கடந்த சில வாரங்களாகவே அதானி குழும பங்குகள் கடும் சரிவினைக் கண்டு வருகின்றன. இது இந்திய சந்தையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி வந்தது. எனினும் தற்போது இந்திய சந்தையானது மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. நிபுணர்கள் தொடர்ந்து இந்திய பங்கு சந்தையானது ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கின்றனர்.
இதற்கிடையில் மீண்டும் இந்திய சந்தையில் அன்னிய முதலீடுகள் என்பது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீடுகள் திரும்பலாம்
இந்திய முதலீட்டாளர்கள் மட்டும் அல்ல, அன்னிய முதலீட்டாளர்களும் இந்திய சந்தையில் மீண்டும் 3.1 ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான சந்தைக்கு திரும்ப தொடங்கியுள்ளன. தொடர்ந்து இரண்டாவது மாதமாக ஜனவரியிலும் இந்திய சந்தையானது ஆல் டைம் உச்சத்தினை எட்டியுள்ளது.
மீண்டும் அதிகரிக்கலாம்
அதானி குழுமத்தின் மீதான ஹிண்டர்ன்பர்க் அறிக்கையானது பல குற்றச்சாட்டுகளை சுமத்திய நிலையில், அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியினை சந்தித்தன. இதன் தாக்கம் இந்திய சந்தையிலும் இருந்தது. இதன் காரணமாக அன்னிய முதலீடுகளானது வெளியேறியது. இதற்கிடையில் இந்திய சந்தைகள் மீண்டும் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாதகமான அறிவிப்புகள்
தொடர்ந்து பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களும் தங்களது சாதகமான அறிவிப்பினை கொடுத்து வரும் நிலையில், இது சந்தையில் சாதகமான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. அதானி குழும பங்குகளில் உள்ள தாக்கம் என்பது, இந்திய சந்தையில் இருக்காது. ஏனெனில் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் வலுவான வளர்ச்சியினை கண்டு வருகின்றன. ஆக இது சந்தைக்கு சாதகமான விஷயமாகவும் பார்க்கப்படுகின்றது.
நீண்டகால நோக்கில் எப்படியிருக்கும்?
அதானி குழுமத்தின் 10 நிறுவனங்கள் தற்போது 130 பில்லியன் டாலருக்கும் அதிகமான சந்தை மதிப்பினை இழந்துள்ளன. இது இந்திய வளர்ச்சியில் பெரு முட்டுகட்டையாக இருந்தாலும், இந்திய அரசு இந்திய பொருளாதாரத்தினை விரிவாக்கம் செய்யும் பொருட்டு பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ஆக ஹிண்டர்ன்பர்க்கின் அறிக்கை என்பது அதானி குழும நிறுவனங்களில் தாக்கத்தினை ஏற்படுத்தினாலும், நீண்டகால நோக்கில் இந்திய பங்கு சந்தையானது நேர்மறையாக இருக்கலாம் என்றே நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சர்வே என்ன சொல்லுது?
ப்ளூம் பெர்க் நிறுவனம் நடத்திய ஆய்வில் 22 லோக்கல் பண்ட் மேனேஜர்களில், 16 பேர், அதானி குழும பங்குகள் சரிவில் இருந்தாலும் இந்திய பங்கு சந்தையானது மேற்கோண்டு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆய்வில் 2 பேர் மட்டுமே சந்தை சரியலாம் என்றும் கூறியுள்ளனர். மற்றவர்கள் சந்தையில் பெரியளவில் மாற்றம் இருக்காது என்றும் கூறியுள்ளனர். எப்படியிருப்பினும் எஸ்&பி சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 என இரண்டும் தற்போதைய நிலைகளை விட சற்றே ஏற்றத்தில் முடிவடையலாம் என கணித்துள்ளனர்.
மோடி தலைமையிலான அரசு எப்படியிருக்கும்
அதே நேரம் அதானி குழுமத்தின் தாக்கம் என்பது பிரதமர் மோடியின் வளர்ச்சியில் எந்த தாக்கத்தினையும் ஏற்படுத்தாது என பெரும்பான்மையானவர்கள் கூறுகின்றனர். முன்னதாக அதானி குழுமத்தின் மீதான தடுமாற்றம் என்பது ஆரம்பத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் கொண்டிருந்தாலும், தற்போது அது பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை. தற்போது மீண்டும் சந்தை மீதான தாக்கம் என்பது நேர் மறையாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications