டெல்லி: பொதுவாகவே இந்திய ஜிடிபி மற்றும் தொழில்துறை வளர்ச்சிகளில் தென்மாநிலங்களின் பங்கு அதிகமாக இருக்கிறது .ஆனால் மத்திய அரசின் வரி பகிர்வு என பார்க்கும்போது தென் மாநிலங்கள் குறைவான பகிர்வையே பெறுகின்றன.
அதே வேளையில் நாட்டின் பொருளாதாரத்தில் குறைந்த பங்களிப்பை தரக்கூடிய ஆனால் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள் அதிக வரி பகிர்வை பெறுகின்றன. இந்த பிரச்சனை நீண்ட காலமாகவே இந்தியாவில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

விரைவில் நடக்க இருக்கும் எல்லை வரையறை நடவடிக்கை கவனமாக கையாளப்படாவிட்டால் இந்த பிரச்சனை பெரும் பிரச்சனையாக உருவெடுக்கும் என்கிறார் பிரபல எழுத்தாளர் ஆனந்த் நீலகண்டன். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் இவர் எழுதியுள்ள கட்டுரையில் அதிக மக்கள் தொகை கொண்ட பெரிய மாநிலங்களை சிறு சிறு மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என்ற ஒரு கருத்தையும் முன் வைக்கிறார்.
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நம்மிடம் பெரிய அளவிலான மக்கள் தொகை இருந்தது. ஆனால் மக்களுக்கு போதிய உணவு அளிக்க பணம் இல்லை ,எனவே பணக்கார நாடுகளின் உதவியை நாம் நம்பி இருந்தோம் எனவே அரசு மக்கள் தொகையை குறைத்து இந்த பிரச்சனையை தீர்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தது.
அவ்வாறு அனைத்து மாநிலங்களும் தங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என மத்திய அரசு கூறிய போது இதில் முன்னிலை வகித்தவை தென் மாநிலங்கள் தான். மக்கள் தொகை வளர்ச்சியை குறைத்தன ஆனால் வடக்கே இருக்கும் மாநிலங்கள் இதனை எளிதாக அடைந்து விட முடியவில்லை என ஆனந்த் நீலகண்டன் குறிப்பிட்டுள்ளார்.
இதுவே தற்போது இந்திய கூட்டாட்சி முறைக்கு பெரிய சவாலை கொண்டு வந்திருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு மாநிலத்திற்கும் செலுத்தப்படும் வரி வருவாய் விகிதத்தில் மத்திய அரசு 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. இது வட இந்திய மாநிலங்களை விட சிறப்பாக செயல்பட்டு வரக்கூடிய கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்கள் கூடுதல் வரி பகிர்வு கேட்டு மத்திய அரசிடம் அடிக்கடி கெஞ்ச வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.
எனவே மக்கள் தொகை அதிகமாக இருக்கிறது என்ற அடிப்படையில் மட்டுமே அவற்றுக்கு அதிக அளவிலான நிதி ஒதுக்கப்படுவது தென் மாநிலங்களில் இருக்கும் அரசுகளை கோபமடைய செய்கிறது என அவர் தன்னுடைய கட்டுரையில் சுட்டிக்காட்டுகிறார்.
தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநில முதலமைச்சர்கள் தங்கள் மாநிலங்களில் மக்கள் தொகை அதிகரிக்க வேண்டும் என கூறும் நிலைக்கு கொண்டு சென்று இருக்கிறது, இந்த பிரச்சனைக்கு தீர்வு காண பெரிய மாநிலங்களை மக்கள் தொகை அடிப்படையில் சிறு சிறு மாநிலங்களாக பிரிக்கலாம் என ஒரு கருத்தாக்கம் எழுந்துள்ளது. அதிக மக்கள் தொகை இருப்பதாலேயே வட மாநிலங்கள் சமூக ரீதியாக பின் தங்கி இருப்பதற்கு ஒரு காரணம் எனவும் இவர் தன்னுடைய கட்டுரையில் கோடிட்டு காட்டுகிறார்.
அதேவேளையில் அண்மையில் பிரிக்கப்பட்ட உத்தராகண்ட், தெலுங்கானா, சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் விரைவான வளர்ச்சியை பெற்று தங்களுடைய குடி மக்களுக்கு சிறந்த வாழ்க்கை வழங்குகிறது என்பதையும் அவர் குறிப்பிடுகிறார்.
எனவே இது போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களை சிறு சிறு மாநிலங்களாக பிரிப்பது அவற்றை நிர்வகிப்பதற்கும் அந்த பகுதியை சேர்ந்த மக்களின் வளர்ச்சிக்கும் பெரிய அளவில் உதவும் என அவர் குறிப்பிடுகிறார். இவ்வாறு அதிகாரத்தை பரவலாக்கும் போது தற்போது இருக்கக்கூடிய ஏற்றத்தாழ்வு சரி செய்யப்பட்டு அனைவரும் உள்ளடக்கிய ஒரு ஜனநாயக அமைப்பு உருவாகும் என அவர் கூறியுள்ளார்.
இத்தகைய பெரிய மாநிலங்களை சேர்ந்த மத அல்லது ஜாதி உணர்வுகளை அனுபவித்து வரக்கூடிய அரசியல் கட்சிகள் இத்தகைய பிரிவுகளை அனுமதிக்க விரும்ப மாட்டார்கள் என்பதையும் அவர் தன்னுடைய பதிவில் தெரிவித்துள்ளார். இவர் ஒரு மாநிலத்தில் ஐந்து கோடி தான் மக்கள் தொகை என்பதை ஒரு வரம்பாக கொண்டு மாநிலங்களை பிரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
வட மாநிலங்களில் இந்தி மொழியின் ஆதிக்கம் காரணமாக ஆவாதி, போஜ்புரி, மைதிலி, மார்வாரி உள்ளிட்ட மொழிகள் அழிந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் அதிக மாநிலங்கள் உருவாகும்போது அதிக தலைநகரங்கள் உருவாகும் அவ்வாறு நடக்கும் போது வளர்ச்சி அனைத்து மாநிலங்களுக்கும் பிரிந்து செல்லும் இது அனைவரும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு ஊக்குவிக்கும் என அவர் தன்னுடைய கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications