ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவு எங்கே இருக்கிறது என்பதை துல்லியமாக பார்க்கும் நாம், அரசு நமக்குத் தர வேண்டிய பணத்திற்காக மட்டும் ஏன் வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டும். இந்த நியாயமான கேள்வி தான் தற்போது இந்திய வரி செலுத்துவோரின் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
வரவிருக்கும் 2026ம் ஆண்டு பட்ஜெட்டில், நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று, ரியல் டைம் இன்கம் ரீஃபண்ட் டிரக்கர் (Real Time Refund Tracker) அறிமுகம் செய்யப்படுமா என்பது தான். தற்போதைய நிலையில் ரீஃபண்ட் எப்போது வரும், அது எங்கே சிக்கியுள்ளது என்பதை அறிவதில் நிலவும் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, இந்த வசதி வந்தால் நன்றாக இருக்கும் என பல தரப்பினரும் வலியுறுத்துகின்றனர். ஸ்விக்கி, அமேசான் போல உங்கள் ரீஃபண்ட் நிலையானது ஒவ்வொரு நிலையையும் கடந்து வருவதை, உங்கள் ஸ்மார்ட்போனிலேயே பார்த்தால் எப்படி இருக்கும், டிஜிட்டல் இந்தியாவில் இந்த மாற்றமானது பட்ஜெட் 2026ல் சாத்தியமாகுமா? இதனால் என்ன பலன், விரிவாக பார்க்கலாம்.

ஏன் இது அவசியம்?
ரியல் டைம் இன்கம் ரீஃபண்ட் டிரக்கர் ஆனது உங்கள் பணம் தற்போது எந்தத் துறையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ள உதவும். அதோடு பணம் வருமா, வராதா என்ற பதற்றமும் குறையும். மேலும் உங்கள் அணுகலில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலும், அதை உடனடியாக கண்டறிந்து சரி செய்ய முடியும். மொத்தத்தில் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும். இதனால் விரைவில் கிடைக்கவும் உதவிகரமாக இருக்கும். தேவையற்ற நேரங்களை குறைக்கவும் உதவிகரமாக இருக்கும்.
என்னென்ன வசதிகள்?!
நடப்பு ஆண்டில் வருமான வரித் தாக்கல் மற்றும் ரீஃபண்ட் நடைமுறையில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. இது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக ரீஃபண்டுகளில் தாமதம் பற்றி பலரும் குமுறியுள்ளனர். வழக்கமான வருமான வரி தாக்கல் செய்த சில வாரங்களில் ரீஃபண்ட் வந்துவிடும். ஆனால் இந்த ஆண்டு பல மாதங்கள் ஆகியும் பலருக்கும் இன்னும் பணம் வந்து சேரவில்லை என கூறப்படுகிறது. இதற்கு வருமான வரித்துறையின் புதிய தொழில்நுட்பங்கள் என்றும், சரிபார்ப்பு முறைகளில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணம் என கூறப்படுகிறது. இதுபோன்ற பிரச்சனைகளை களைந்து, வரும் பட்ஜெட் 2026ல் ஒரு லைவ் ரீஃபண்ட் டிரக்கர் வசதியைக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் குறிப்பிட்ட காலக்கெடுவை தாண்டியும் ரீஃபண்ட் வராதவர்கள் புகார் அளிக்கவும் வசதிகள் செய்யப்பட வேண்டும். ரீஃபண்ட் நிலையில் மாற்றங்கள் செய்யப்படும் போது, தானாகவே எஸ்.எம்.எஸ் அல்லது மெயில் மூலமாக வரி செலுத்துவோருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்துள்ளன. உண்மையில் இதுபோன்ற வசதிகள் இருந்தாலும், வரி செலுத்துவோர் எதற்கும் பதற்றமடைய தேவையில்லை.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications