இந்தியாவில் சியாமி பிராண்டு மொபைல் போன்கள் வந்த பிறகு மற்ற பெரிய பிராண்டுகளின் மொபைல் போன்களின் விற்பனை சரிந்து விட்டதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் இந்தியாவில் நம்பர் ஒன் விற்பனையை செய்துவரும் சியாமி புதிதாக இன்னொரு பிராண்டை இந்தியர்களுக்காக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய பிராண்டில் என்னென்ன அம்சங்கள் இருக்கும் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
சியாமி ஸ்மார்ட்போன்
சீனாவின் சியாமி ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் உலக அளவில் மூன்றாவது இடத்தையும் இந்தியாவில் முதல் இடத்தையும் பெற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சியாமி மொபைல்போன் பிராண்ட்கள் மற்றும் தொலைக்காட்சிகள் இந்திய நுகர்வோர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சியாமி ஸ்மார்ட்போன்
சீனாவின் சியாமி ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் உலக அளவில் மூன்றாவது இடத்தையும் இந்தியாவில் முதல் இடத்தையும் பெற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சியாமி மொபைல்போன் பிராண்ட்கள் மற்றும் தொலைக்காட்சிகள் இந்திய நுகர்வோர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய பிராண்ட்
இருப்பினும் சியாமி புதிய பிராண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. பயனர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் ஆகியோர்களிடம் இருந்து நிறைய கருத்துகளை பெற்ற சியோமி நிறுவனம் மென்பொருளில் சில மாற்றங்களை செய்து புதிய பிராண்டை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. சியோமி நிறுவனம் தனது புதிய பிராண்டில் புதிய தொடர் ஸ்மார்ட் போன்களை தயாரிக்கலாம் என்றும் இந்த புதிய பிராண்ட் வித்தியாசமான ஆண்ட்ராய்ட் அனுபவத்தை தரும் என்றும் கூறப்படுகிறது.
புதிய பிராண்ட் பெயர்
இந்த புதிய பிராண்டுக்கான பெயரை இன்னும் சியாமி முடிவு செய்யவில்லை என்றும் இருப்பினும் A என்ற எழுத்தில் முடியும் வகையில் அல்லது Poco போன்ற பெயரில் வரலாம் என்றும் கூறப்படுகிறது.
புதிய தொழில்நுட்பம்
சியாமி மொபைல் போன்ன்களில் முக்கிய அம்சமாக இருந்த MIUI இருந்த நிலையில் புதிய பிராண்டில் புதிய வகை தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யவிருப்பதாகவும், இதனை பயன்படுத்தும் அனுபவத்தை வாடிக்கையாளர்கள் பெறும்போது பெரும் ஆச்சரியம் காத்திருக்கின்றது என்றும் கூறப்படுகிறது.
விளம்பரம்
சியாமி பெரிய அளவில் விளம்பரம் இல்லாமல் இந்திய நுகர்வோர் மத்தியில் பிரபலமான நிலையில், சியாமியின் புதிய பிராண்டை பிரமாண்டமாக விளம்பரப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications