசு பி1 மற்றும் பி2 என்ற விசிட்டர் விசாக்களை வழங்குகிறது.
இந்த விசாக்களின் வேலிடிட்டி 10 ஆண்டுகள் இருந்தாலும் இவர்கள் தொடர்ச்சியாக அமெரிக்காவில் ஆறு மாதங்களுக்கு மேல் தங்க முடியாது. ஆறு மாதம் தங்கிவிட்டு வேறு இடங்களுக்கு சென்று மீண்டும் அமெரிக்காவுக்கு பயணம் செய்யலாம்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications