வரி மேல் வரி போட்டு இந்தியாவை பகைத்து கொண்டாலும், இந்த பொருளுக்கு டிரம்ப் நம்மகிட்ட தான் வந்தாகனும்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கும் 50 சதவீத வரிவிதிப்பை கொண்டு வந்துள்ளார். ஆனால் குறிப்பிட்ட சில துறைகளை மட்டும் அவர் இந்த வரியிலிருந்து விலக்கி வைத்திருக்கிறார் .அதில் முக்கியமானது மருந்து துறை.

மருந்துகள்: இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 50% வரி விதிப்பு பொருந்தாது என அமெரிக்க அரசு தெரிவித்திருக்கிறது. இதன் பின்னணியில் ஒரு வலுவான காரணம் இருக்கிறது. என்னதான் இந்தியாவை டிரம்ப் முறைத்துக் கொண்டாலும் இந்த ஒரு விஷயத்தில் அவரால் இந்தியாவை பகைத்துக் கொள்ளவே முடியாது அது மருந்துகள்.

வரி மேல் வரி போட்டு இந்தியாவை பகைத்து கொண்டாலும், இந்த பொருளுக்கு டிரம்ப் நம்மகிட்ட தான் வந்தாகனும்!

ஜெனரிக் மருந்து: அமெரிக்காவிற்கு தேவையான பெரும்பாலான மருந்துகள் இந்தியாவிலிருந்து தான் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படக்கூடிய மருந்து பொருட்களுக்கு டொனால்ட் ட்ரம்ப் 50 சதவீத வரியை விதித்தால் அந்த நாட்டில் மருந்துகளின் விலை பல மடங்கு உயரும் இது அமெரிக்க மக்களுக்கு செலவை அதிகரிக்கச் செய்து அமெரிக்க மக்களே டிரம்புக்கு எதிராக திரும்பக் கூடிய ஒரு நிலை உண்டாகும்.

இந்தியாவை சார்ந்திருக்கும் அமெரிக்கா: எனவே தான் டிரம்ப மருந்துகளுக்கு இந்த வரி விதிப்பை நடைமுறைப்படுத்தவில்லை. பல்வேறு நாடுகளுக்கும் தேவையான ஜெனரிக் மருந்துகளை இந்தியாவில் இருக்கும் நிறுவனங்கள் தான் உற்பத்தி செய்து வழங்குகின்றன. அமெரிக்காவை பொறுத்தவரை குறைந்த விலையில் இந்தியாவிலிருந்து மருந்து மாத்திரைகளை கொள்முதல் செய்கிறது. இதனால் தான் இந்திய மருந்து துறைக்கு இந்த வரி விதிப்பில் இருந்து விலக்கு அளித்துள்ளது.

மருந்துகளுக்கு வரி விலக்கு: அமெரிக்காவில் பயன்படுத்தப்படக்கூடிய ஜெனரிக் மருந்துகளில் பாதிக்கும் மேற்பட்டவை இந்தியாவிலிருந்து தான் செல்கின்றன . ஏற்கனவே மருத்துவ செலவுகள் அதிகரித்து விட்டதாக அமெரிக்க மக்கள் புகார் கூறும் நிலையில் மருந்துகளுக்கு இறக்குமதி வரி விதித்தால் அங்கே மருந்துகளின் விலை உயருன். பிராண்ட் பெயர் கொண்ட மருந்துகளின் மலிவான பதிப்புகளை தான் ஜெனரிக் மருந்துகள் என அழைக்கிறோம். இதனை அமெரிக்கா அதிக அளவில் இந்தியாவில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது.

அமெரிக்கர்களுக்கு தான் சிக்கல்: அமெரிக்க மருத்துவர்களால் மக்களுக்கு பரிந்துரை செய்யப்படும் 10இல் 9 மருந்துகள் இதுபோன்ற ஜெனரிக் மருந்துகள் தான் . இது அமெரிக்க மக்களுக்கு பல பில்லியன் டாலர்களை சேமிக்க உதவுகிறது. 2022 ஆம் ஆண்டில் மட்டும் இந்திய ஜெனரிக் மருந்துகள் காரணமாக 219 பில்லியன் டாலர்களை அமெரிக்க மக்கள் சேமித்திருப்பதாக ஒரு தகவல் வெளியானது.

இந்திய நிறுவனங்கள்: சைடஸ் லைஃப் சயின்ஸ், டாக்டர் ரெட்டீஸ், கிளாண்ட் பார்மா, பயோகான் உள்ளிட்ட மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் ஏற்றுமதியில் பெரும்பாலான பகுதிகளை அமெரிக்காவிற்கு தான் அனுப்புகின்றன . 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு 30.5 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான மருந்து பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன. இது கடந்த ஆண்டை 9.3 சதவீதம் அதிகம் இந்தியாவின் ஒட்டுமொத்த மருந்து ஏற்றுமதியில் அமெரிக்காவிற்கு செல்லக்கூடிய மருந்துகளின் பங்களிப்பு 32 சதவீதம். இப்படி ஜெனரிக் மருந்துகளுக்காக அமெரிக்கா பெருமளவில் இந்தியாவை சார்ந்திருப்பதால் தான் டிரம்ப் நிர்வாகம் மருந்துகளுக்கான இறக்குமதி வரியை உயர்த்தவில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+