இந்தியாவை சேர்ந்த உயர் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்கள் பலரும் இந்தியாவை விட்டு வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருவதாக கோடக் பிரைவேட் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது. சிறந்த வாழ்க்கை தரம் ,தொழில் செய்வதற்கு சாதகமான சூழல் உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவை சேர்ந்த உயர் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்களில் 22 சதவீதம் பேர் வேறு நாடுகளுக்கு இடம்பெயர விரும்புவதாக தெரிவித்து இருக்கிறார்கள்.
கோடக் பிரைவேட் நிறுவனம் ஒரு தனியார் ஆய்வு நிறுவனத்தோடு சேர்ந்து 150 உயர் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்களிடம் ஆய்வு நடத்தியது. இந்தியாவில் 25 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்களை உயர் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்கள் என அழைக்கிறோம். அப்படி இந்தியாவில் 2.83 லட்சம் பேர் 25 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பை கொண்டவர்களாக இருக்கின்றனர். இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 2.83 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

2028ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 4.3 லட்சம் ஆக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இவர்களின் பல்வேறு நபர்களும் இந்தியாவை விட்டு வேறு நாடுகளுக்கு குடியேறுவதில் ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் 7500 உயர் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்கள் இந்தியாவிலிருந்து வெளியேறினார். 2023 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 5,00 ஆகவும் 2024ஆம் ஆண்டில் 4300 ஆகவும் இருக்கிறது.
பாரம்பரியமாக குறைந்த வரி விதிப்பு, நல்ல தொழில் வாய்ப்புகள் மற்றும் அரசியல் பொருளாதார ஸ்திரத்தன்மை உள்ளிட்டவை தான் உயர் சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்கள் இந்தியாவிலிருந்து வேறு நாடுகளுக்கு இடம்பெயர்வதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
தற்போது இந்த காரணங்கள் மாறி இருக்கின்றன என ஆய்வறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது. அதாவது இந்தியாவில் இருந்து வெளியேறும் உயர் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்கள் வாழ்க்கை தரம், தங்களுடைய குழந்தைகளுக்கான கல்வி வாய்ப்புகள் மற்றும் பருவநிலை மாற்ற பாதிப்பு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு தான் இந்தியாவிலிருந்து வெளியேறுகின்றனர் என கூறுகிறது.
தங்கள் குழந்தைகளின் எதிர்கால உயர்கல்வியை கருத்தில் கொண்டு பலரும் வெளிநாடுகளில் செட்டிலாக விரும்புகிறார்களாம். இவ்வாறு இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என எண்ணூம் உயர் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்களின் வயது பெரும்பாலும் 36லிருந்து 40க்குள் இருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு செல்ல விரும்புகிறார்களாம்.
குறைந்த வரி, நல்ல கல்வி முறை, சிறந்த வாழ்க்கை தரம் உள்ளிட்டவையே இந்த நாடுகளுக்கு இவர்கள் செல்வதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. சர்வதேச அளவில் உயர் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறுவதில் பிரிட்டன் முதலிடத்திலும் சீனா இரண்டாவது இடத்திலும் இந்தியா மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன. இவர்களில் பெரும்பாலானவர்களின் விருப்பமான இடமாக ஐக்கிய அரபு அமீரகம் இருக்கிறது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications