பிட்காயினில் இனி முதலீடு செய்யலாமா..? 1.50 லட்சம் டாலரை எட்டுமாம்.. வந்தது பலே கணிப்பு..!

2024 ஆம் ஆண்டில் தங்கம்,ஈக்விட்டி சந்தைகள் என அனைத்தையும் மிஞ்சி கிரிப்டோ கரன்சி முதலீடு தான் பெரிய அளவில் லாபமீட்டி தந்தது. இதுவரை இல்லாத அளவாக பிட்காயின் 2024 ஆம் ஆண்டில் மட்டும் 120 சதவீத வளர்ச்சியை கண்டது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் தேர்வு செய்யப்பட்டு விட்ட உடன் பிட்காயின் மதிப்பு தொடர்ந்து ஏற்றத்திலேயே இருந்தது. ஒரு பிட்காயின் மதிப்பு 1 லட்சம் டாலர்களைக் கடந்தும் வர்த்தகமானது. 2024 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் தங்கம் மற்றும் ஈகிவிட்டி சந்தைகள் அடைந்த வளர்ச்சியை விட பிட்காயினின் மதிப்பு உயர்ந்துள்ளது. எனவே பிட்காயினில் முதலீடு செய்த பலரும் 2024 ஆம் ஆண்டில் பெரிய அளவிலான லாபத்தை கண்டனர்.

பிட்காயினில் இனி முதலீடு செய்யலாமா..? 1.50 லட்சம் டாலரை எட்டுமாம்.. வந்தது பலே கணிப்பு..!

ஆனால் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் பிட்காயின் மதிப்பு சற்றே குறைந்தது. அதேபோல டாக் காயின் மதிப்பு 2024 ஆம் ஆண்டில் 253 சதவீதம் உயர்ந்தது. எரித்ரியம் உள்ளிட்ட பல்வேறு கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பும் 2024இல் வளர்ச்சி கண்டன. இந்த நிலையில் 2025-லும் இதே நிலை நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்ற பிறகு கிரிப்டோ கரன்சி சம்பந்தமாக ஏதேனும் அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்ப்பு நிலவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

டிரம்ப் ஏதேனும் அறிவிப்பு வெளியிட்டால் அதற்கு ஏற்றபடி பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பில் ஏற்ற இறக்கங்களை காண முடியுமாம். 2025 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகள் தொடர்பான பல்வேறு ஒழுங்குமுறை அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என பைனான்ஸ் நிறுவனத்தின் இந்தியாவிற்கான தலைவராக செயல்படக்கூடிய விஷால் சச்சீந்திரன் கூறியுள்ளார்.

இந்தியாவில் நாம் கிரிப்டோ சார்ந்த சில அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கையும் அவர் தெரிவித்துள்ளார். காயின் டிசிஎக்ஸ் நிறுவனத்தின் துணை தலைவர் 2025 ஆம் ஆண்டில் பிட்காயினில் முதலீடு செய்பவர்கள் இந்த முதலீடு குறித்து நன்கு விழிப்புணர்வு பெற்றவர்களாக மாறுவார்கள் என கூறியுள்ளார். பெரும்பாலான முதலீட்டாளர்கள் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்ய தொடங்குவார்கள் என்ற கணிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.

2025 இல் கிரிப்டோ கரன்சி சந்தை போட்டி மிகுந்தவை ஆகவும் நல்ல வளர்ச்சி அடையும் சந்தையாகவும் மாறும் என பெரும்பாலான நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்கா சந்தையில் கிரிப்டோ கரன்சி சார்ந்த ஈடிஎஃப்- கள் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்துகின்றன, மற்ற சந்தைகளிலும் இது போன்ற கிரிப்டோ சார்ந்த ஈடிஎஃப்களை காண முடியும் என்கின்றனர். குறிப்பாக 2025ஆம் ஆண்டில் பிட்காயினின் மதிப்பு 1.50 லட்சம் டாலர் முதல் 2 லட்சம் டாலர் வரை செல்லலாம் என்ற கணிப்பையும் வெளியிடுகின்றனர்.

Story Written By: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+