அமெரிக்க கருவூலத் துறை கடந்த சில தினங்களுக்கு முன்பு அதன் நாணய கண்காணிப்புப் பட்டியலில் இருந்து இத்தாலி, மெக்சிகோ, தாய்லாந்து மற்றும் வியட்நாம், இந்தியா உள்ளிட்ட நாடுகளை நீக்கியது.
அமெரிக்கா இந்திய வணிகங்கள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்ட அமெரிக்க கருவூலச் செயலர் ஜேனட் யெலன் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாடலுக்கு பிறகு சில மணி நேரங்களில், அமெரிக்காவில் இத்தகைய அறிவிப்பானது வெளியானது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளில் ஏதேனும் வர்த்தக கொள்கை அல்லது நடவடிக்கை ஸ்திரத்தன்மை இல்லாமல் இருந்தால், சந்தேகம் இருப்பின் இத்தகைய நடவடிக்கையினை அமெரிக்கா எடுக்கலாம்.
எதற்காக இந்த கண்காணிப்பு?
அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளில் ஏதேனும் வர்த்தக கொள்கை அல்லது அதனதன் ஸ்திரத்தன்மை இல்லாமல் இருந்தால் அதன் நாணய நடைமுறைகள் மற்றும் மேக்ரோ பொருளாதார கொள்கையை அமெரிக்கா கூர்ந்து கவனிக்கும். அப்படிப்பட்ட ஒரு பட்டியலில் இருந்து தான் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா சேர்க்கப்பட்டது.
தற்போது யார் யார் இந்த பட்டியலில்?
சீனா, ஜப்பான், கொரியா, சிங்கப்பூர், தாய்வான், மலேசியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் கரன்சிகள் கண்காணிப்பு பட்டியலில் உள்ளன. இதில் சீனா அன்னிய செலாவணி தலையீட்டை வெளியிடவில்லை மற்றும் அன்னிய செலாவணி குறித்த வெளிப்படைத்தன்மை இல்லாதது என சில காரணங்களுக்காக சீனா உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கரன்சியில் தாக்கம்
இந்த அறிக்கையில் ஜூன் 2022 வரையிலான 4 காலாண்டு வளர்ச்சியினை முக்கிய வர்த்தக நாடுகளை அமெரிக்கா ஆய்வு செய்து வருகின்றது.
எந்தவொரு நாடும் தங்களது வளர்ச்சியினை தக்கவைத்துக் கொள்ள பலவிதமான நடவடிக்கைகளை எடுத்து வரலாம். எனினும் அவற்றின் தாக்கம் நாட்டின் நாணயத்தில் எதிரொலிக்கலாம்.
சந்தேகம் குறைந்ததா?
கொரோனா பெருந்தொற்றுநோய் காலம் தொடங்கியதிலிருந்து இந்தியா இப்பட்டியலில் இடம்பிடிப்பது இது மூன்றாவது முறையாகும். இதன் மூலம் அமெரிக்காவின் சந்தேகம் என்பது நீங்கியுள்ளது அல்லது குறைந்துள்ளது எனலாம். இந்த மாற்றத்தால் இந்திய - அமெரிக்க வணிகம் என்பது மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படியும் நடக்கலாம்
சில நாடுகள் தங்களின் ஏற்றுமதியின் மூலம் பலன் பெறுவதற்காக தங்களது நாட்டு நாணயங்களின் மதிப்புகளை கூட்டி குறைத்து மதிப்பிடுவதுண்டு. இதைக் கண்காணிக்க அமெரிக்கா இந்த கண்காணிப்பு அமைப்பை வைத்துள்ளது. மேற்கூறிய அமெரிக்காவின் இந்த அமைப்பு தொடர்ந்து இதனை தொடர்ந்து கண்காணித்து வருகின்றது.
இந்தியா நீக்கம் ஏன்?
மேற்கூறிய எந்தவிதமான மோசடிகளிலும் இந்தியா ஈடுபடவில்லை. இந்தியா நாணய மதிப்பில் எந்த முறைகேடுகளும் செய்யவில்லை என்பதால், கண்காணிப்புப் பட்டியலில் இருந்து, இந்தியாவை அமெரிக்கா நீக்கியுள்ளது. இவ்வாறு நீக்கியுள்ளது இந்தியாவுக்கு வர்த்தக ரீதியில் பலன் அளிக்கும். இதன் மூலம் இனி இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா வர்த்தகத்தினை மேம்படுத்த வாய்ப்புகள் அதிகம்.
இப்படியும் இருக்கலாம்
சமீப காலமாக சர்வதேச நாடுகளின் வளர்ச்சியானது மந்த நிலையில் இருந்து வரும் நிலையில், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் வலுவாக காணப்படுகிறது. குறிப்பாக உலக நாடுகள் பணவீக்கத்த்ன் பிடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் இந்தியா அதனை சாதுர்யமாக குறிப்பிட்ட லெவலில் வைத்துள்ளது. இதற்கிடையில் அமெரிக்கா இத்தகைய முடிவினை எடுத்திருக்கலாம் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications