இந்தியாவுக்கு U-Trun எடுக்கும் அமெரிக்க வாழ் NRI-கள்.. என்ன நடக்குது..? உண்மை காரணம் என்ன?

அமெரிக்க வாழ்க்கை, அமெரிக்காவில் வேலை என்பது ஒவ்வொரு மிடில் கிளாஸ் மக்களின் வாழ்நாள் கனவு. இப்படி கிடைத்த வாய்ப்பை கையில் எடுத்துக்கொண்டு முந்தியடித்து ஒடிப்போடி பிளைட்டில் ஏறிய இந்திய மக்கள் பலர் தற்போது அமெரிக்காவை விட்டு பொட்டி படிக்கையை கட்டிக்கொண்டு தொடர்ந்து தாய் நாட்டிற்கு திரும்புவது தொடர் கதையாகி வருகிறது. ஏன் இந்த நிலை..? எதற்காக இத்தகைய முடுவுகளை என்ஆர்ஐ-கள் எடுக்கின்றனர்..?

சமீபத்தில் கனடாவில் இருந்து இதேபோல் ஒரு பெரும் கூட்டம் தாய் நாட்டிற்கு திரும்பியது நினைவிருக்கும், இதற்கான காரணமாக அப்போது விலைவாசி உயர்வு, மருத்து சேவை கட்டணங்கள் அதிகரிப்பு, போதுமான வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என பல காரணங்கள் கூறப்பட்டது.

 இந்தியாவுக்கு U-Trun எடுக்கும் அமெரிக்க வாழ் NRI-கள்.. என்ன நடக்குது..? உண்மை காரணம் என்ன?

குறிப்பாக படித்து முடித்து வேலை தேடும் மக்களுக்கு இந்த விலைவாசி உயர்வு பெரும் சுமையாக இருந்த காரணத்தால் கனடா-வை விட்டு வெளியேறினர். அமெரிக்காவில் தற்போது என்ன நடக்கிறது..?

அமெரிக்காவில் இருந்து வெளியேறும் இந்தியர்கள் பெரும்பாலும் சொல்லும் முக்கிய காரணம், தனிப்பட்ட அல்லது குடும்ப காரணங்கள். ஆனால் இதை தாண்டி குடியுரிமை விதிகள், விசா கட்டணங்கள் என டிரம்ப் நிர்வாகம் தொடர்ம்து இந்திய மக்களுக்கு நிரந்தரமற்ற சூழ்நிலையை அமெரிக்காவில் உருவாக்கி வருகிறது. இதனால் விசா காலம் முடியும் மக்கள், விசா ரினிவல் செய்ய முடியாத மக்கள் என பல பிரிவினர் அமெரிக்காவை விட்டு வெளியேறி வருகின்றனர்.

அடுத்தாக அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தை மிகவும் மோசமாக உள்ளது, மெட்டா, மைக்ரோசாப்ட், துவங்கி ஸ்டார்ட்அப், பன்னாட்டு நிறுவனங்கள் வரையில் அனைத்து தரப்பு நிறுவனங்களும் தற்போது பணிநீக்கம் செய்து வருகிறது.

ஏஐ தொழில்நுட்ப முன்னேற்றத்தால் நிறுவனங்களில் ஊழியர்கள் தேவை பெரிய அளவில் குறைந்து வருகிறது. இதனால் நிறுவனங்கள் அதிகளவிலான பணிநீக்கத்தை குறைக்க தற்போது இருக்கும் ஊழியர்களை முழுமையாக பயன்படுத்தும் முயற்சியில் நிர்வாகம் களத்தில் இறங்கியுள்ளதால் புதிய வேலைவாய்ப்புகள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

இதனால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் புதிய வேலை வாய்ப்புகளை பெற முடியாதவர்களும் தற்போது தாய் நாட்டிற்கு திரும்பி வருகின்றனர்.

அடுத்தது தான் முக்கியமான விஷயம், இந்தியாவில் தற்போது அதிகளவிலான GCC நிறுவனங்கள் உருவாகியிருக்கும் காரணத்தாலும், பெரிய டெக் நிறுவனங்கள் அனைத்தும் இநதிய வர்த்தகத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருகிறது. இதனால் அதிக சம்பளத்தில், உயர் பதவிகளில் வேலைவாய்ப்புகள் கிடைக்கிறது.

குடும்ப காரணம், தனிப்பட்ட காரணத்திற்காக இந்தியாவில் செட்டிலாக திட்டமிடம் பலர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தும் இந்தியாவுக்கு தானாக கிளம்பி வருகின்றனர்.

இப்படி 2026ல் மட்டும் சுமார் 7300 பேர் இந்தியாவுக்கு திரும்பியுள்ளனர், இதில் பல உயர் அதிகாரிகளும் அடக்கம்.

அடோப் நிறுவனத்தின் இன்ஜினியரிங் பிரிவின் டைரக்டரான கௌரி சங்கர் ரவிந்தனர் இந்தியாவுக்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்தது மட்டும் அல்லாமல் இந்திய அடோப் நிறுவனத்தின் CXO அதிகாரியாக பதவியேற்கிறார், இதேபோல் மெட்டா நிறுவனத்தின் சீனியர் இன்ஜினியரிங் பிரிவின் தலைவரான பாலாஜி குருராஜன் அமெரிக்காவில் இருந்து 18 ஆண்டுகளுக்கு பின்பு பெங்களூருக்கு மாறுகிறார், இதேபோல் ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் B2B பிரிவின் CTO அதிகாரியான Srinivas Narayanan பெற்றோர்களுடன் இருப்பதற்காக இந்தியாவுக்கு இடம் பெயர்ந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+