பெங்களூரு IT ஊழியர்களுக்கு ஷாக்!80% பேர் வேலையை இழக்கப்போகிறார்களா? AI-யால் இன்னும் என்ன ஆகுமோ?

நம்ம ஊரு சிலிக்கான் வேலியான பெங்களூரு இப்போ ஒரு பரபரப்பான விவாதத்தில் சிக்கியிருக்கிறது. அடுத்த 3 வருடத்தில் 80% ஐடி ஊழியர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடும் என ஒரு ஐடி இன்சைடர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெக்னாலஜியை உருவாக்குறவங்களே அந்த டெக்னாலஜியால (AI) பாதிக்கப்பட போறாங்களா?

யாரெல்லாம் IT Slaves என்று அழைக்கப்படுகிறார்கள்? இந்த AI புயல்ல இருந்து தப்பிக்க போகும் அந்த 20% அதிர்ஷ்டசாலிகள் யார்? அவங்ககிட்ட இருக்குற அந்த ஸ்பெஷல் ஸ்கில் என்ன? உங்கள் கேரியரை தக்கவைக்க நீங்க இப்போவே செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

பெங்களூரு IT ஊழியர்களுக்கு ஷாக்! 80% பேர் வேலையை இழக்கப்போகிறார்களா? AI-யால் இன்னும் என்ன ஆகுமோ?

பெங்களூருவை சேர்ந்த ஒரு ஐடி நிபுணர் சமீபத்தில் பணிநீக்கம் காரணமாக தனது வேலையை இழந்தார். ஆனால் அவர் அதற்காக கவலைப்படவில்லை. மாறாக தான் எடுத்த ஒரு புத்திசாலித்தனமான முடிவு இப்போது தன்னை காப்பாற்றியுள்ளதாக ரெடிட் தளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் ஏன் அப்படி சொல்கிறார்? அவர் தரும் எச்சரிக்கை என்ன? தெரிந்து கொள்வோமா..

பெங்களூரு நகரில் சொந்தமாக வீடு வாங்குவதற்கு முன்பு, ஐடி ஊழியர்கள் மிகவும் கவனமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறும் அந்த ஐடி நிபுணர், சொந்த வீடு வாங்காமல் வாடகை வீட்டிலேயே தங்குவது என்று தான் எடுத்த முடிவை, தனது வாழ்நாளில் எடுத்த மிகச்சிறந்த முடிவுகளில் ஒன்று என கூறுகிறார்.

Also Read

அந்த நபர் ஒரு பெரிய டெக் நிறுவனத்தில் AI Migration திட்டத்தில் நேரடியாக பணியாற்றிக் கொண்டிருந்தார். கடந்த ஆண்டே 2 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை வாங்கும் அளவுக்கு அவரிடம் வசதி இருந்தது. ஆனால் அதை செய்யவில்லை. அலுவலகத்துக்கு அருகிலேயே ஒரு வாடகை வீட்டில் தங்கினார்.

கடந்த வாரம் அவர் வேலையிழந்த போது, சொந்த வீடு வாங்காத அந்த முடிவை நினைத்து நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஏஐ துறையில் பணியாற்றியதன் மூலம், ஐடி துறையில் அடுத்த சில ஆண்டுகளில் நடக்கப்போகும் மாற்றங்களை அவர் முன்கூட்டியே கணித்தது தான் இதற்குக் காரணம் எனவும் கூறுகிறார்.

பெங்களூருவின் ரியல் எஸ்டேட் சந்தை முழுக்க முழுக்க ஐடி ஊழியர்கள் வாங்கும் பெரிய வீட்டுக் கடன்களை நம்பியே இயங்குகிறது. ஆனால், அந்த சுழற்சி இப்போது முடிவுக்கு வருவதாகவும் கூறுகிறார். ஐடி துறையில் இருப்பவர்களில் 70-80% பேர் சேவை சார்ந்த நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள். வாடிக்கையாளர்கள் விரும்பினால், அடுத்த 1-3 ஆண்டுகளில் அவர்களின் வேலையை AI கருவிகளால் முழுமையாக மாற்ற முடியும்.

Recommended For You

உள்நாட்டு நடைமுறைகள் மற்றும் மேலாண்மை காரணங்களால் இது முழுமையாக நடக்க 3-5 ஆண்டுகள் ஆகலாம். அப்படி நடந்தால் 70 - 80% பேரின் நிலைமை கஷ்டம் தான். மீதமுள்ள 30% பேருக்கு மட்டுமே வேலை இருக்கும். அதுவும் ஏதேனும் தவறு நடந்தால் பழிபோட ஒரு மனிதன் தேவை என்பதற்காகவும், AI கருவிகளை நிர்வகிக்கவும் மட்டுமே அவர்கள் பணியில் வைக்கப்படுவார்கள் என்கிறார்.

ஐடி நிறுவனங்கள் AI-யை காரணம் காட்டி ஊழியர்களை நீக்குவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கிறது. ஒன்று குறைவான ஊழியர்களை வைத்து AI மூலம் அதிக வேலை செய்கிறோம் என்று காட்டுவது நிறுவனத்தின் மதிப்பைக் கூட்டும். இரண்டாவது சம்பள செலவை குறைப்பதன் மூலம் நிறுவனத்தின் லாபத்தை அதிகரிக்க முடியும்.

பெங்களூர் ரியல் எஸ்டேட் நிலவரம்?

பெங்களூர் ரியல் எஸ்டேட் விலை குறித்து அவர் ஒரு நடுநிலையான கருத்தை கொண்டுள்ளார். விலைகள் அதிரடியாக வீழ்ச்சி அடையாது, ஏனெனில் இந்திய வீட்டு உரிமையாளர்கள் நஷ்டத்திற்கு விற்க விரும்ப மாட்டார்கள். ஆனால், புதிய வீடுகளின் வரத்து அதிகரிப்பதாலும், ஐடி ஊழியர்களின் தேவை குறைவதாலும் விலைகள் இனி உயராது என்கிறார்.

உங்கள் மொத்த நிகர மதிப்பில் 150%-க்கு மேல் மதிப்புள்ள வீட்டை வாங்காதீர்கள். மற்றவர்கள் வாங்குகிறார்களே என்ற பயத்தில் அவசரப்பட்டு முடிவு எடுக்காதீர்கள். வேலையில்லா காலத்திலும் EMI கட்டத் தேவையான பணத்தை கையிருப்பில் வைத்திருங்கள். அப்போது தான் சம்பளமே வராவிட்டாலும், உங்கள் வீட்டை காப்பாற்றி கொள்ள முடியும். புதிய திட்டங்களில் புரோக்கர்கள் விலையை செயற்கையாக உயர்த்த வாய்ப்புள்ளது. எனவே பழைய வீடுகளை வாங்குவது லாபகரமாக இருக்கும்.

தொழில்நுட்ப மாற்றங்கள் வேகமாக நடக்கும் இந்த சூழலில், பெரிய கடன்களை சுமப்பதை விட, நிதி சுதந்திரத்துடன் இருப்பதே புத்திசாலித்தனம் என்பதை இந்த பெங்களூரு டெக்கியின் அனுபவம் நமக்கு உணர்த்துகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+