மத்திய அரசு ஊழியர்களையும், ஓய்வூதியர்களையும் மகிழ்ச்சியில் குத்தாட்டம் போட வைக்கும் வகையில் முக்கியமான ஒரு அறிவிப்பு வந்துள்ளது. ஆமாம், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தும் 8வது சம்பள கமிஷன் உருவாக்குவது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷன் மூலம் அதிகப்படியான சம்பளத்தையும் நன்மைகளையும் பெற்று வரும் வேளையில், மத்திய அரசு 8வது சம்பள கமிஷன் உருவாக்குவது குறித்த கோரிக்கையைப் பெற்றுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

இந்திய ரயில்வே தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் சங்கம் (IRTSA), மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பயிற்சி துறை (DoPT) கீழ் இயங்கும் பணியாளர், மக்கள் குறைதீர்ப்புகள் மற்றும் ஓய்வூதியங்கள் துறை அமைச்சகத்திற்கு 8வது சம்பள கமிஷன் உருவாக்குவது குறித்தும், அதன் தேவை மற்றும் அவசியம் குறித்தும் கடிதம் எழுதியுள்ளது.
இந்த கடிதத்தில் 8வது ஊதியக்குழு அமைப்பதன் அவசியத்தையும், தற்போதைய அனைத்து சம்பள முரண்பாடுகளையும் (Anomalies) களைய வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்துள்ளது. மேலும், எதிர்காலத்தில் புதிய முரண்பாடுகள் எதுவும் உருவாகாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
ஏன் 8வது சம்பள கமிஷன் தேவை?: பொதுவாக, மத்திய அரசு சம்பள கமிஷன் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் இடைவெளியில் உருவாக்கப்படுகிறது. இந்த சம்பள கமிஷனின் நோக்கம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதியம், கொடுப்பனவுகள், பிற சலுகைகள் / நன்மைகள் போன்றவற்றை ஆய்வு செய்து, ஊழியர்களின் சம்பள கட்டமைப்பை மறுபரிசீலனை செய்து, மாற்றங்களைப் பரிந்துரைக்கும் முயற்சியாகும்.
குறிப்பாக, 3, 4 மற்றும் 5வது சம்பள கமிஷன் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம், கொடுப்பனவு உயர்வு மற்றும் பணி நிலைமைகள் ஆகியவற்றைக் காலா காலத்தில் மறுபரிசீலனை செய்ய நிரந்தர கட்டமைப்பை உருவாக்குவது அவசியம் என்று பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.
IRTSA-வின் முக்கிய கோரிக்கைகள் என்ன?: IRTSA-வின் கடிதத்தில் பல முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. முதல் கோரிக்கை புதிய மத்திய ஊதியக் குழு அமைப்பது தான். அடுத்ததாக, பல்வேறு ஊழியர் குழுக்களின் சம்பளங்களில் இருக்கும் வேறுபாடுகள் மற்றும் முரண்பாடுகளைச் சரிசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தையும் விட முக்கியமாக மத்திய அரசு ஊழியர்கள் சம்பளம் மற்றும் கொடுப்பனவு, ஊழியர்களின் பணியாற்றும் நிலைமை, பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் மற்றும் பதவி வகைகள் தொடர்பான அனைத்து முரண்பாடுகளையும் தீர்க்க பே கமிஷனுக்கு போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் IRTSA கோரிக்கை விடுத்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications