85 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்.. காரணம் என்ன?

இந்தியாவில் தற்போது மோசடி சம்பவங்கள் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனால் மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் இந்தியாவில் பல வாட்ஸ்அப் கணக்குகளுக்குத் தடை விதித்துள்ளது. வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் பல மில்லியன் கணக்கான நபர்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், இந்த தளத்தை தவறாகப் பயன்படுத்தும் நபர்களை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தனிநபரின் பிரைவசி பாதுகாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோசடி சம்பவங்களைத் தவிர்க்கும் பொருட்டு, வாட்ஸ்அப் செப்டம்பர் மாதம் இந்தியாவில் அதன் பாலிசியை மீறிய 8.5 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகளைத் தடை செய்தது. செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 30 வரை, 8,584,000 கணக்குகள் நிரந்தரமாக தடை செய்யப்பட்டன, இதில் 1,658,000 கணக்குகள் பயனர்களிடமிருந்து எந்தவொரு ரிப்போர்ட்டிங் அறிவிப்பும் வரும் முன்பே தடை செய்யப்பட்டன என்று வாட்ஸ் அப்பின் புதிய IT விதிமுறைகள் 2021-இன் கீழ் மாதாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 85 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்.. காரணம் என்ன?

இந்தியாவின் 600 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட பிரபலமான மொபைல் மெசேஜிங் தலமான வாட்ஸ் அப் நாட்டு மக்களிடமிருந்து 8,161 புகார்களை பெற்றுள்ளது. அவற்றுள் 97 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் மேலும் நாட்டிலிருக்கும் Grievance Appellate Committee-இலிருந்து இரண்டு உத்தரவுகளைப் பெற்று, அதற்கு ஏற்ப வாட்ஸ் அப் மெசேஜ் தளத்தில் மாற்றங்களை செய்ததாகவும் மாதாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"நாங்கள் எங்கள் வேலையில் வெளிப்படைத்தன்மையுடன் இருப்போம் மற்றும் எதிர்கால அறிக்கைகளில் எங்கள் முயற்சிகள் பற்றிய தகவல்களைச் சேர்த்து வெளியிடுவோம்" என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த முயற்சிகளை மேற்பார்வையிட பொறியாளர்கள், தரவு விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சட்ட அமலாக்கத் துறை, ஆன்லைன் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகள் ஆகியவற்றில் எக்ஸ்பீரியன்ஸ் பெற்ற நிபுணர்கள் அடங்கிய குழுவையும் வாட்ஸ் அப் பணி அமர்த்தியுள்ளது.

பயனர்களுக்கு தேவையில்லை எனும் பட்சத்தில் ஒரு கான்டெக்ட்டை பிளாக் செய்யவும் ரிப்போர்ட் செய்யவும் நாங்கள் உதவுகிறோம். பயனர்களின் கருத்துக்களை உன்னிப்பாக கவனித்து தவறான அக்கவுண்ட்களை தடுப்பதிலும், பாதுகாப்பை மேம்படுத்துவதிலும், நேர்மையை பாதுகாப்பதிலும் தொழில் வல்லுனர்களோடு தொடர்ந்து ஈடுபடுகிறோம் என்று வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மோசடியான கணக்குகளை மூன்று நிலைகளில் கண்டறியப்படுகிறது. ஒன்று பயணர் பதிவு செய்யும்போது, மற்றொன்று செய்தி அனுப்பும்போது, இன்னொன்று அனுப்பப்படும் மெசேஜ்களுக்கு எதிர்மறையான ஃபீட்பேக் வரும்போது.. அதாவது ஒரு பயனர் தங்களுக்கு தேவையில்லை என்னும் பட்சத்தில் ரிப்போர்ட் அல்லது பிளாக் செய்யலாம் இதை வைத்து மோசடி கணக்குகள் கண்டறியப்படுகின்றன.

இப்படி கண்டறியப்பட்ட கணக்குகளில் ஆகஸ்ட் 1, 2024 மற்றும் ஆகஸ்ட் 31, 2024 க்கு இடையில், 8,458,000 வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டன, இவற்றில் 1,661,000 கணக்குகள் பயனர்களிடமிருந்து எந்த புகாரும் வருவதற்கு முன்பே தடை செய்யப்பட்டன.

வாட்ஸ் அப் தொடர்ந்து பயணர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. மிகவும் பாதுகாப்பான தளத்தை வழங்குவதற்கான வாட்ஸ்அப்பின் நடவடிக்கை மக்களிடையே பாராட்டைப் பெற்று தந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+