உலகம் முழுவதும் தற்போது ஐடி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. பல்வேறு நிறுவனங்கள் மனிதர்களை வேலையில் இருந்து நீக்கிவிட்டு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டன.
ஏஐ ஏஜென்ட்கள் மூலம் மனிதர்கள் செய்து வந்த வேலையை நிறுவனங்கள் நிறைவேற்றி வருகின்றன.இத்தகைய சூழலில் காக்னிசண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ரவிக்குமார் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மேலும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் எனக் கூறியிருக்கிறார். உலகில் பல்வேறு நிறுவனங்களும் ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கை ,புதிதாக ஊழியர்களை வேலைக்கு எடுக்காமல் இருப்பது என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரக்கூடிய சூழலில் காக்னிசன்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரியான ரவிக்குமார் இந்த ஒரு தகவலை தெரிவித்து இருக்கிறார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நேரடியாக பொறியாளர்களை மாற்றி விடாது என குறிப்பிட்டு இருக்கும் அவர் பொறியாளர்களின் திறன்களை மாற்றி அமைக்கக்கூடிய வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இருக்கும் என தெரிவித்திருக்கிறார். ஏஐ உங்களுக்கு கூடுதல் வேலைகளை உருவாக்கும் என குறிப்பிட்டு இருக்கும் அவர் தற்போது இருப்பதை போன்ற வேலைகளாக அவை இருக்காது என விளக்கம் தந்துள்ளார் .
காக்னிசண்ட் நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஆதரவோடு செய்யப்படும் வேலைகளின் செயல்திறன் 37 சதவீதம் அதிகமாக இருக்கிறது என குறிப்பிட்டு இருக்கிறார். மிகச்சிறந்த திறமை கொண்ட பொறியாளர்களை விட செயற்கை நுண்ணறிவு நுட்பங்கள் இன்னும் சிறப்பாக செயல்படுகின்றன கூறியுள்ள அவர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சிக்கலான வேலைகளையும் எளிமையாக்கியுள்ளது என கூறியுள்ளார்.
ஆனால் மற்ற நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் இதற்கு மாற்றான ஒரு கருத்தை தெரிவித்துள்ளனர். ஆந்திரோபிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி டாரியோ அமிடோ ஏஐ தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது இதன் காரணமாக தொழில்நுட்பம், கன்சல்டிங் பிரிவுகளில் எல்லாம் மனிதர்களின் வேலை பறிக்கப்படும் என தெரிவித்திருக்கிறார் .அடுத்து ஒன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளில் வேலைவாய்ப்பு சந்தையில் பெரிய மாற்றத்தை இந்த தொழில்நுட்பம் கொண்டு வரப் போகிறது என குறிப்பிட்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாம் நினைத்ததை விட வேகமாக இருக்கிறது அதனால் ஏற்பட போடும் போகும் தாக்கம் நாம் தற்போது கூறுவதை விட இன்னும் அதிகமாக இருக்கும் என தெரிவித்திருக்கிறார். 2025 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து தற்போது வரை 130 நிறுவனங்கள் 61 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்திருக்கின்றன. இதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்றாக ஏஐ தொழில்நுட்பம் இருக்கிறது.


Click it and Unblock the Notifications